எமிலியோ கோர்தோவா

பெரு நாட்டு சதுரங்க வீரர்

எமிலியோ கோர்தோவா (Emilio Córdova) பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2008 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்ட்மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

எமிலோ கோர்தோவா
Emilio Córdova
நாடு பெரு
பிறப்புசூலை 8, 1991 (1991-07-08) (அகவை 32)
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2008)
பிடே தரவுகோள்2528 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2660 (திசம்பர் 2016)

கோர்தோவா 2004, 2006, 2010, 2014, 2016, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகள் உட்பட பல சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் பெரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

கோர்தோவா 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றார். அங்கு முதல் சுற்றில் இரிச்சர்டு ராப்போர்டு இவரை தோற்கடித்தார்.

ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வட கரோலினாவின் சார்லோட்டில் நடைபெற்ற சார்லோட்டு சதுரங்க மையத்தின் 2020 ஆம் ஆண்டின் கோடைகால கிராண்டுமாசுட்டர் தகுதிக்கான அழைப்புப் போட்டியில் கோர்தோவா 6.0/9 என்ற புள்ளி கணக்கை ஈட்டி ஒரு தோல்வியுமின்றி இரண்டாவது இடத்தைப் பெற்றார். [1]

நவம்பர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோர்தோவா 2022 அமெரிக்க மாசுட்டர்கள் போட்டியில் 7/9 புள்ளிகள் ஈட்டி முதலாவது இடத்தைப் பிடித்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "CCCSA GM/IM Norm Invitational - Holiday 2021 GM/IM Norm Invitational Chess Tournament".
  2. "2022 US Masters ~ Charlotte Chess Center".

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியோ_கோர்தோவா&oldid=3779027" இலிருந்து மீள்விக்கப்பட்டது