எத்தில் பென்சோயேட்டு
எத்தில் பென்சோயேட்டு (Ethyl benzoate) என்பது C9H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சாயிக் அமிலம் மற்றும் எத்தனால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் இந்த எசுத்தர் உருவாகும். நிறமற்ற திரவமான இது தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது. ஆனால் பெரும்பாலான கரிம கரைப்பான்களுடன் கலக்கும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் பென்சோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
93-89-0 | |
ChEBI | CHEBI:156074 |
ChEMBL | ChEMBL510714 |
ChemSpider | 6897 |
EC number | 202-284-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7165 |
| |
UNII | J115BRJ15H |
பண்புகள் | |
C9H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 150.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.050 கி/செ.மீ3 |
உருகுநிலை | −34 °C (−29 °F; 239 K) |
கொதிநிலை | 211–213 °C (412–415 °F; 484–486 K) |
0.72 மி.கி/மி.லி | |
மட. P | 2.64 |
−93.32×10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H411 | |
P264, P273, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362, P391, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பல ஆவியாகும் எசுத்தர்களைப் போலவே, எத்தில் பென்சோயேட்டும் இனிப்பு, பழம், செர்ரி மற்றும் திராட்சை என விவரிக்கப்படும் ஒரு இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது.[1] சில வாசனை திரவியங்கள் மற்றும் செயற்கை பழ சுவைகளில் எத்தில் பென்சோயேட்டு ஓர் அங்கமாகும்.
தயாரிப்பு
தொகுஆய்வகத்தில் எத்தில் பென்சோயேட்டு தயாரிப்பதற்கான எளிய மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையானது பென்சாயிக் அமிலத்துடன் எத்தனாலையும் வினையூக்கியாகக் கந்தக அமிலத்தையும் சேர்த்து அமில எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தினால் எத்தில் பென்சோயேட்டு உருவாகும். :[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ethyl benzoate, thegoodscentscompany.com
- ↑ Arthur Israel Vogel. Rev. by Brian S. Furniss: Vogel’s textbook of practical organic chemistry. 5. Auflage. Longman, Harlow 1989, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-46236-3, S. 1076