எனக்கான ஆகாயம் (நூல்)

எனக்கான ஆகாயம் எனும் கவிதை நூல் டெம்மி அளவில், சர்வதேசத் தர புத்தக எண் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81099-03-2 கொண்டு 78 பக்கங்களில் திருச்சி, உயிர் எழுத்து பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கான ஆகாயம்
நூல் பெயர்:எனக்கான ஆகாயம்
ஆசிரியர்(கள்):சக்தி ஜோதி
வகை:கவிதை
துறை:கவிதை
இடம்:உயிர் எழுத்து பதிப்பகம்,
9, முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,
திருச்சி-1,
தொலைபேசி: 0431-6523099.
மொழி:தமிழ்
பக்கங்கள்:78
பதிப்பகர்:உயிர் எழுத்து பதிப்பகம்
பதிப்பு:டிசம்பர், 2010
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

நூலாசிரியர்

தொகு

தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். உயிர் எழுத்து, காலச்சுவடு, தீராநதி, புதியபார்வை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.

அணிந்துரை

தொகு

இக்கவிதை நூலுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

உள்ளடக்கம்

தொகு

இந்நூலில் நூலாசிரியர் எழுதிய 55 புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்கான_ஆகாயம்_(நூல்)&oldid=4163542" இலிருந்து மீள்விக்கப்பட்டது