என்றி டிரேப்பர் விபரப்பட்டியல்
என்றி டிரேப்பர் விபரப்பட்டியல் (எச்.டி) (Henry Draper Catalogue) என்பது, விண்மீன்களின் தகவல்களைத் தரும் ஒரு விபரப்பட்டியல். 1918 க்கும் 1924க்கும் இடையில் வெளியான இந்தப் பட்டியல் 225,300 விண்மீன்களுக்கான நிறமாலைசார் வகைப்பாடுகளைத் தருகின்றது. இது பின்னர் 1925க்கும் 1936க்கும் இடையில் விரிவாக்கப்பட்டு என்றி டிரேப்பர் விரிவாக்கம் (எச்.டி.இ) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இதில் 46,850 விண்மீன்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து, 1937க்கும் 1949க்கும் இடையில் விளக்கப்பட வடிவில் வெளியிடப்பட்ட என்றி டிரேப்பர் விளக்கப்படங்கள் (எச்.டி.இ.சி) கூடுதலாக 86,933 விண்மீன்களுக்கான வகைப்பாடுகளைக் கொண்டிருந்தது. மொத்தமாக 359,083 விண்மீன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1][2] தொடக்க என்றி டிரேப்பர் விபரப்பட்டியல், ஏறத்தாழ 9 ஒளிவரை அளவுக்கு ஓரளவு முழு வானத்தையும் உள்ளடக்கியது.[3] விரிவாக்கம், வானில் சில பகுதிகளில் காணப்பட்ட மங்கலான விண்மீன்களையும் சேர்த்துக்கொண்டது. என்றி டிரேப்பர் விபரப்பட்டியலின் உருவாக்கம், விண்மீன்களை வகைப்படுத்தும் முன்னோடி முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்தது. இதன் விபரப் பட்டியல் எண்கள் விண்மீன்களை அடையாளம் காண்பதற்கான ஒரு வழியாகப் பயன்பட்டுவருகின்றன.[4][5]
வரலாறு
தொகுபின்னணி
தொகுஎன்றி டிரேப்பர் விபரப்பட்டியலின் வரலாறு முந்திய விண்மீன் நிறமாலை ஒளிப்படங்களின் ஆய்வுகளிலிருந்து தொடங்குகிறது. என்றி டிரேப்பர் தனித்துவமான நிறமாலைக் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலையின் ஒளிப்படத்தை முதன் முதலாக எடுத்தார். 1872ல் எடுக்கப்பட்ட இது வேகா எனப்படும் விண்மீனின் நிறமாலை ஒளிப்படமாகும். 1882ல் அவர் இறப்பதற்கு முன் நூற்றுக்கு மேற்பட்ட விண்மீன் நிறமாலை ஒளிப்படங்களை எடுத்திருந்தார். 1885ல், எட்வார்டு பிக்கரிங், ஆவார்டு கல்லூரி வானாய்வகத்தில் பொருளருகுப் பட்டக முறையைப் பயன்படுத்திய ஒளிப்பட நிறமாலையியல் துறையின் மேற்பார்வையாளரானார். 1886ல், பிக்கரிங்கின் ஆய்வுகளில் ஆர்வங்கொண்ட டிரேப்பரின் மனைவி மேரி ஆன் பாமர் டிரேப்பர், என்றி டிரேப்பர் நினைவு நிதி என்ற பெயரில் அவரது ஆய்வுகளுக்கு நிதி வழங்க முன்வந்தார்.[6][7] இதனைத் தொடர்ந்து பிக்கரிங்கும் அவரது உடன் ஆய்வாளர்களும், விண்மீன் நிறமாலை வகைப்பாடு ஒன்றைச் செய்வதற்காக பொருளருகுப் பட்டக முறையைப் பயன்படுத்தி விண்ணை ஆய்வு செய்யத் தொடங்கினர்.[8]
செக்கி | டிரேப்பர் | கருத்துக்கள் |
---|---|---|
I | A, B, C, D | ஐதரசன் கோடுகள் மேலோங்கியவை. |
II | E, F, G, H, I, K, L | |
III | M | |
IV | N | இது விபரப்பட்டியலில் இருக்கவில்லை. |
— | O | ஒளிர் கோடுகளுடன் கூடிய வூல்ஃப்–ராயத் நிறமாலை. |
— | P | கோள் விண்மீன் படலம். |
— | Q | பிற வகை நிறமாலைகள். |
இந்த ஆய்வுகளின் முதல் விளைவாக 1890ல் விண்மீன் நிறமாலைகளின் டிரேப்பர் விபரப்பட்டியல் வெளியானது. இது பெரும்பாலும், −25° சரிவுக் கோணத்துக்கு வடக்கில் அமைந்த 10,351 விண்மீன்களின் வகைப்பாட்டை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலான வகைப்பாடுகள் வில்லியமினா பிளெமிங் என்பவரால் செய்யப்பட்டன.[10] இதில் பயன்படுத்தப்பட்ட வகைப்பாட்டுத் திட்டம், முன்னர் பயன்பாட்டில் இருந்த செக்கி வகுப்புக்களை (I - IV) மேலும் துணைப் வகுப்புக்களாகப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்துணை வகுப்புக்களுக்கு A முதல் N வரையான ஆங்கில எழுத்துக்களால் பெயரிடப்பட்டது. ஒளிபொருந்திய கோடுகளைக் கொண்ட நிறமாலைகளுக்குரிய விண்மீன்களுக்கு O எழுத்தும், கோள் விண்மீன் படலங்களுக்கு P எழுத்தும், A முதல் P வரையான வகுப்புக்களுக்குள் அடங்காத விண்மீன்களுக்கு Q எழுத்தும் பயன்படுத்தப்பட்டன. N வகைக்குரிய விண்மீன்கள் எதுவும் விபரப்பட்டியலில் இடம்பெறவில்லை. O வகைக்குள் வூல்ஃப்-ரேயத் விண்மீன் எச்.ஆர் 2583 மட்டும் அடங்கியிருந்தது.[9]
அந்தோனியா மோரியும், பிக்கரிங்கும் வட அரைக் கோளத்தில் காணப்படும் ஒளிர் விண்மீன்களின் நிறமாலைகள் தொடர்பான விரிவான ஆய்வொன்றை 1897ல் வெளியிட்டனர்.[11] மோரி I தொடக்கம் XXII வரை எண்ணிடப்பட்ட வகைப்பாடுகளைப் பயன்படுத்தினார். I தொடக்கம் XX வரையானவை டிரேப்பர் விபரப்பட்டியலின் B, A, F, G, K, M ஆகிய வகைகளுடன் ஒத்திருந்தன. XXI, XXII என்பன முறையே N, O ஆகிய வகைகளுக்கு இணையானவை. B வகை விண்மீன்களைத் தற்போது இருப்பதுபோல் A வகை விண்மீன்களுக்கு முன் இட்டு வகைப்படுத்தியவர் இவரே.[12]
ஆவார்டு கல்லூரி வானாய்வகம் 1890ல், தென் அரைக் கோள வானத்தை ஆய்வு செய்வதற்காக, பெரு நாட்டில் உள்ள அரெக்குயிப்பா என்னும் இடத்தில் ஒரு வானாய்வு நிலையத்தைத் தோற்றுவித்தது. தென்னரைக் கோள ஒளிர் விண்மீன்கள் தொடர்பான ஆய்வு ஒன்று அன்னி ஜம்ப் கனன், பிக்கரிங் ஆகியோரால் 1901ல் வெளியிடப்பட்டது.[13][14] கனன், விண்மீன் நிறமாலை டிரேப்பர் விபரப்பட்டியலில் பயன்படுத்தப்பட்ட எழுத்துப் பெயர் வகைகளையே பயன்படுத்தினார். ஆனால், O, B, A, F, G, K, M ஆகிய எழுத்துக்களையும், கோள் விண்மீன் படலங்களுக்குப் பயன்பட்ட P, சில விநோதமான நிறமாலைகளுக்குப் பயன்பட்ட Q ஆகியவை தவிர்ந்த பிற எழுத்துக்களும் கைவிடப்பட்டன. அவர், B5A,F2G போன்ற வகைகளையும் பயன்படுத்தினார். B5A என்பது B, A ஆகியவற்றுக்கு அரைவழியில் அமைந்த விண்மீன்களையும், F2G என்பது F, G என்பவற்றுக்கு இடையில் ஐந்தில் ஒரு பங்கு வழியில் அமைந்த விண்மீன் வகைகளையும் குறிக்கும்.[15]
என்றி டிரேப்பர் விபரப்பட்டியலின் தோற்றம்
தொகு1910க்கும், 1915க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய கண்டுபிடிப்புக்களால் விண்மீன் வகைப்பாடு தொடர்பான ஆர்வம் கூடியது. தொடர்ந்து 1911ல் என்றி டிரேப்பர் விபரப்பட்டியல் தொடர்பான வேலைகளும் தொடங்கின. 1912 முதல் 1915 வரையான காலப்பகுதியில், கனனும் அவரது உடன் பணியாளர்களும், மாதத்துக்கு 5,000 வீதம் நிறைமாலைகளை வகைப்படுத்தினர்.[16] இவ்விபரப்பட்டியல் 1918க்கும் 1924க்கும் இடைப்பட்ட காலத்தில் 9 தொகுதிகளாக வெளியானது. இவ்விபரப்பட்டியலில், 225,300 விண்மீன்களின் அண்ணளவான அமைவிடம், அளவு, நிறமாலை வகைப்பாடு, முடிந்தால் டர்ச்முசுத்தேரங்கு (Durchmusterung) விபரப்பட்டியலுக்கான குறிப்புக்கள் ஆகிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.[17] வகைப்பாட்டு முறை கனனின் 1901 ஆம் ஆண்டின் வெளியீட்டை அடியொற்றியே இருந்தது. ஆனாலும், B, A, B5A, F2G போன்றவை முறையே B0, A0, B5, F2 என்றவாறு மாற்றம் பெற்றன. O தொடக்கம் M வரையான வகைகளுடன், விண்மீன் படலங்களுக்கு Pயும், கரிம விண்மீன்களுக்கு R, N என்பனவும் பயன்படுத்தப்பட்டன.[18] பிக்கரிங் 1919 பெப்ரவரி 3ம் தேதி காலமாகிவிட மீதியிருந்த 6 தொகுதிகள் கனனின் மேற்பார்வையிலேயே வெளியாகின.[19]
என்றி டிரேப்பர் விரிவாக்கமும், விளக்க அட்டவணையும்
தொகுகனன், வானின் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 46,850 மங்கலான விண்மீன்களை வகைப்படுத்தி, 1925க்கும் 1936க்கும் இடைப்பட்ட காலத்தில் 6 தொகுதிகளாக வெளியான என்றி டிரேப்பர் விரிவாக்கத்தில் சேர்த்தார்.[2][20] அவர் 1941ல் இறக்கும்வரை தொடர்ந்து விண்மீன்களை வகைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இவ்வகைப்படுத்தல்களுட் பல 1949ல் வெளியான என்றி டிரேப்பர் விரிவாக்க விளக்க அட்டவணையில் சேர்க்கப்பட்டன (இந்த அட்டவணையின் முதற் பகுதி 1937ல் வெளியானது). இந்த அட்டவணைகளில், மார்கிரெட் வால்ட்டன் மேயோல் என்பவரால் செய்யப்பட்ட வகைப்படுத்தல்களும் அடங்கியிருந்தன. மார்கிரெட், கனனின் இறப்புக்குப் பின்னர் இந்த வேலைகளை மேற்பார்வை செய்தவராவார்.[21][22]
இந்த விபரப்பட்டியலும், அதன் விரிவாக்கங்களும் விண்மீன்களின் நிறமாலை வகைகளைப் பட்டியலாக்குவதில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சியாகும்.[5] அத்துடன் இன்றும் பயன்பாட்டில் உள்ள, விண்மீன் நிறமாலை வகைப்பாட்டு முறையான ஆவார்ட் வகைப்பாட்டு முறைகளுக்கு வழி சமைத்ததும் இதுவே.[23]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Henry Draper Extension Charts: A catalogue of accurate positions, proper motions, magnitudes and spectral types of 86933 stars, V. V. Nesterov, A. V. Kuzmin, N. T. Ashimbaeva, A. A. Volchkov, S. Röser, and U. Bastian, Astronomy and Astrophysics Supplement Series 110 (1995), pp. 367–370, Bibcode: 1995A&AS..110..367N.
- ↑ 2.0 2.1 The Henry Draper extension, Annie J. Cannon, Annals of Harvard College Observatory 100 (1925–1936), Bibcode: 1936AnHar.100....1C.
- ↑ HENRY DRAPER star catalog, edition 1985, HyperSky documentation, Willmann-Bell, Inc., 1996. பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ p. 327, Measuring the Universe: The Cosmological Distance Ladder, Stephen Webb, London, New York: Springer, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85233-106-2.
- ↑ 5.0 5.1 p. 4, Galaxies in the Universe: An Introduction, Linda S. Sparke, John S. Gallagher, III, Cambridge, UK: Cambridge University Press, 2nd ed., 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-85593-4.
- ↑ On the Henry Draper Memorial Photographs of Stellar Spectra, George F. Barker, Proceedings of the American Philosophical Society 24 (1887), pp. 166–172.
- ↑ p. 75, Women in Science: Antiquity Through the Nineteenth Century: a Biographical Dictionary with Annotated Bibliography, Marilyn Bailey Ogilvie, MIT Press, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-65038-X.
- ↑ The Henry Draper Memorial, Annie J. Cannon, Journal of the Royal Astronomical Society of Canada 9, #5 (May–June 1915), pp. 203–215, Bibcode: 1915JRASC...9..203C.
- ↑ 9.0 9.1 p. 108, Hearnshaw 1986; pp. 2–4, Pickering 1890.
- ↑ The Draper Catalogue of stellar spectra photographed with the 8-inch Bache telescope as a part of the Henry Draper memorial, Edward C. Pickering, Annals of Harvard College Observatory 27 (1890), Bibcode: 1890AnHar..27....1P. See in particular pp. 1–2.
- ↑ Spectra of bright stars photographed with the 11-inch Draper Telescope as part of the Henry Draper Memorial, Antonia C. Maury and Edward C. Pickering, Annals of Harvard College Observatory 28, part 1 (1897), pp. 1–128, Bibcode: 1897AnHar..28....1M.
- ↑ p. 112, Hearnshaw 1986.
- ↑ Spectra of bright southern stars photographed with the 13-inch Boyden telescope as part of the Henry Draper Memorial, Annie J. Cannon and Edward C. Pickering, Annals of Harvard College Observatory 28, part 2 (1901), pp. 129–263, Bibcode: 1901AnHar..28..129C.
- ↑ pp. 110–111, 117–118, Hearnshaw 1986.
- ↑ pp. 117–119, Hearnshaw 1986.
- ↑ pp. 214–215, Cannon 1915.
- ↑ The Henry Draper Catalogue, Annie J. Cannon and Edward C. Pickering, Annals of Harvard College Observatory;
hours 0 to 3, 91 (1918), Bibcode: 1918AnHar..91....1C;
hours 4 to 6, 92 (1918), Bibcode: 1918AnHar..92....1C;
hours 7 to 8, 93 (1919), Bibcode: 1919AnHar..93....1C;
hours 9 to 11, 94 (1919), Bibcode: 1919AnHar..94....1C;
hours 12 to 14, 95 (1920), Bibcode: 1920AnHar..95....1C;
hours 15 to 16, 96 (1921), Bibcode: 1921AnHar..96....1C;
hours 17 to 18, 97 (1922), Bibcode: 1922AnHar..97....1C;
hours 19 to 20, 98 (1923), Bibcode: 1923AnHar..98....1C;
hours 21 to 23, 99 (1924), Bibcode: 1924AnHar..99....1C. - ↑ pp. 121–122, 128, 133–134, Hearnshaw 1986; also see pp. 5–11 of the first volume of the Henry Draper Catalogue (Cannon & Pickering 1918.)
- ↑ p. 135, The Analysis of Starlight: One Hundred and Fifty Years of Astronomical Spectroscopy, J. B. Hearnshaw, Cambridge, UK: Cambridge University Press, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-25548-1.
- ↑ p. 1, The Henry Draper charts of stellar spectra, Annie J. Cannon and Harlow Shapley, Annals of Harvard College Observatory 105, #1 (1937), pp. 1–19, Bibcode: 1937AnHar.105....1C.
- ↑ Cannon and Shapley 1937; also see p. 138, Hearnshaw 1986.
- ↑ The Henry Draper extension. II, Annie J. Cannon and Margaret Walton Mayall, Annals of Harvard College Observatory 112 (1949), Bibcode: 1949AnHar.112....1C.
- ↑ p. 13, From Dust to Stars: Studies of the Formation and Early Evolution of Stars, Norbert S. Schulz, Berlin, New York: Springer, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-23711-9.