எச். சி. எல். டெக்னாலஜிஸ்

மென்பொருள் நிறுவனம்.

எச். சி. எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு உலகளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம், இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், பொறியியல் நுட்பங்கள், ஆய்வுசார் சேவைகள், போன்றவற்றை வழங்குகிறது. [2]

எச். சி. எல். டெக்னாலஜிஸ், சோழிங்கநல்லூர், சென்னை
எச். சி. எல். டெக்னாலஜிஸ்
HCL Technologies Ltd
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1991
நிறுவனர்(கள்)சிவ நாடார்
தலைமையகம்நொய்டா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்சிவ நாடார் (சேர்மன்)[1]
அனந்த் குப்தா (பிரசிடென்ட்)
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவைகள், தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள்
சேவைகள்ஐ.டி, வணிக ஆலோசனைகள், வெளிக்கொள்முதல் சேவைகள்
பணியாளர்1,97,777 (2021)
பிரிவுகள்எண்டர்பிரைஸ் அப்ளிகேசன் சர்வீசஸ்
கஸ்டம் அப்ளிகேசன் சர்வீசஸ்
ஆய்வுசார் வளர்ச்சி சேவைகள்
வணிக சேவைகள்
இணையத்தளம்www.hcltech.com

இது 31 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. வானூர்தியியல், இராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள், மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தொழில் செய்கிறது.[3]

ஃபோர்ப்ஸ் நாளேடு உலகளவில் 2000 நிறுவனங்களை பட்டியலிட்டது. அந்த பட்டியலில் இதுவும் இடம்பெற்றது.[4]இது ஆசிய அளவில் ஐம்பது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றது. [5]

விருதுகளும் அங்கீகாரங்களும்

தொகு
  • புளூம்பெர்க் பிசினஸ் வீக் என்ற பத்திரிக்கையால் "அதிக தாக்கத்தை கொண்ட முன்னணி நிறுவனங்கள்" என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலிலும் இந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றது.[6] is considered ‘disruptive’ by IDC;[7]
  • வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை, நம்பிக்கைக்குரிய 10 நிறுவனங்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலிலும் எச். சி. எல் நிறுவனம் இடம்பெற்றது. [8]

செயல்பாடுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Fast Facts". HCL Technologies. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
  2. "HCL to take care of US energy firm customers". பிசினஸ் ஸ்டாண்டர்ட். September 4, 2013. http://www.business-standard.com/article/news-ians/hcl-to-take-care-of-us-energy-firm-customers-113090400790_1.html. 
  3. Building a Reservoir of Strategic Competencies That Will Develop and Engage Leaders for the Future (PDF) (Report). Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  4. "The World's Biggest Public Companies". ஃபோர்ப்ஸ். May 2013 இம் மூலத்தில் இருந்து 2014-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141209013957/http://www.forbes.com/global2000/list/.html. 
  5. "Asia's Fab 50 Companies". Forbes. August 2013. http://www.forbes.com/fab50/list/. 
  6. "The World's Most Influential Companies". பிசினஸ் வீக் இம் மூலத்தில் இருந்து 2014-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141113004636/http://images.businessweek.com/ss/08/12/1211_most_influential/26.htm. 
  7. காப்பகப்படுத்தப்பட்ட நகல் (PDF) (Report). Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
  8. Outlook for Outsourcing Spending Brightens. WSJ (Report). 28 May 2009.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._சி._எல்._டெக்னாலஜிஸ்&oldid=3451581" இலிருந்து மீள்விக்கப்பட்டது