எத்தில்வனில்லின்

எத்தில்வனில்லின் (Ethylvanillin) என்பது C2H5O)(HO)C6H3CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த நிறமற்ற திண்மம் ஒரு பென்சீன் வளையத்தைப் பெற்றுள்ளது. இவ்வளையத்தின் 4, 3 மற்றும் 1 என எண்ணிடப்பட்ட நிலைகளில் முறையே ஐதராக்சைல் குழு, ஈதாக்சி குழு மற்றும் பார்மைல் குழு முதலியன இடம் பெற்றுள்ளன.

எத்தில்வனில்லின்Ethylvanillin
Structural formula of ethylvanillin
Ball-and-stick model of the ethylvanillin molecule
பெயர்கள்
வேறு பெயர்கள்
3-ஈதாக்சி-4-ஐதராக்சிபென்சால்டிகைடு, பௌர்போனால்
இனங்காட்டிகள்
121-32-4 Y
ChEBI CHEBI:48408 Y
ChEMBL ChEMBL508676 Y
ChemSpider 8154 Y
InChI
  • InChI=1S/C9H10O3/c1-2-12-9-5-7(6-10)3-4-8(9)11/h3-6,11H,2H2,1H3 Y
    Key: CBOQJANXLMLOSS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C9H10O3/c1-2-12-9-5-7(6-10)3-4-8(9)11/h3-6,11H,2H2,1H3
    Key: CBOQJANXLMLOSS-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D01086 Y
பப்கெம் 8467
  • O=Cc1cc(OCC)c(O)cc1
UNII YC9ST449YJ Y
பண்புகள்
C9H10O3
வாய்ப்பாட்டு எடை 166.18 g·mol−1
தோற்றம் நிறமற்றத் தூள்
அடர்த்தி 1.186 கி/மி.லி
உருகுநிலை 76 °C (169 °F; 349 K)
கொதிநிலை 295.1 °C (563.2 °F; 568.2 K)
தண்ணீரில் சிறிதளவு கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும், தீங்கானது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

எத்தில்வனில்லின் ஒரு செயற்கை மூலக்கூறாகும். இயற்கையில் இது கிடைப்பதில்லை. கேட்டெகால் சேர்மத்திலிருந்து சில படிநிலை வினைகள் வழியாக இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. முதல் படிநிலையில் கேட்டெகால் எத்திலேற்றம் செய்யப்பட்டு கியுதால் எனப்படும் 2-ஈத்தாக்சி பீனால் தயாரிக்கப்படுகிறது (1). இந்த ஈதர் சேர்மம் கிளையாக்சாலிக் அமிலம் சேர்க்கப்பட்டு மாண்டெலிக் அமில வழிப்பொருளாகச் சுருக்கப்படுகிறது(2). பின்னர் இவ்வழிப்பொருள் ஆக்சிசனேற்றம் மற்றும் கார்பாக்சில் குழு நீக்கவினைகள் மூலமாக எத்தில்வனில்லின் தயாரிக்கப்படுகிறது[1]

 .

பயன்பாடுகள்

தொகு

ஒரு சுவையூட்டியாக, எத்தில்வனில்லின் வனில்லினை விட மூன்று மடங்கு ஆற்றல் வாய்ந்ததாகும். சாக்கலேட்டு தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[1].

மூலக்கூறு வடிவமைப்பு மற்றும் நுகர்வு கலை அழகியல் ஆகியவிரு துறைகளிலும் இம்மூலக்கூறு ஒரு புரட்சியை உண்டாக்கியது எனலாம். 1889 ஆம் ஆண்டில் முதன்முதலாக யிக்கி என்ற ஒருவகை நறுமணப்பொருளில் கலைஞர் எய்மெ குயுர்லியன் இச்செயற்கை மூலக்கூறைப் பயன்படுத்தினார். இயற்கை பொருட்களின் வரம்புகளில் கட்டுண்டு கிடந்த நறுமணப்பொருள் கலைஞர்கள் அதிலிருந்து விடுதலை பெற்றனர்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Karl-Georg Fahlbusch, Franz-Josef Hammerschmidt, Johannes Panten, Wilhelm Pickenhagen, Dietmar Schatkowski, Kurt Bauer, Dorothea Garbe, Horst Surburg "Flavors and Fragrances" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim: 2002. Published online: 15 January 2003; எஆசு:10.1002/14356007.a11_141.
  2. "Vanillin:Molecule of the Month". Bristol University.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்வனில்லின்&oldid=2227111" இலிருந்து மீள்விக்கப்பட்டது