எங்க காட்டுல மழை

2018 திரைப்படம்

எங்க காட்டுல மழை (Enga Kattula Mazhai) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஸ்ரீ பாலாஜி இயக்கிய இப்படத்தில் மிதுன் மகேஸ்வரன், சுருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எங்க காட்டுல மழை
இயக்கம்ஸ்ரீ பாலாஜி
தயாரிப்புசி. ராஜா
இசைஸ்ரீவிஜய்
நடிப்பு
கலையகம்வாலி பிலிம் விஷன்ஸ்
வெளியீடு3 ஆகத்து 2018 (2018-08-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

இந்த படத்தை குள்ளநரி கூட்டம் புகழ் ஸ்ரீ பாலாஜி இயக்கியுள்ளார். குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த அப்புக்குட்டி இந்த படத்திலும் நடித்துள்ளார். ராம நாராயணன் தயாரித்த இந்தப் படத்தில் கோல்டன் ரெட்ரீவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணனின் முந்தைய படமான மெர்சல் (2017) படத்தின் வெளியீடு தாமதமானது.[1]

இசை தொகு

இப்படத்திற்கு ஸ்ரீவிஜய் இசையமைத்துள்ளார்.[2]

வெளியீடு தொகு

இந்தப் படம் 2018 ஆகத்து 8 அன்று மற்ற எட்டு தமிழ் படங்களுடன் வெளியானது [3]

டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்று என்ற மதிப்பீட்டை வழங்கியது மேலும் "ஒரு பொதுவான நகைச்சுவை பரபரப்பூட்டும் படமான, எங்க காட்டுல மழை தேய்வழக்குகளால் நிரம்பியுள்ளது. மிகவும் யூகிக்கக்கூடிய கதையாக உள்ளது" என்று எழுதினார்.[4] சினிமா எக்ஸ்பிரஸ் படத்திற்கு அதே மதிப்பீட்டை அளித்தது. மேலும் இப்படமானது "தேடினேன் வந்தது படத்தின் கதையின் மோசமான தழுவல் ஆகும். இது சிரிப்பை வரவழைக்கவில்லை" என்று குறிப்பிட்டது.[5]

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_காட்டுல_மழை&oldid=3743995" இருந்து மீள்விக்கப்பட்டது