எச்டி 156668பி
HD 156668b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்
தாய் விண்மீன்
விண்மீன் எச்டி 156668
விண்மீன் தொகுதி ஹெர்க்குலீசு
வலது ஏறுகை (α) 17h 17m 40s
சாய்வு (δ) +29° 13′ 38″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 8.42
தொலைவு78.5 ± 2.0 ஒஆ
(24.1 ± 0.6 புடைநொடி)
அலைமாலை வகை K2
இருப்புசார்ந்த இயல்புகள்
மிகக்குறைந்த திணிவு(m sin i)4.15 M
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.05 AU
மையப்பிறழ்ச்சி (e) 0
சுற்றுக்காலம்(P)~4.6455 நா
(~0.01272 )
சுற்றுக்காலம் (υ) ~120 கிமீ/செ]]
Semi-வீச்சு (K) 1.89 மீ/செ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 2010, ஜனவரி 7
கண்டுபிடிப்பாளர்(கள்) ஜோன் ஜோன்சன்,
அண்ட்ரூ ஹவார்ட்,
ஜெஃப் மார்சி,
ஜேசன் ரைட்,
டெப்ரா பிஷர்
கண்டுபிடித்த முறை தொப்பிளர் நிறமாலையியல்
கண்டுபிடித்த இடம் கெக் வானியல் அவதானநிலையம்
கண்டுபிடிப்பு நிலை சமர்ப்பிக்கப்பட்டது
வேறு பெயர்கள்
BD+29°2979 b, HIP 84607 b
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

எச்டி 156668பி (HD 156668 b) என்பது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே 78.5 ஒளியாண்டுகள் தூரத்தில் எச்டி 156668 என்ற தனது விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் ஆகும். இது ஹேர்க்குலீசு என்ற நாள்மீன் பேரடையில் காணப்படுகிறது. இதன் மிகக்குறைந்தளவு திணிவு பூமியை விட 4.15 மடங்கு. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் இதுவே இரண்டாவது மிகச்சிறிய திணிவுள்ள கோள் ஆகும்[1]. இதனை விடச் சிறிய புறக்கோள் கிளீசு 581 e பூமியை விட 1.94 மடங்கு திணிவுடையது 2009 ஏப்ரல் 21 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

எச்டி 156668பி புறக்கோள் 2010, ஜனவரி 7 ஆம் நாள் கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள "கெக் 1" என்ற அதிஉணர்வுத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தனர்[2]. கெப்லரின் தொலைக்காட்டி மூலம் 2010, ஜனவரி 4 ஆம் நாள் ஐந்து வெளிக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_156668பி&oldid=3354788" இலிருந்து மீள்விக்கப்பட்டது