எச் டி 189733 பி

எச் டி 189733 பி
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

2011ல் எச் டி 189733 பி நீல நிறம் உடையது
என அறிந்த பின் உருவாக்கப்பட்ட கற்பனை

2013ல் எச் டி 189733 பி நீல நிறம் உடையது என

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

மூலம் உறுதி செய்யப்பட்டது.
தாய் விண்மீன்
விண்மீன் எச் டி 189733 எ
விண்மீன் தொகுதி ஜம்புகன்
வலது ஏறுகை (α) 20h 00m 43.71s[1]
சாய்வு (δ) +22° 42′ 39.1″[1]
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 7.66
தொலைவு63.4 ± 0.9[1] ஒஆ
(19.5 ± 0.3[1] புடைநொடி)
அலைமாலை வகை K1-K2V
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.03099 ± 0.0006 AU
Periastron (q) 0.03096 AU
Apastron (Q) 0.03102 AU
மையப்பிறழ்ச்சி (e) 0.0010 ± 0.0002
சுற்றுக்காலம்(P)2.2185733 ± 0.00002 நா
சுற்றுக்காலம் (υ) 152.5 கிமீ/செ]]
சாய்வு (i) 85.76 ± 0.29°
Time of கடப்பு (Tt) 2,453,988.80336 ± 0.00024 யூநா
Semi-வீச்சு (K) 205 ± 6 மீ/செ
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)1.162+0.058/-0.039 MJ
ஆரை(r)1.138 ± 0.027 RJ
மேற்பரப்பு ஈர்ப்பு(g)21.2 மீ/செ²
வெப்பநிலை (T) 1117 ± 42 கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 5 அக்டோபர் 2005
கண்டுபிடிப்பாளர்(கள்) Bouchy et al.
கண்டுபிடித்த முறை Doppler spectroscopy
Transit
கண்டுபிடித்த இடம் Haute-Provence Observatory
கண்டுபிடிப்பு நிலை உறுதி செய்யப்பட்டது
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

எச் டி 189733 பி(HD 189733 b) என்பது ஒரு புறக்கோள் ஆகும்.இது சூரியக் குடும்பத்திலிருந்து தோரயமாக 63 ஒளியாண்டுகள் தூரத்தில் ஜம்புகன்(நரி) என்ற விண்மீன் குழாமத்தில் உள்ளது. இந்த புறக்கோள் பிரான்சில் , வானியல் நிபுனர்களால் எச் டி 189733 எ என்ற விண்மீனை கடந்து செல்லும் போது 5 அக்டோபர் 2005 ஆம் தேதி கண்டறியப்பட்டது [2].இதன் திணிவு அல்லது நிறை வியாழனை (கோள்) விட 13% அதிகம்.இது தனது விண்மீனான எச் டி 189733 எ வை வினாடிக்கு 152.5 கி.மீ சுற்றுப்பாதை வேகத்தில் அதற்கு அருகிலேயே சுற்றி வருகிறது.இதனால் இதன் வெப்பம் மிக அதிகமாக உள்ளது.எனவே இந்தக் கோளை சூடான வியாழனை போன்ற கோள்கள் என்ற புறக்கோள்களின் வகையில் சேர்க்கிறார்கள்.இதன் அதிக வெப்பம் காரனமாக இதில் வேற்றுலக உயிரிகள் வாழ்வதற்கான வாய்ப்புகளை குறைவாக பெற்றதாகவும் அமைந்துள்ளது. மற்ற சூடான வியாழனை போன்ற கோள்களுடன் ஒப்பிடுகையில், இது புவிக்கு மிக அருகில் உள்ளதால், இதன் வளிமண்டல அமைப்பு பற்றி விரிவாக ஆரயப்படுகிறது.இந்த புறக்கோளுக்குத்தான் முதன் முதலில் வெப்ப வரைபடம் வரையப்பட்டுள்ளது. [3]மேலும் இது அடர் நீல நிறம் உடையது எனவும்[3][4]இதன் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளதாகவும் இப்போது கண்டறிந்துள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்_டி_189733_பி&oldid=1935939" இலிருந்து மீள்விக்கப்பட்டது