எச். ஜே. கனியா

எச். ஜே. கனியா (Sir Harilal Jekisundas Kania நவம்பர் 3, 1890--நவம்பர் 6, 1951) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதன் முதலாக அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஆவார்.[1]

எச். ஜே. கனியா
Justice H. J. Kania.jpg
1951 இல் நீதிபதி கனியா
முதல் இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
ஜனவரி 26, 1950 – நவம்பர் 6, 1951
நியமித்தவர் இராசேந்திர பிரசாத்
பின்வந்தவர் பதஞ்சலி சாஸ்திரி
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 3, 1890
சூரத்து, பிரித்தானிய இந்தியா
இறப்பு 6 நவம்பர் 1951(1951-11-06) (அகவை 61)
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு சட்டக் கல்லூரி, மும்பை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
சமயம் இந்து சமயம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

குசராத்து மாநிலத்தில் சூரத்தில் பிறந்த இவருடைய தாத்தா ஆங்கில அரசில் வருவாய்த் துறை அதிகாரியாகவும், தந்தையார் சமசுக்கிருத பேராசிரியராகவும் இருந்தார்கள். கனியா பாவ் நகரில் உள்ள சமல்தாசு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் எல். எல். பி. மற்றும் எல். எல். எம். ஆகிய சட்டக் கல்வியை முடித்தார். 1915 இல் மும்பை உயர்நீதி மன்றத்தில் பாரிஸ்டராகத் தொழில் தொடங்கினார். 1930 இல் மும்பை உயர்நீதி மன்றத்தில் தற்காலிக நீதிபதியாகவும் பின்னர் கூடுதல் நீதிபதியாகவும் ஆனார். 1947 இல் மும்பை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியாக ஆனார்.

இந்திய நாடு 1950 சனவரி 26 ஆம் நாள் குடியரசு ஆனதும் இந்திய அரசு கனியாவை இந்திய உச்சநீதி மன்ற முதன்மை நீதிபதியாக அமர்த்தியது. குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் கனியாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியில் இருக்கும்போதே மாரடைப்பால் கனியா காலமானார்[2].

மேற்கோள்தொகு

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஜே._கனியா&oldid=2854649" இருந்து மீள்விக்கப்பட்டது