எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு (Ethyl bromodifluoroacetate) என்பது C4H5BrF2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியலில் இது ஓர் எசுத்தர் சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. வேதிச் சேர்மங்களை தயாரிக்கும்போது அவற்றில் CF2 குழுவை அறிமுகப்படுத்த இச்சேர்மம் பயன்படுகிறது. எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு தெளிவான மஞ்சள் நிற திரவமாகும். புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டும் எத்தில் ஆல்ககாலும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு
Ethyl bromodifluoroacetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் 2-புரோமோ-2,2-இருபுளோரோ அசிட்டேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தில் 2,2-இருபுரோமோ-2-புளோரோ-அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
இருபுளோரோபுரோமோ அசிட்டிக் அமில எத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
667-27-6[1] Y
ChemSpider 62789
EC number 211-567-0
InChI
  • InChI=1S/C4H5BrF2O2/c1-2-9-3(8)4(5,6)7/h2H2,1H3
    Key: IRSJDVYTJUCXRV-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H5Br2FO2/c1-2-9-3(8)4(5,6)7/h2H2,1H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69585
  • BrC(Br)(F)C(=O)OCC
UNII 2QFZ6JJ5YH Y
பண்புகள்
C4H5BrF2O2
வாய்ப்பாட்டு எடை 202.98 g·mol−1
தோற்றம் தெளிவான நிறமற்ற இலேசான மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 1.583 கி/மி.லி
கொதிநிலை 82 °C (180 °F; 355 K) அழுத்தம் 33 டாரில்
ஆவியமுக்கம் 1.36 மி.மீ.பாதரசம் 25° செல்சியசு வெப்பநிலையில்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H314
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எத்தில் புளோரோசல்போனாக்சியிருபுளோரோ அசிட்டேட்டு சோடியம் புரோமைடுடன் (NaBr) வினைபுரிந்து எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டை உருவாக்குகிறது. இந்த வினை கரைப்பான் சல்போலேனில் நிகழலாம். வினைகள் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் 12 மணிநேரம் நிகழும். இவ்வினையில் 31% வினைவிளை பொருள்கள் உருவாகும்.

வினைகள்

தொகு

ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களை இரெபார்மாட்சுகி வினையாக்கியைப் பயன்படுத்தி எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு மற்றும் CF2 குழுவை கொண்ட மற்ற ஒத்த சேர்மங்கள் உருவாக்கலாம். 2,2-இருபுளூரோ-3-ஐதராக்சி எசுத்தர்களையும் எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு அளிக்கிறது. மேலும் எத்தில் புரோமோபுளூரோஅசிட்டேட்டு சேர்மங்களை உருவாக்குவதற்கும், லாக்டோன்கள், இமைன்கள் மற்றும் பிற அமினோ அமிலங்கள் போன்ற பிற கரிம சேர்மங்களுடன் சோதனை செய்வதற்கும் இது ஒரு நல்ல சேர்மமாக கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. datasheet, Santa Cruz Biotechnology, 2012
  2. Sato, Kazuyuki; Tamura, Misato; Tamoto, Kei; Omote, Masaaki; Ando, Akira; Kumadaki, Itsumaro (2000). "Michael-type Reaction of Ethyl Bromodifluoroacetate with α,β-Unsaturated Carbonyl Compounds in the Presence of Copper Powder.". Chemical and Pharmaceutical Bulletin 48 (7): 1023–1025. doi:10.1248/cpb.48.1023. பப்மெட்:10923834. http://cpb.pharm.or.jp/cpb/200007/C07_1023.pdf.