என்று தணியும் (ஆவண நிகழ்படம்)
(என்று தணியும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என்று தணியும் என்கிற இந்த ஆவண நிகழ்ப்படம் 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் திகதி அன்று கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் தீயில் கருகிய 94 பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இதனை தயாரித்து, இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார் ஆவார்.[1] இப் படம் அக்குழந்தைகளின் படுகொலைகளுக்கான நிகழ்வுகள், பின் விளைவுகள் ஆகியவற்றை விவரிக்கிறது. 63 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், பல கல்வியாளர்கள் கல்வி எவ்வளவு மோசமான வியாபாரமாகிவிட்டது என்பதையும், இலவசமாகக் கல்வியை கொடுக்க வேண்டிய ஒரு அரசு எவ்வளவு மூடத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் கல்வி அமைப்புகள் மேல் திணித்துள்ளது என்பதையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்த ஆவணப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- என்று தணியும் வெளியீட்டு விழா பரணிடப்பட்டது 2013-08-08 at the வந்தவழி இயந்திரம்