எச்செலான் பாசறை
எச்செலோன் பாசறை (Echelon Barracks) என்பது இலங்கையின் கொழும்பில் கொழும்பு கோட்டையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஒரு இராணுவப் பாசறை ஆகும். விடுதலைக்குப் பிறகு இது புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வசம் வந்தது.
எச்செலான் பாசறை Echelon Barracks | |
---|---|
கொழும்பு | |
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா, எச்சிலோன் சதுக்கத்தில் உள்ள சிஎல்ஐயின் 1வது படைப்பிரிவுக்குச் சென்று, இலகு இயந்திரத் துப்பாக்கிகளைக் கையாள்வதில் தன்னார்வத் தொண்டர்கள் பயிற்சி பெறுவதைப் பார்க்கிறார். | |
இலங்கையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 6°55′56″N 79°50′39″E / 6.93222°N 79.84417°E |
வகை | தலைமையக கட்டடம் |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1880s |
பயன்பாட்டுக் காலம் |
1880கள் – 1970கள் |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | இலங்கை பீரங்கிப்படை |
வரலாறு
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய இலங்கையின் இராணுவப் படையின் தலைமையகமாக இது கட்டப்பட்டது. இந்த முகாம் இரண்டு-அடுக்கு பாசறைத் தொகுதிகளால் ஆனது. இது பரந்த வராந்தாக்கள், பல கால்பந்து, ஆக்கி ஆடுகளங்களுடன் போதுமான பெரிய அணிவகுப்பு மைதானத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. இதன் அணிவகுப்பு மைதானம் எச்செலோன் சதுக்கம் என்ற பெயரைப் பெற்றது. அது அப்போதைய பழைய நாடாளுமன்றத்தை (இப்போதய ஜனாதிபதி செயலகம்) ஒட்டியுள்ளது. இது 1963 வரை இலங்கை பீரங்கிப் படையணியின் தலைமையகமாக இருந்தது. 1970 களின் முற்பகுதியில், வணிக வளர்ச்சிக்குத் தோதாக படைமுகாம் இடிக்கப்பட்டது.[1]
1997 முதல் கொழும்பு உலக வர்த்தக மையம் எச்சலான் சதுக்கத்தில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Letters". Burnley Express. 31 August 2005. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
- ↑ Raven, Ellen (2010). ABIA: South and Southeast Asian Art and Archaeology Index: Volume Three. Brill. p. 634. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004191488. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.