எசு. சோமநாத்
எசு. சோமநாத் (S. Somanath) என்பவர் இந்திய விண்வெளி பொறியாளர் மற்றும் ஏவூர்தி தொழில்நுட்பவியலாளர் ஆவார். ஜனவரி 2022-ல், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராக கை. சிவனுக்குப் பிறகு சோம்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, சோம்நாத் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குநராகவும்,[1] திருவனந்தபுரம் திரவ இயக்கத் திட்ட மையத்தின் (LPSC) இயக்குநராகவும் பணியாற்றினார்.[2] சோமநாத், வாகன வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதில், குறிப்பாக ஏவுகணை அமைப்பு பொறியியல், கட்டமைப்பு வடிவமைப்பு, கட்டமைப்பு இயக்கவியல் மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகிய துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.
எசு. சோமநாத் | |
---|---|
தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 சனவரி 2022 | |
முன்னையவர் | கைலாசவடிவு சிவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
கல்வி |
|
இவர் ஏவுகணை வாகனங்கள் மற்றும் ஜிசாட்-எம்கேஐஐ (எப்09) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், ஜிசாட்-6ஏ மற்றும் பிஎஸ்எல்வி-சி41 தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களை மேம்படுத்தும் ஆய்வில் கவனம் செலுத்துகிறார்.[3][4]
கல்வி
தொகுசோமநாத் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில், பல்கலைக்கழக முன் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், கொல்லத்தில் உள்ள த. கு மு. பொறியியல் கல்லூரியில், இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
விண்வெளி ஆய்வுப் பணி
தொகுபட்டம் பெற்ற பிறகு, சோமநாத் 1985-ல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் சேர்ந்தார். முனையத் துணைக்கோள் ஏவுகலன் (PSLV) திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் பணியில் ஈடுபட்டார். பின்னர் இம்மையத்தின் இணை இயக்குநராகவும் (திட்டங்கள்) 2010-ல் ஜி. எஸ். எல். வி. மார்க் III ஏவுகணை வாகனத்தின் திட்ட இயக்குநராகவும் ஆனார். இவர் நவம்பர் 2014 வரை துணை இயக்குநராக உந்துதல் மற்றும் விண்வெளி கட்டளை நிறுவனத்தில் பணியாற்றினார்.[3]
ஜூன் 2015-ல், இவர் திருவனந்தபுரம் வலியமலையில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் (LPSC) இயக்குநராகப் பொறுப்பேற்று, ஜனவரி 2018 வரை இங்கு பணியாற்றினார். சோமநாத் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான கை. சிவனிடமிருந்து அப்பொறுப்பினைப் பெற்றார். மீண்டும் கை. சிவனின் பதவிக்காலம் சனவரி 14, 2022 முடிவதையடுத்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராகப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
விருதுகள்
தொகுசந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியமைக்கு அக்டோபர் 2024ல் உலக விண்வெளி விருது வழங்கப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Somanath takes charge as VSSC director". www.indiatoday.in. 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.
- ↑ "Somanath takes charge as VSSC director". www.business-standard.com. 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.
- ↑ 3.0 3.1 "New Directors for Three Major ISRO Centres: Three major ISRO Centres have new Directors from today". www.isro.gov.in. 1 June 2015. Archived from the original on 23 January 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.
- ↑ Prasanna, Laxmi (22 January 2018). "S Somnath takes charge as Vikram Sarabhai Space Centre's director". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 19 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது: சந்திரயான் 3 திட்ட பணிகளுக்காக அங்கீகாரம்