என். கேசவன்
என். கேசவன் (N. Kesavan, இறப்பு: செப்டம்பர் 06, 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும், சிறீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இவர் இலாஸ்பேட்டை தொகுதியிலிருந்து, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1996 முதல் 2001 வரை பதவியில் இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவராவார். இவர் 2011 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[1]
என். கேசவன் | |
---|---|
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–2001 | |
தொகுதி | இலாஸ்பேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதுச்சேரி, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 6, 2011 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
சிறீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவனம்
தொகுஇவர், புதுச்சேரி மாநிலத்தில் இயங்குகின்ற சிறீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தை 1996 ஆம் ஆண்டு நிறுவினார். இவர் இறப்புக்குப் பிறகு திரு. எம். தனசேகரன் என்பவர் நிறுவனத்தைக் கவனித்து வருகிறார்.
கல்வி நிறுவனங்கள்
தொகு- சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்பக் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- வெங்கடேசுவரா கல்வியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- மயிலம் பொறியியல் கல்லூரி, மயிலம், விழுப்புரம்