எடித் தர்காம்

பிரித்தானிய கலைஞர்

மேரி எடித் தர்காம் (Mary Edith Durham) (8 டிசம்பர் 1863 - 15 நவம்பர் 1944) ஒரு பிரிரித்தானிய கலைஞரும், மானுடவியலாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அல்பேனியாவில் வாழ்க்கையின் மானிடவியல் கணக்குகளுக்கு மிகவும் பிரபலமானவர். அல்பேனிய பிரச்சினைகளுக்காக இவர் வாதிட்டதும், அல்பேனிய ஈடுபாடும் இவரை பல அல்பேனியர்களிடையே ஒரு தேசிய கதாநாயகியாகக் கருத வைத்தது .

எடித் தர்காம்
1880களில் எடித் தர்காம்
முழுப் பெயர்எடித் தர்காம்
பிறப்புமேரி எடித் தர்காம்
8 திசம்பர் 1863
இலண்டன், பெரிய பிரித்தானிய இராச்சியம்
இறப்பு15 நவம்பர் 1944(1944-11-15) (அகவை 80)
பிரதான விருப்புஅல்பேனிய வரலாறு, பண்பாடு
Major worksஹை அல்பேனியா
தாக்கம்
  • இராபர்ட் எல்சே

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இலண்டனில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ஆர்தர் எட்வர்ட் தர்காம் என்பவருக்கு ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். பெட்ஃபோர்ட் கல்லூரியில் (1878-1882) படித்தார். அதைத் தொடர்ந்து அரச கழகத்தின் ஓவியக் கல்லூரியில் ஒரு ஓவியராகப் பயிற்சி பெற்றார். 1899 இல் வெளியிடப்பட்ட கேம்பிரிட்ஜ் நேச்சுரல் ஹிஸ்டரி (1899 இல் வெளியிடப்பட்டது) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நீர்வீழ்ச்சி மற்றும் ஊர்வனங்களின் தொகுதியில் இவர் பரவலாக காட்சிப்படுத்தினார். மேலும், பல விரிவான வரைபடங்களையும் வழங்கினார். [1]

பால்கன் பயணங்கள் தொகு

தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இது ஒரு சோர்வுற்ற அனுபவத்தை தந்தது 37 வயதாக இருந்தபோது, தாய் குணமடைய ஒரு வெளிநாட்டு விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தார். [2] தால்மேசியாவின் கடல் வழியாக ஒரு பயணத்தை மேற்கொண்டார் பின்னர் மாண்டினீக்ரோவின் தலைநகரான செடின்ஜேவுக்கு தரைவழியாகப் பயணம் செய்தார். இது தெற்கு பால்கன் வாழ்க்கையின் சுவையை இவருக்கு அளித்தது, அதை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டார். இலண்டனுக்குத் திரும்பிய இவர் செர்பிய மொழி மற்றும் பிராந்தியத்தின் வரலாற்றைப் படித்தார். [2]

1904 இல் இலண்டனில் வெளியிடப்பட்ட த்ரூ தி லாண்ட்ஸ் ஆஃப் தி செர்பியர்கள் என்ற தனது முதல் புத்தகத்தை எழுதுவதற்காக பால்கனில் விரிவாகப் பயணம் செய்தார். 1908 ஆம் ஆண்டில், மொண்டெனேகுரோவிலிருந்து சுகோத்ரா வரை அல்பேனிய மலைப்பகுதிகள் வழியாகப் பயணம் செய்த பிறகு ஹை அல்பேனியா என்ற நூலை எழுதினார்.[2] அடுத்த இருபது ஆண்டுகளில் இவர் ஐரோப்பாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றாக இருந்த அல்பேனியாவில் குறிப்பாக கவனம் செலுத்தினார். இவர் பல்வேறு நிவாரண அமைப்புகளில் பணிபுரிந்தார். வண்ணம் தீட்டிக் கொண்டே எழுதியும் வந்தார். மேலும் இவர் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற கலைகளையும் சேகரித்தார்.

இவர் மேன்என்ற பத்திரிகையில் அடிக்கடி பங்களித்தார். எவ்வாறாயினும், இவரது எழுத்துக்கள் இவருக்கு குறிப்பிட்ட புகழைப் பெறுவதாக இருந்தன. பால்கன் விவகாரங்கள் குறித்து ஏழு புத்தகங்களை எழுதினார். ஹை அல்பேனியா (1909) என்பது மிகவும் பிரபலமானது. வடக்கு அல்பேனியாவின் மலைப்பகுதிகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூகத்திற்கான முதன்மையான வழிகாட்டியாக இன்றும் கருதப்படுகிறது.

குறிப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. Harry Hodgkinson (2004). "Durham, (Mary) Edith (1863–1944)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  2. 2.0 2.1 2.2 Elsie, R. (2010). Historical Dictionary of Kosovo. Historical Dictionaries of Europe. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-7483-1. https://books.google.com/books?id=Pg-aeA-nUeAC&pg=PA85page=85. 

உசாத்துணை தொகு

The Sarajevo Crime (1925)

  • Some Tribal Origins, Laws and Customs of the Balkans (1928)
  • Albania and the Albanians: selected articles and letters, 1903–1944, ed. by Bejtullah Destani (I.B. Tauris, 2001)
  • The Blaze in the Balkans; selected writings, 1903–1941 edited by Robert Elsie and Bejtullah D Destani (I.B. Tauris, 2014)

மேலும் படிக்க தொகு

  • Mary Edith Durham (2016). Nella Terra del Passato Vivente. La scoperta dell'Albania nell'Europa del primo Novecento. Introduzione, traduzione, note e appendice di Olimpia Gargano. Lecce: Besa. 2016
  • Elizabeth Gowing (2013). Edith and I; on the trail of an Edwardian traveller in Kosovo. Elbow Publishing.
  • Kastriot Frashëri (2004). Edith Durham : një zonjë e madhe për Shqipërinë. Geer.
  • Laura Emily Start (1939). The Durham Collection of Garments and Embroideries from Albania and Jugoslavia. Halifax Corporation
  • Gill Trethowan (1996). Queen of the Mountains: The Balkan Adventures of Edith Durham. British Council.
  • Christian Medawar (1995). Mary Edith Durham and the Balkans, 1900–1914. McGill University. 
  • John Hodgson (2000). "Edith Durham, traveller and publicist". in John B. Allcock, Antonia Young. Black Lambs & Grey Falcons: Women Travellers in the Balkans. Berghahn Books. பக். 9–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781571817440. 
  • Marcus Tanner (2014) Albania's Mountain Queen I.B. Tauris பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780768199

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edith Durham
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_தர்காம்&oldid=3651554" இலிருந்து மீள்விக்கப்பட்டது