என்றி லங்லொவைசு

என்றி லங்லொவைசு (Henri Langlois, 13 நவம்பர் 1914 – 13 சனவரி 1977) பிரெஞ்சு திரைப்படக் காப்பகப்படுத்துநரும் திரைப்பட தீவிரவிசிறியுமாவார். திரைப்படங்களைப் பேணிக்காப்பதலில் முன்னோடியான இவர் திரைப்பட வரலாற்றில் தாக்கமிகு நபராவார். 1950களில் பாரிசில் இவர் திரையிட்டத் திரைப்படங்கள் ஆக்குநர் கோட்பாடு உருவாவதற்கான கருத்தியலை வழங்கியதாக கருதப்படுகின்றன.[1][2][3]

என்றி லங்லொவைசு
பிறப்புநவம்பர் 13, 1914(1914-11-13)
இசுமீர், உதுமானியப் பேரரசு
இறப்பு13 சனவரி 1977(1977-01-13) (அகவை 62)
பாரிஸ், பிரான்சு
பணிசினிமாத்தெக் பிரான்சேயின் இணைநிறுவனரும் இயக்குநரும்
அறியப்படுவதுதிரைப்படங்களைப் பேணிக்காத்தல், திரைப்படங்களைக் காப்பகப்படுத்தல், திரைப்பட வரலாறு. திரைப்பட தீவிரவிசிறி
துணைவர்மேரி மீர்சன்

1938இல் லங்லொவைசு ஜார்ஜசு பிரான்சுவுடனும் ழான் மிட்ரியுடனும் இணைந்து சினிமாத்தெக் பிரான்சே (பிரான்சிய திரைப்படம்) என்ற அமைப்பையும் பன்னாட்டு திரைப்படக் காப்பகக் கூட்டமைப்பையும் (FIAF) நிறுவினார். சினிமாத்தெக்கின் நீண்டகால தலைமை காப்பகப்படுத்துநரான லோட் ஐசுனருடன் ஒருங்கிணைந்து உலகப்போருக்குப் பிந்தைய திரைப்படங்களையும் திரைப்பட வரலாற்றையும் பாதுகாக்க பணியாற்றினார். தனிப்போக்குள்ள லங்லொவைசு அவர் கடைபிடித்த வழிமுறைகளுக்காக பல சர்ச்சைகளில் சிக்கினார்.[4] இளம் திரைப்பட தீவிரவிசிறிகளும் திறனாய்வாளர்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்தார்; பிரான்சிய புது அலை திரைப்படங்கள் உருவானதற்கும் முதன்மைக் காரணம் இவராவார்.

1974இல், லங்லொவைசிற்கு "கலைநயமிக்க திரைப்படங்கள் மீதான அவரது பற்று, கடந்தகால திரைப்படங்களை பேணிக் காப்பதில் அவருடைய பெரும் பங்களிப்பு, வருங்காலத்தைக் குறித்த அவரது அசைக்கவியலா நம்பிக்கைக்காக" மதிப்பார்ந்த அகாதமி விருது வழங்கப்பட்டது.[5]

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Place Henri-Langlois (Paris)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_லங்லொவைசு&oldid=2894416" இருந்து மீள்விக்கப்பட்டது