எண்ணங்களின் சங்கமம்
எண்ணங்களின் சங்கமம் என்று சுருக்கமாக வழங்கப்படும் என். டி. எஸ். ஓ (NETWORKING AND DEVELOPMENT CENTRE FOR SERVICE ORGANIZATIONS-NDSO ) எனும் அமைப்பு ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் எனப் பலதரப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ள 800 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்த தன்னார்வ இயக்கம்.[1][2]இது, ஒரே சமுதாய சிந்தனை கொண்ட பலவிதமான பின்னணிக் கொண்டோரும் கலந்த அமைப்பாகும். [3]இவ் வமைப்பினர் இணைந்து உரையாடும் நிகழ்ச்சிகளும் ’எண்ணங்களின் சங்கமம்’ என்று வழங்கப்படுகின்றன.
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு. இந்தியா |
---|---|
வேலைசெய்வோர் | அழகர் இராமானுஜம் (தலைவர் மற்றும் பொறுப்பாட்சியர்) என். ஹரிகர சுப்ரமணியன் (நிறுவனர் மற்றும் பொறுப்பாட்சியர்) ஜே. பிரபாகர் (நிறுவனர் மற்றும் மேலாண் பொறுப்பாட்சியர்) |
இணையத்தளம் | http://www.ndsoindia.org/ |
உருவாக்கம்
தொகு2005 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் தொண்டர் சிவராம்ஜி சிந்தனையில் உருவான அமைப்பு இது.[3] இவ்வமைப்பின் நிறுவனர் ஓவியர் ஜெ. பிரபாகர் .[4] மற்றும் தலைவர் அழகர் ராமானுஜம் ஆவார்.[5]
கலந்துரையாடல்கள்
தொகுஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு விழா தவிர சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், திருச்சி, குற்றாலம் எனப் பல இடங்களிலும் இவ்வமைப்பின் உறுப்பு அமைப்பினர் கலந்துரையாடுகின்றனர்.[2]
ஆண்டு விழா
தொகுஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அமைப்புகள் கலந்து தத்தம் ஈடுபாடு சார்ந்த சுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு, சுற்றுச்சூழல், இல்லங்கள் ஆகிய தலைப்புகளில் தங்கள் பணிகள், வருங்காலத்திட்டங்கள், அரசின் விதிமுறைகள் ஆகியவை பற்றி குழுவாக விவாதிக்கின்றனர். இது ஒரு நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. எண்ணங்களின் சங்கமம் அமைப்பு தங்கள் ஒன்பதாவது ஆண்டு விழாவை 15.12.2013 அன்று சென்னை மடத்தில் கொண்டாடியது.[3][6]
விருதுகள்
தொகுஇந்த அமைப்பின் ஆண்டுவிழாக்களின் போது பலநிலைகளில் தொண்டாற்றிய சிறந்த தொண்டர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது பெற்றவர்கள் சிலர்:
- என்.டி.எஸ்.ஓ வின் 2010ஆம் ஆண்டின் சிறந்த சமூக தொண்டர் விருது கே. ஏ. மாணிக்கத்திற்கு வழங்கப்பட்டது.[7]
- 2013 ஆம் வருடத்திற்கான விருது ’ஒரு ரூபாய்க்கு ஒரு உயிர்’ என்ற அமைப்பை உருவாக்கி் இதய அறுவை சிகிச்சைக்கு 1000 பேருக்கு மேல் உதவிய கோயம்புத்தூர் பகுதியின் காஜா மொஹைதீனுக்கு வழங்கப்பட்டது.[3] [4][8]
- சென்னையில் ஜூலை 1, 2014 இல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா சமயம் தங்கள் செயல்களால் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொணரும் நூறு இளைஞர்கள் இவ்வமைப்பின் சார்பில் விருது பெற்றனர்.[4][9]
நூல்கள்
தொகுஇவ் வமைப்பின் ஆண்டுதோறும் விழாவின் போது புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு வெளியிடப்பட்ட சில நூல்கள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ www.dinamani.com/book_reviews/article790839.ece?
- ↑ 2.0 2.1 http://www.ndsoindia.org/
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 http://www.chennaimath.org/wpfb-file/02-sri-ramakrishna-vijayam-feb-2014-pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; பிப்ரவரி 2014; விவேகானந்தரின் மனக்குறையைத் தீர்க்கும் ஒரு முயற்சி; பக்கம் 26,27
- ↑ 4.0 4.1 4.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ http://www.action2020.in/2012/10/j-prabhakar-brought-700-plus-small-ngos.html
- ↑ http://www.theweekendleader.com/Headlines/1771/a-confluence-of-good-hearted-people-in-chennai.html
- ↑ http://www.ndsoindia.org/
- ↑ http://www.theweekendleader.com/Headlines/1771/a-confluence-of-good-hearted-people-in-chennai.html
- ↑ http://www.newindianexpress.com/cities/chennai/Vivekananda-awards-for-youth/2013/07/01/article1660742.ece?
- ↑ www.dinamani.com/book_reviews/article790839.ece?
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரபூர்வ இணையதளம்
- http://www.chennaimath.org/wpfb-file/02-sri-ramakrishna-vijayam-feb-2014-pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; பிப்ரவரி 2014; ராமகிருஷ்ண மிஷனின் இரண்டு பலங்கள் (பக்கம் 21-22); விவேகானந்தரின் மனக்குறையைத் தீர்க்கும் ஒரு முயற்சி(பக்கம் 26-27) கட்டுரைகள்
- http://www.dinamani.com/editorial_articles/2013/12/26/நல்லெண்ணங்கள்-ஒன்றுபடும்ப/article1965394.eceவெளியிணைப்புகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/online-networking-platform-for-social-workers-activists-launched/article4280018.ece
- http://www.dinamalar.com/news_detail.asp?id=873372
- http://www.dinamani.com/tamilnadu/2013/07/02/பிறருக்கு-உதவுவதே-உண்மையான-/article1663094.ece
- http://www.dinamani.com/tamilnadu/2013/07/02/தாய்மொழி-மட்டுமே-ஒருவரின்-அ/article1663102.ece
- http://gnequality.org/event-world-cancer-day-awareness/[தொடர்பிழந்த இணைப்பு]
- http://spar.ipage.com/rimss/ennangalin-sangamam-annual-conference/[தொடர்பிழந்த இணைப்பு]