எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு
சார்லசு II (Charles II,எசுப்பானியம்: Carlos II) (6 நவம்பர் 1661 – 1 நவம்பர் 1700) ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய அரசராவார். எசுப்பானிய நெதர்லாந்தும் (தெற்கு நெதர்லாந்து) அமெரிக்காக்களிலிருந்து எசுப்பானியக் கிழக்கிந்தியா வரை பரவியிருந்த எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசும் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது. "மயக்குபவர்" (எசுப்பானியம்: el Hechizado),[1] என்றழைக்கப்பட்ட சார்லசு அவரது உடல்,அறிவு, உளக் குறைபாடுகளுக்காக அறியப்பட்டார். பல தலைமுறைகளாக ஆப்சுபர்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் புரிந்து வந்தமையால் இக்குறைபாடுகள் இவருக்கு வந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இவரது ஆட்சி பலவீனமாக இருந்தது.
சார்லசு II | |
---|---|
யுவான் கார்ரெனோ டெ மிராண்டா வரைந்த ஓவியம், 1685 | |
padding-top:0.2em
| |
ஆட்சிக்காலம் | 17 செப்டம்பர் 1665 – 1 நவம்பர் 1700 |
முன்னையவர் | எசுப்பானியாவின் நான்காம் பிலிப்பு |
பின்னையவர் | எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு |
பிரதிநிதி | ஆத்திரியாவின் மாரியானா (1665–75) |
பிறப்பு | மத்ரித் அரச மாளிகை, எசுப்பானியா | 6 நவம்பர் 1661
இறப்பு | 1 நவம்பர் 1700 அரச மாளிகை, மத்ரித், எசுப்பானியா | (அகவை 38)
புதைத்த இடம் | எல் எசுகோரியல், எசுப்பானியா |
துணைவர் | மாரி லூயி தொர்லியன்சு நெபர்கின் மாரியா அன்னா |
மரபு | ஆப்சுபர்கு அரசமரபு |
தந்தை | எசுப்பானியாவின் நான்காம் பிலிப்பு |
தாய் | ஆத்திரியாவின் மாரியானா |
மதம் | கத்தோலிக்க திருச்சபை |
கையொப்பம் |
1700இல் குழந்தைகளின்றி வாரிசின்றி இறந்தார். அரியணை ஏறுவதற்கு உரிமையிருந்த அனைத்து ஆப்சுபர்கு வாரிசுகளும் இவருக்கு முன்னரே மரித்து விட்டனர். தனது உயிலில் தனக்குப் பின்னால் 16 வயதேயான ஆன்ஷூவின் பிரபு பிலிப்பை முடிசூட நியமித்தார்; இவர் பதினான்காம் லூயியின் முதல் மனைவியும் சார்லசின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மாரியா தெரசாவின் பேரனாவார்.[2] (எனவே பிரான்சை ஆண்ட பிரான்சிய அரசர் லூயி XIVயின் பேரனுமாவார்). ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் இதனால் வலுப்பெறும் பிரான்சிய-எசுப்பானிய உறவு அதிகாரச் சமநிலையை பாதிக்கும் எனக் கருதின. எனவே இவரது மறைவிற்குப் பிறகு எசுப்பானிய மரபுரிமைப் போர் ஏற்பட்டது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "A History of Spain and Portugal, v. 1". Chapter 15, "The Seventeenth Century Decline". pp. Payne, Stanley. பார்க்கப்பட்ட நாள் July 7, 2013.
- ↑ Kamen, Henry. "Philip V of Spain: The King who Reigned Twice", Published by Yale University Press, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-08718-7
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.