எசு. கேமலதா தேவி
எசு. கேமலதா தேவி (S. Hemalatha Devi)(பிறப்பு 10 செப்டம்பர் 1922) என்பவர் இந்திய விடுதலை இயக்க ஆர்வலர், சமூக சேவகர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை சட்டமன்றத்தில் பென்னாகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் (1957-62).
எசு. கேமலதா தேவி S. Hemalatha Devi | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், பென்னாகரம் | |
பதவியில் 1957–1962 | |
முன்னையவர் | எசு. கந்தசாமி கவுண்டர் |
பின்னவர் | மா. வெ. கரிவேங்கடம் |
பெரும்பான்மை | 3,255 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 செப்டம்பர் 1922 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகேமலதா தேவி 10 செப்டம்பர் 1922-ல் பிறந்தார்.[1]
தொழில்
தொகுகேமலதா தேவி இந்தியத் தேசிய காங்கிரசின் ஆரம்பக் கட்டத்தில் அதன் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் இந்தியத் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கேமலதா 1949-ல் சேலம் மாவட்ட வாரிய உறுப்பினரானார். ஏழு ஆண்டுகள், சேலம் இந்திய மகளிர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி, பின்னர் அதன் துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தமிழ்நாட்டிலுள்ள அகில இந்திய மகளிர் மாநாட்டுக் கிளையின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.[1]
1957ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரத்தில் இருந்து இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தேவி வெற்றி பெற்றார். இவர் 3,255 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார்[2] இருப்பினும், இவர் 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளரான எம். வி. கரிவேங்கடத்திடம் தோல்வியடைந்தார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகேமலதா தேவிக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Tamil Nadu Legislative Assembly—Who's Who 1957 (PDF). Chennai, Tamil Nadu: Government of Tamil Nadu. 1957. p. 25. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "Statistical Report on General Election, 1957 to the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. p. 54. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "Statistical Report on General Election, 1962 to the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.