எதியோப்பிய குறுங்கீரி

பாலூட்டிச் சிறப்பினம்
எதியோப்பிய குறுங்கீரி
Ethiopian dwarf mongoose
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
குறுங்கீரி
இனம்:
H. hirtula
இருசொற் பெயரீடு
Helogale hirtula
ஓல்ட் ஃபீல்ட், 1904

எதியோப்பிய குறுங்கீரி (Ethiopian dwarf mongoose)(மற்ற பெயர்கள்: பாலைவனக் குறுங்கீரி, சோமாலியக் குறுங்கீரி) கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கிழக்காபிரிக்க நாடுகளான எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

எதியோப்பிய குறுங்கீரி வேட்டையாடும் விலங்கினைக் கண்டறிந்தால் அதன் குடும்பத்திற்கு சமிக்கை அழைப்புகளை அனுப்பும். தனக்கு ஆபத்து இல்லாதபோதும் அவை பொதுவான சமிக்கை அழைப்புகளை உருவாக்குவதாகவும் அறியப்படுகிறது. இவை வெவ்வேறு குடும்பத்திற்கு அவசரத்தின் பொருட்டு வெவ்வேறு சமிக்கை அழைப்புகளை அனுப்புகிறது. எதியோப்பிய குறுங்கீரி பற்றிய ஆய்வில், அவை வேட்டையாடும் இனம், தூரம் மற்றும் உயரம் ஆகியவற்றை சமிக்கை அழைப்புகள் மூலம் குடும்பத்திற்கு தெரிவிக்கின்றன எனக் கண்டறிந்தனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Helogale hirtula". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern
  2. Collier, Katie; Radford, Andrew N.; Townsend, Simon W.; Manser, Marta B. (2017). "Wild dwarf mongoose produce general alert and predator-specific alarm calls". Behavioral Ecology 28 (5): 1293–1301. doi:10.1093/beheco/arx091. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதியோப்பிய_குறுங்கீரி&oldid=4081354" இலிருந்து மீள்விக்கப்பட்டது