மா. வெ. கரிவேங்கடம்
மா. வெ. கரிவேங்கடம் (M. V. Karivengadam)(பிறப்பு சூலை 5, 1928) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியினைச் சார்ந்தவர். இவர் தர்மபுரி கழக உயர்நிலைப் பள்ளியிலும் சேலம் ஊராட்சிக் கலைக் கல்லூரியிலும் சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினைப் பயின்றுள்ளார். வழக்குரைஞரான கரிவேங்கடம், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1962 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக முறையே பென்னாகரம் மற்றும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக தொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1962 | பென்னாகரம் | திமுக | 26,911 | 51.70 |
1971 | பாலக்கோடு | திமுக | 32,378 | 48.48 |