எதிர்நீச்சல் (1968 திரைப்படம்)
எதிர்நீச்சல் கை. பாலசந்தர் இயக்கி 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
எதிர்நீச்சல் | |
---|---|
![]() | |
இயக்கம் | கை.பாலசந்தர்[1] |
தயாரிப்பு | பி. துரைசாமி காலகேந்திரா |
இசை | வி. குமார் |
நடிப்பு | நாகேஷ் ஜெயந்தி சௌகார் ஜானகி முத்துராமன் மேஜர் சுந்தர்ராஜன் எஸ். என். லட்சுமி |
வெளியீடு | 1968 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை தொகு
எதிர்நீச்சல் படம் ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒட்டுக் குடித்தன குடியிருப்பில் அனாதையான மாது (நாகேஷ்) மாடிப்படிக்கு கீழ் குடியிருந்து கொண்டு அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள் ஏவும் வேலையைச் செய்து, அவர்கள் தரும் உணவால் ஓரளவு தன் பசியாறி வாழ்வதையும் தனது வறுமையிலும் கல்லூரில் படித்து முன்னேறுவதையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது கை.பாலசந்தர் அவர்கள் எல்லரும் ஏதோ ஒன்றின் மேல் பைத்தியம் என்னும் கருத்தை நினைவூட்டுகிறார்.
பாடல்கள் தொகு
- அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
- தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கின்னங்கள்
- வெற்றி வேண்டுமா போட்டுப் பார்டா எதிர்நீச்சல்
- சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பரிஞ்சு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 Ethir Neechal, IMDb, 2008-12-14 அன்று பார்க்கப்பட்டது
வெளி இணைப்புகள் தொகு
- ஐஎம்டிபி தளத்தில் Ethir Neechal பக்கம்