என். ஆர். இராசவரோதயம்

நவரத்தினசிங்கம் இரத்தினவரோதயம் இராசவரோதயம் (Navaratnasingam Ratnavarothiam Rajavarothiam, அக்டோபர் 8, 1908 - ஆகத்து 27, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

என். ஆர். இராசவரோதயம்
N. R. Rajavarothiam
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை
பதவியில்
1952–1963
முன்னையவர்எஸ். சிவபாலன், அஇதகா
பின்னவர்எஸ், எம். மாணிக்கராசா, இதக
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-10-08)8 அக்டோபர் 1908
இறப்பு27 ஆகத்து 1963(1963-08-27) (அகவை 54)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
முன்னாள் கல்லூரிபுனித யோசப் கல்லூரி
ஆனந்தா கல்லூரி
கொழும்பு பல்கலைக்கழகம்
இனம்இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை தொகு

இராசவரோதயம் கிழக்கிலங்கையில் திருகோணமலையில் நவரத்தினசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.

அரசியலில் தொகு

இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினரானார். கட்சியின் உப-தலைவராக இருந்தவர். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் எஸ். சிவபாலனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1]. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இருவர் மட்டுமே. இவர் 1956, மார்ச் 1960, சூலை 1960 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  • Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 155. 
  1. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  2. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  3. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  4. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஆர்._இராசவரோதயம்&oldid=3546159" இலிருந்து மீள்விக்கப்பட்டது