எத்தியோனின்
எத்தியோனின் (Ethionine) என்பது C6H13NO2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரதமாக்கா அமினோ அமில வகையைச் சேர்ந்த இச்சேர்மம் அமைப்பு வகையில் மெத்தியோனினுடன் தொடர்பு கொண்டுள்ளது. மெத்தியோனின் அமைப்பிலுள்ள மெத்தில் குழுவுக்குப் பதிலாக எத்தியோனின் அமைப்பில் எத்தில் குழு இடம்பெற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-4-எத்தில்சல்ஃபனைல்பியூட்டரிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
S-எத்தில்-L-ஓமோசிசுடீன்
| |
இனங்காட்டிகள் | |
13073-35-3 | |
ChEBI | CHEBI:4886 |
ChEMBL | ChEMBL203187 |
ChemSpider | 5970 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6205 |
| |
பண்புகள் | |
C6H13NO2S | |
வாய்ப்பாட்டு எடை | 163.239 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளர்ச்சிதைமாற்ற விளைபொருட்கள் உபயோகிப்பதை தடைசெய்யும் எத்தியோனின் மெத்தியோனின்னையும் எதிர்க்கிறது. புரதங்களுடன் அமினோ அமிலங்கள் இணைவதை இச்சேர்மம் தடுக்கிறது மற்றும் அடினோசின் முப்பாசுபேட்டின் உயிரினச் செயல்முறைகளில் தலையிடுகிறது. இத்தகைய மருந்தியல் விளைவுகளால் எத்தியோனின் ஒரு நச்சாகவும் வலிமையான புற்றுநோய் ஊக்கியாகவும் கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Narayan Shivapurkar, Mary J. Wilson and Lionel A. Poirier (1984). "Hypomethylation of DNA in ethionine-fed rats". Carcinogenesis 5 (8): 989–992. doi:10.1093/carcin/5.8.989. பப்மெட்:6744518.