சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி
சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி (Sri Manakula Vinayagar Engineering College (SMVEC)) என்பது புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு பகுதியில் 1999இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது புதுச்சேரி பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் இது புது தில்லியில் இயங்குகின்ற ஏ. ஐ. சி. டி. இ.யின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.[1][2]
![]() | |
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 1999 |
நிறுவுனர் | என். கேசவன் |
முதல்வர் | மரு. வி. எஸ். கே. வெங்கடாசலபதி |
அமைவிடம் | , 11°54′53″N 79°38′08″E / 11.9147°N 79.635664°E |
வளாகம் | 60 ஏக்கர் |
சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.smvec.ac.in |
இருப்பிடம்
தொகுஇக்கல்லூரியானது புதுவை மாநிலம், மதகடிப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியிலிருந்து புதுச்சேரி 22 கி. மீ தொலைவிலும், விழுப்புரம் 16 கி. மீ தொலைவிலும் உள்ளது.
உள்கட்டமைப்பு
தொகுஇந்த கல்லூரி வளாகமானது 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
- நிர்வாக வளாகம்
- பல்கலைக்கழக வளாகம்
- அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாடு வளாகம்
- தகவல் தொழிற்நுட்ப பிரிவு வளாகம்
- இயந்திரவியல் பிரிவு வளாகம்
- மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு வளாகம்
- மின்னணுவியல் தொழிற்நுட்ப பிரிவு வளாகம்
- உணவகம்
- மாணவர்கள் விடுதி
- மாணவிகள் விடுதி
இளநிலை தொழில்நுட்பவியல் பிரிவுகள்
தொகு- இளநிலை தொழில்நுட்பவியல்-தகவல் தொழில்நுட்பதுறை (1999 முதல்)
- இளநிலை தொழில்நுட்பவியல்-கணிப்பொறி அறிவியல் பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-செயர்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-கருவியல் கட்டுப்பாடு பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-இயந்திரவியல் பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-குடிசார் பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-கணிப்பொறி அறிவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-எந்திர மின்னணுவியல் பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-மின்னியல் மற்றும் மின்னணுவியல்பொறியியல் துறை
- இளநிலை தொழில்நுட்பவியல்-கணிப்பொறி அறிவியல் மற்றும் வனிக முறைமை துறை
முதுநிலை தொழில்நுட்பவியல் பிரிவுகள்
தொகு- முதுநிலை தொழில்நுட்பவியல்-கணிப்பொறி அறிவியல் பொறியியல் துறை
- முதுநிலை தொழில்நுட்பவியல்-செயர்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை
சார்பு
தொகுஇது பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்தது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா".
- ↑ "மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா".தினமணி (29 நவம்பர், 2016)