எசு. ஆர். இரமணன்

எசு. ஆர். இரமணன் (S. R. Ramanan) என்பவர் இந்திய வானிலை ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள சூறாவளி எச்சரிக்கை மையத்தின் மேனாள் இயக்குநர் ஆவார்.[1][2][3] சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தத்தெடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார்.[4] காலநிலை குறித்த இவருடைய தனித்தன்மையான அறிவிப்பின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். இரமணன் 36 ஆண்டுகள் வானிலை ஆய்வாளராக இருந்து ஜூலை 2016-ல் ஓய்வு பெற்றார்.[5] இவர் பெரும்பாலும் "மழை நாயகன் இரமணன்", "மழையின் வார்த்தை", "மாணவர்களின் கடவுள்", "மழையின் மகாத்மா", "கடலோர மாவட்ட கடவுள்" மற்றும் "மின்னலின் ஜன்னல்" என்று அழைக்கப்படுகிறார்.[6][7]

கல்வி

தொகு

எறையூர் கிராமத்தில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியினை முடித்த இரமணன், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் வேளாண் காலநிலையியல் துறையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

தொழில்

தொகு

இரமணன் 1980ல் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் பணியில் சேர்ந்தார். புது தில்லியில் உள்ள வடக்கு அரைக்கோள ஆய்வு மையத்திலும், சென்னை விமான நிலையத்தின் விமான வானிலை ஆய்வு மையத்திலும் முன்னறிவிப்பாளராக பணியாற்றினார். பின்னர், 1995-ல் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பை நிறுவும் போது அதில் தீவிரமாக பணியில் ஈடுபட்டார். 2002-ல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.[சான்று தேவை] . இவர் சென்னையில் உள்ள மண்டல வானிலை மையத்தில் உள்ள பகுதி புயல் எச்சரிக்கை மையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 2006-ல் பன்னாட்டு சுழற் சங்கம் வழங்கும் "கௌரவ விருது" பெற்றார். பசுமை இல்ல வாயுக்கள் தொடர்பாக 1998ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற நிகழ்வில் இவர் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். மே 2013-ல் பாங்காக்கில் கடலோர அபாயங்களுக்கான ஒருங்கிணைந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாக இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

பணி ஓய்வு

தொகு

இரமணன் 2016 மார்ச் 31 அன்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார்.[8]

ஆதாரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "OFFICE OF THE DEPUTY DIRECTOR G". www.imdchennai.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  2. Srinivasa Ramanujam. "Rain man Ramanan". The Hindu.
  3. "Rains give weatherman a hero's status in Tamil Nadu". timesofindia-economictimes.
  4. "Academics". www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
  5. "Ramanan, director of area cyclone warning centre in Chennai, retires - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
  6. Karthikeyan Hemalatha (31 March 2014). "Ramanan, director of area cyclone warning centre in Chennai, retires". The Times of India.
  7. "Why does Chennai love the 'Rain God' SR Ramanan?". CatchNews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
  8. K, Lakshmi. "'Rain man' Ramanan to retire on March 31". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._ஆர்._இரமணன்&oldid=3364825" இலிருந்து மீள்விக்கப்பட்டது