எப். ரிச்சார்டு ஸ்டீபென்சன்

பேராசிரியர் எப். ரிச்சர்ட் ஸ்டீபென்சன் (F. Richard Stephenson, எஃப். ரிச்சார்ட் ஸ்டீவென்சன், பிறப்பு: 1941) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் டர்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கிழக்காசிய ஆய்வுகள் துறைகளில் பணிபுரிந்து மாண்புடன் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார்.

எப். ரிச்சார்டு ஸ்டீபென்சன்
பணிவானியல் வல்லுநர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு

வானியலின் வரலாற்று அம்சங்களில் அவரது ஆய்வுகள் மையம் கொண்டிருந்தது. அவற்றிலும் குறிப்பாக புவியின் சுழற்சி வரலாறு குறித்த பண்டைய வானவியல் ஆவணங்களை பகுப்பாய்வு செய்வதில் அதிகமாக ஈடுபட்டார். 10979 பிரைஸ்டீபன்சன் என்ற சிறுகோள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ”வரலாற்று கிரகணங்கள் மற்றும் பூமியின் சுழற்சி” என்பது இவருடைய புகழ்பெற்ற நூலாகும்.[1]

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. கேம்பிரிட்ஜ் பல்கலைகழக அச்சகம், 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46194-4