எப்பிடாம்னஸ்
எப்பிடாம்னஸ் அல்லது எபிடம்னஸ் (Epidamnos அல்லது Epidamnus, கிரேக்கம்: Ἐπίδαμνος ), [1] ( Albanian ) பின்னர் ரோமன் டைராச்சியம் (Δυρράχιον) [2] [3] [4] ( Albanian ) (நவீன Durrës, அல்பேனியா ), என்பது கிமு 627 இல் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க [5] நகரமாகும். [6] இது கொரிந்து மற்றும் கோர்சிரா (நவீன கோர்ஃபு ) குடியேற்றவாசிகளால் இல்லியாவில் நிறுவப்பட்டது. [7] அரிசுடாட்டிலின் பாலிட்டிக்சில் பல முறை எப்பிடாம்னசின் அரசாங்கத்தை எடுத்துக்காட்டுகிறது, இதை சிலவர் ஆட்சி ஒன்று நிர்வகித்து வந்தது. பின்னர் உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டு சனநாயக அரசாங்கம் ஏற்பட்டது. இதனால் வர்த்தகர்களும் கைவினைஞர்களும் அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டனர். மேலும் சிலவர் ஆட்சியின் ஆதரவாளர்களான பிரபுக்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் கார்சோராவிடம் முறையிட்டனர், அதே நேரத்தில் சனநாயகவாதிகள் கொரிந்தின் உதவியை நாடினர். இது கார்சோவாவுக்கும் கொரிந்துக்கும் இடையிலான போர் ஏற்படக் காரணமாயிற்று. இப்போர் பெலோபொன்னேசியப் போருக்கான ஒரு காரணமாக துசிடிடீஸ் விவரித்துள்ளார். கிமு நான்காம் நூற்றாண்டில் நகர அரசு சசாண்டர் மற்றும் பைரஸ் இராச்சியங்களின் ஒரு பகுதியாக ஆனது. பின்னர் எப்பிடாம்னஸ் அருகாமை எப்பிடாம்னியா என்று அழைக்கப்பட்டது. [8]
குறிப்புகள்
தொகு- ↑ Strabo Geography vi.316
- ↑ Evagrius Scholasticus, Ecclesiastical History, 3.29.1
- ↑ Procopius, History of the Wars, 3.11.1
- ↑ Suda, delta, 1585[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Wilkes, J. J. The Illyrians, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-19807-5, page 96, "From Bouthoe to Epidamnus, a Greek city..."
- ↑ Mogens Herman Hansen, An Inventory of Archaic and Classical Poleis: An Investigation Conducted by The Copenhagen Polis Centre for the Danish National Research Foundation, 2005, page 330: "Epidamnos was founded in either 627 or 625 (Hieron. Chron.)"
- ↑ Rhodes, P.J. A History of the Classical Greek World 478-323 BC. 2nd edition. Chichester: Wiley-Blackwell, 2010, p. 88.
- ↑ James Augustus St. John, The History of the Manners and Customs of Ancient Greece, 1842, Volume 3, page 275 (reprint 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-5441-0)