44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு

சதுரங்கப் போட்டி

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44-th Chess Olympiad), சென்னை 2022 2022 சூலை 28 முதல் ஆகத்து 9 வரை இந்தியாவில், சென்னையில் நடைபெற்றது.[1][2][3] பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) இப்போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. திறந்தநிலைப் போட்டிகளும்,[note 1][4] பெண்களுக்கான போட்டிகளும், சதுரங்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு
44th Chess Olympiad

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடின் சின்னம்
நடத்தும் நகரம் சென்னை, இந்தியா
போட்டியாளர்கள் 937 (திறந்த)
800 (பெண்கள்)
1,737 (மொத்தம்)
அணிகள் 188 (திறந்த)
162 (பெண்கள்)
நாடுகள் 186 (திறந்த)
160 (பெண்கள்)
தீவட்டிச் சுற்றைத் தொடக்கியவர் விசுவநாதன் ஆனந்த்
தொடக்க நிகழ்வு 28 சூலை 2022
இறுதி நிகழ்வு 9 ஆகத்து 2022
ஆரம்பித்தவர் நரேந்திர மோதி
கொப்பரை எரித்தவர் குகேஷ், ர. பிரக்ஞானந்தா
அரங்கம் Four Points by Sheraton, மாமல்லபுரம் (அனைத்துப் போட்டிகளும்)
நேரு அரங்கு (தொடக்க, இறுதி நிகழ்வுகள்)
நிதிநிலை 92 கோடி (US$12 மில்லியன்)
மேடை
திறந்த நிகழ்வு 1st  உஸ்பெகிஸ்தான்
2nd  ஆர்மீனியா
3rd இந்தியா-2
பெண்கள் 1st  உக்ரைன்
2nd  சியார்சியா
3rd  இந்தியா
சிறந்த வீரர்கள்
திறந்த நிகழ்வு இங்கிலாந்து டேவிட் ஹொவெல்
பெண்கள் போலந்து ஒலிவியா கியோல்பாசா
ஏனைய விருதுகள்
கப்பிரிந்தாசுவிலி கிண்ணம்  இந்தியா
முந்தையது ←பத்தூமி 2018
அடுத்தது புடாபெசுட்டு 2024→

இந்நிகழ்வு தொடக்கத்தில் உருசியாவில் காந்தி-மான்சீசுக்கு நகரில் இடம்பெறுவதாக இருந்து, பின்னர் மாஸ்கோவில் 2020 ஆகத்து மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.[5][6] இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[7] பின்னர் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.[8] இதுவே இந்தியாவில் நடந்த முதலாவது சதுரங்க ஒலிம்பியாடு ஆகும்.[9]

பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,737 ஆகும், இதில் 937 பேர் திறந்தநிலையிலும், 800 பேர் பெண்கள் போட்டியிலும் கலந்து கொண்டனர்.[10][11] பதிவு செய்யப்பட்ட அணிகளின் எண்ணிக்கை 186 நாடுகளில் இருந்து 188 அணிகள் திறந்தநிலையிலும்,[12] 160 நாடுகளில் இருந்து 162 பெண்கள் அணிகளும் பங்குபற்றின.[13] சதுரங்க ஒலிம்பியாது சென்னையில் செரட்டனின் போர் பாயிண்ட்சு மாநாட்டு மையத்திலும், தொடக்க, நிறைவு விழாக்கள் சவகர்லால் நேரு அரங்கத்திலும் நடைபெற்றன.[14] இந்த நிகழ்வின் தலைமை நடுவர் பிரான்சின் லாரன்ட் பிரேட் ஆவார்.[15]

திறந்தநிலைப் போட்டிகளில் உசுபெக்கிசுத்தான் அணி தங்கப் பதக்கத்தை வென்றது, இது சதுரங்க ஒலிம்பியாடுகளில் அவர்களின் முதலாவது பதக்கமாகும், அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கத்தை வென்றது. இது அவர்களது இரண்டாவது தங்கப் பதக்கமாகும் (முன்னர் 2006 இல் வென்றது). ஆங்கிலேய வீரர் டேவிட் ஹோவெல், திறந்த நிகழ்வில் 2898 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 8 புள்ளிகளில் 7½ புள்ளிகளைப் பெற்று,[16] தனிப்பட்ட வீரருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[17] போலந்து வீராங்கனை ஒலிவியா கியோல்பாசா, பெண்கள் நிகழ்வில் 2565 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் சாத்தியமான 11 புள்ளிகளில் 9½ புள்ளிகளைப் பெற்று,[18] தனிநபருக்கான அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.[19]

இந்த ஒலிம்பியாடு போட்டிகளின் போது, 93வது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் மாநாடும் நடந்தது, இதன்போது உருசியாவின் ஆர்க்காதி துவர்க்கோவிச் மாநாட்டின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், விசுவநாதன் ஆனந்த் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20][21]

ஏலச் செயல்முறை

தொகு

43 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 2019 சதுரங்க உலகக் கோப்பை போட்டிகளுக்கான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஏலச் செயல்முறை 2015 ஆம் ஆண்ட்டின் பிற்பகுதியில் தொடங்கியது. நிகழ்வை நடத்த ஆர்வமுள்ள ஒவ்வொரு நகரமும் 31 மார்ச் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதிக்குள் தங்கள் ஏலத்தை பிடே அமைப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கையேட்டின் ஒலிம்பியாடு விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாட்டாளரால் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் விதிகள் 4.1, 4.2 மற்றும் 4.3 ஆகியவற்றின் படி ஏற்பாட்டுக் குழு, நிதி மற்றும் வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்குதல் தொடர்பான நடைமுறைகளும் இதில் அடங்கும்.[22][23] காண்டி-மான்சிசுக்கு நகரம் மட்டுமே சதுரங்க ஒலிம்பியாடு நடத்த ஏலம் கேட்டிருந்தது. அர்செண்டினா மற்றும் சுலோவாக்கியாவின் தேசிய கூட்டமைப்புகளும் ஆரம்ப ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.[24]

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாகுவில் நடந்த 87 ஆவது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலியும்சினோவ் ஏலத்திற்கு ஒப்புதல் அளித்தார்.[25][26]

மார்ச் 15, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் சென்னை இந்த நிகழ்வின் புதிய நிகழிடமாக இருக்கும் என்று பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அறிவித்தது.[3]

நிகழ்வு

தொகு

தொடக்க விழா

தொகு

ஒலிம்பியாதின் தொடக்க நிகழ்வு 2022 சூலை 28 19:00 இ.சீ.நே மணிக்கு சவகர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விழாவைத் தொடக்கி வைத்தார்.[27] விழாவின் போது நரேந்திர மோடி பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் பற்றி குறிப்பிட்டார்.[28] [29]

பங்குபற்றிய அணிகள்

தொகு

திறந்த போட்டிகளில் 186 தேசியக் கூட்டமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 188 அணிகள் விளையாடின. இது ஒரு புதிய சாதனை ஆகும். போட்டிகளை நடத்திய இந்தியா மூன்று அணிகளைக் களமிறக்கியது. பெண்களுக்கான சுற்றுப் போட்டியில் 160 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 162 அணிகள் பங்கேற்றன. நெதர்லாந்து அண்டிலிசு, 2010 முதல் இல்லாத நிறுவனமாக இருந்தாலும், இந்தப் பெயரில் அணிகளைக் களமிறக்க அனுமதிக்கப்பட்டது.[30]

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாதில் பங்கேற்ற அணிகள்
குறிப்புகள்
  • சாய்வில் எழுதப்பட்டுள்ள நாடுகள் திறந்த நிகழ்வில் மட்டுமே களமிறக்கிய அணிகளைக் குறிக்கும்.
  • தடித்த எழுத்துகளில் உள்ள நாடுகள் பெண்கள் போட்டியில் மட்டும் அணிகளைக் களமிறக்கின.

போட்டி விதிமுறைகளும் நாட்காட்டியும்

தொகு

அனைத்துப் போட்டிகளுக்குமான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாகும், 40வது நகர்வுக்குப் பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடிகளாக கூடுதல் 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும். ஆட்டத்தின் போது எந்த நேரத்திலும் ஒரு வீரர் ஒப்புதலின் பேரில் சமநிலை வழங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படும், இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடும். ஒவ்வொரு அணியும் ஒரு இருப்பு வீரரைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறது.[31]

ஒவ்வொரு சுற்றிலும் வென்ற ஆட்டப் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றால், சமன்முறிவைப் பயன்படுத்துவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்படுகிறது: 1. சோன்போர்ன்-பெர்கர் அமைப்பு; 2. எடுத்த மொத்தப் போட்டிப் புள்ளிகள்; 3. எதிரணியின் போட்டிப் புள்ளிகளின் கூட்டுத்தொகை, குறைந்த ஒன்றைத் தவிர்த்து.[31]

தொடக்க நிகழ்வு சூலை 28 19:00 இசீநே மணிக்கு இடம்பெற்றது, இறுதி நிகழ்வு ஆகத்து 9 இல் 16:00 மணிக்கு இடம்பெற்றது. சுற்றுப் போட்டிகள் சூலை 29 இல் தொடங்கி ஆகத்து 9 இல் நிறைவடைந்தன. அனைத்துச் சுற்றுகளும் 15:00 மணிக்கு ஆரம்பமாயின. இறுதிச் சுற்று 10:00 மணிக்கு ஆரம்பமானது. ஆறாவது சுற்றுக்குப் பின்னர் ஆகத்து 4 ஓய்வு நாளாகும்.[32]

அனைத்து நாட்களும் இ.சீ.நே (ஒசநே+5:30)
தொ.நி தொடக்க நிகழ்வு நடுவர்கள் கூட்டம் தலைவர்கள் கூட்டம் 1 சுற்று ஓ.நா ஓய்வு நாள் இ.நி இறுதி நிகழ்வு
சூலை/ஆகத்து 28
வியாழன்
29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
விழாக்கள் தொ.நி இ.நி
கூட்டங்கள்
போட்டிச் சுற்று 1 2 3 4 5 6 ஓ.நா 7 8 9 10 11

அணிகளும் பெற்ற புள்ளிகளும்

தொகு

திறந்த பிரிவு

தொகு
 
உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சன் நோர்வே நாட்டிற்காக விளையாடுகிறார்.

போட்டியின் திறந்த பிரிவில் 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் போட்டியிட்டன. போட்டியை நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளைக் களமிறக்கியது.[12]

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் தரப்பட்டியலில் முதல் பத்து வீரர்களில் ஐவர் திறந்த பிரிவில் போட்டியிட்டனர். உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சன் நோர்வேக்காக விளையாடினார்.[33] முன்னாள் உலக வாகையாளர் விசுவநாதன் ஆனந்த் இம்முறை விளையாடவில்லை, அதற்குப் பதிலாக இந்திய அணிக்கு வழிகாட்டியாக இருக்க முடிவு செய்தார்.[34] உருசியா இப்போட்டியில் விளையாடத் தடை செய்யப்பட்டிருந்ததாலும், சீனா போட்டிகளில் இருந்து விலகியதாலும் 2023 உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் விளையாடவிருக்கும் இயான் நிப்போம்னிசி, டிங் லிரென் ஆகியோர் ஒலிம்பியாடில் விளையாடவில்லை.[35][36]

உருசியாவும் சீனாவும் இல்லாத நிலையில், 2771 என்ற சராசரி மதிப்பீட்டில் அமெரிக்கா தெளிவான வெற்றியாளராகப் பார்க்கப்படது, இது 2018 பத்தூமி ஒலிம்பியாது அணியின் சராசரியை விட ஒரு மதிப்பீடு புள்ளி குறைவானதாகும்.[37] போட்டி நடத்தும் நாடான இந்தியா, போட்டிக்கு முந்தைய சராசரி மதிப்பீடு 2696 உடன் இரண்டாவது வலிமையான அணியைக் கொண்டிருந்தது, இதில் விதித் சந்தோசு குச்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணன், அர்ச்சூன் எரிகாய்சி, எசு. எல். நாராயணன், கிருஷ்ணன் சசிகிரண் ஆகியோர் விளையாடினர்.[38][39] நார்வே அணியில் மாக்னசு கார்ல்சன் விளையாடியதால் அதன் சராசரியாக 2692 மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[40][41] செருமனி, உசுபெக்கிசுத்தான் அணிகளும் மற்றும் குறிப்பாக இந்தியாவின் இரண்டாவது அணியான ர. பிரக்ஞானந்தா, நிகால் சரின், குகேஷ் ஆகியோரின் இளம் அணிகளும் ஆச்சரியத்தைத் தரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.[37][40]

திறந்த நிகழ்வின் முடிவுகள்

தொகு
 
திறந்த நிகழ்வின் சிறந்த தனிநபர் வீரர் இங்கிலாந்தின் டேவிட் ஒவல்

திறந்த நிகழ்வில் உசுபெக்கிசுத்தான் 19 ஆட்டப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றது. எட்டு வெற்றிகளுடனும், மூன்று வெற்றி-தோல்வியற்ற போட்டிகளும் இவர்கள் இத்தொடரின் தோற்கடிக்கப்படாத அணியாகத் திகழ்கிறது.[42] வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்மேனியாவும் 19 புள்ளிகளைப் பெற்றது, ஆனால் 9-ஆவது சுற்றில் உசுபெக் அணியிடம் தோற்றதால் சமன்முறிவை இழந்தது.[43][44] 16 வயதான குகேஷ் டியின் வலுவான ஆட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது, குகேசு முதல் எட்டு சுற்றுகளில் தொடர்ந்து எட்டு ஆட்டங்களிலும் வென்றார், ஆனால் உசுபெக் அணியுடனான அவர்களின் போட்டியில் நோதிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வியடைந்தார், இது இரண்டாம் இந்திய இறுதி நிலையைத் தீர்மானித்தது.[43][45] மூன்று அணிகள் 17 ஆட்டப் புள்ளிகளைப் பெற்றன (ஒவ்வொன்றும் ஏழு வெற்றிகள், மூன்று சமன்கள், ஒரு தோல்வி): 1-ஆவது இந்திய அணி நான்காவதாகவும், அமெரிக்கா ஐந்தாவதாகவும், மல்தோவா ஆறாவதாகவும் வந்தன.[42] மூன்று தோல்விகளை சந்தித்த பேபியானோ கருவானா, போட்டியில் ஒரே ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்ற லெவோன் அரோனியன் ஆகியோரின் மந்தமான செயல்திறன் காரணமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி பதக்கம் வெல்லத் தவறியது.[43]

அதிக மதிப்பெண் பெற்ற தனிநபர் வீரராக டேவிட் ஹோவெல் (இங்கிலாந்து) விளையாடினார், அவர் 2898 செயல்திறன் மதிப்பீட்டுடன் சாத்தியமான 8 புள்ளிகளில் (ஏழு வெற்றிகள் மற்றும் ஒரு சமன்) 7½ புள்ளிகள் எடுத்தார்.[16] 2867 செயல்திறன் மதிப்பீட்டுடன் சாத்தியமான 11 இல் 9 மதிப்பெண் பெற்ற இந்தியா-2-இன் குகேஷ், 2774 செயல்திறன் மதிப்பீட்டுடன் 10க்கு 7½ மதிப்பெண் பெற்ற இந்தியா-2-ன் நிகால் சரின், உசுபெக்கித்தானின் சகோங்கிர் வாகிதோவ் ஆகியோருக்கும் தனிப்பட்ட தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.[46]

திறந்த நிகழ்வு[42]
# நாடு வீரர்கள் சராசரி
மதிப்பு
ஆ.பு dSB
    உஸ்பெகிஸ்தான் நோதிர்பெக் அப்துசத்தாரொவ், யாக்குபோயெவ், சிந்தாரொவ், வாகீதொவ், வொகீதொவ் 2625 19 435.0
    ஆர்மீனியா சர்கிசியான், மெல்கும்யான், தேர்-சகாக்கியான், பெத்ரசியான், கவ்கனிசியான் 2642 19 382.5
    இந்தியா-2 குகேசு, நிகால், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி 2649 18 Does not appear
4   இந்தியா அரிகிருசுணா, குச்ராத்தி, அர்ச்சுன், நாராயணன், சசிக்கிரண் 2696 17 409.0
5   ஐக்கிய அமெரிக்கா கருவானா, அரோனியான், சோ, தொமீங்கெசு, சாங்க்லாண்ட் 2771 17 352.0
6   மல்தோவா சித்வோ, மக்கோவிய், அமித்தேவிச்சி, பல்தாக், செரேசு 2462 17 316.5
7   அசர்பைஜான் மமித்யாரொவ், மமேதொவ், குசெய்னொவ், துரார்பைலி, அபாசொவ் 2680 16 351.5
8   அங்கேரி எர்தோசு, பெர்க்கெசு, பானுசு, கந்தோர், ஆக்சு 2607 16 341.5
9   போலந்து தூதா, வொச்தார்செக், பியோருன், மொராந்தா, பார்ட்டெல் 2683 16 322.5
10   லித்துவேனியா லவ்ருசாசு, இசுத்ரெமாவிசியசு, யூக்சுத்தா, புல்தீனெவீசியசு, கசாகவ்சுக்கி 2540 16 297.0
குறிப்புகள்
  • 2022 சூலை மதிப்பீடுகளின் அடிப்படையில் chess-results.com ஆல் கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீடுகள்.

போட்டியில் குறைந்தது எட்டு ஆட்டங்களில் விளையாடிய வீரர்களுக்கான செயல்திறன் மதிப்பீடுகளின்படி அனைத்து பலகைப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மூன்றாவது குழுவில் டேவிட் ஹோவெல் 2898 மதிப்பீட்டில் சிறந்த செயல்திறனைக் கொண்டிருந்தார்.[47]

பலகை தங்கம் வெள்ளி வெண்கலம்
பலகை 1 குகேஷ்
  இந்தியா-2
நோதிர்பெக் அப்துசத்தாரொவ்
  உஸ்பெகிஸ்தான்
மாக்னசு கார்ல்சன்
  நோர்வே
பலகை 2 நிகால் சரின்
  இந்தியா-2
நிக்கொலாசு தியோடோரொவ்
  கிரேக்க நாடு
நோதிர்பெக் யாக்குபோயெவ்
  உஸ்பெகிஸ்தான்
பலகை 3 டேவிட் ஹோவெல்
  இங்கிலாந்து
அர்ச்சூன் எரிகாய்சி
  இந்தியா
ர. பிரக்ஞானந்தா
  இந்தியா-2
பலகை 4 சகோங்கிர் வகீதொவ்
  உஸ்பெகிஸ்தான்
பவுலியசு புல்தினேவிசியசு
  லித்துவேனியா
சைம் சந்தோசு லத்தாசா
  எசுப்பானியா
இருப்பு மத்தேயசு பார்ட்டெல்
  போலந்து
இராபர்ட் கொவ்கானிசியான்
  ஆர்மீனியா
வலோதிமிர் ஒனிசூக்
  உக்ரைன்

பெண்களுக்கான நிகழ்வு

தொகு
 
பெண்களுக்கான நிகழ்வில் முன்னாள் பெண்கள் உலக வாகையாளர் மரியா முசிச்சுக் (உக்ரைன்) அதிக மதிப்பெண் பெற்ற வீராங்கனை.

பெண்கள் போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளன. போட்டியை நடத்தும் நாடான இந்தியா, மூன்று அணிகளை களமிறக்கியது.[13]

2022 சூலையில் வெளியிடப்பட்ட பிடே தரவரிசைப் பட்டியலின்படி, பெண்கள் போட்டியில் பத்து முன்னணி வீரர்களில் மரியா முசீச்சுக், அன்னா முசீச்சுக், நானா சக்னீத்செ மட்டுமே பங்கேற்கின்றனர். உலகின் அதிக தரமதிப்பீடு பெற்றவரான கூ யிஃபான், தற்போதைய மகளிர் உலக வாகையாளர் சூ வெஞ்சூன், முன்னாள் மகளிர் உலக வாகையாளர் டான் சோங்கி ஆகியோர் சீனாவின் விலகல் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை, அதேவேளை முன்னாள் மகளிர் உலக வாகையாளர் அலெக்சாண்ட்ரா கொசுத்தெனியூக், முதல் பத்து தரவரிசையில் உள்ள அலெக்சாண்ட்ரா கரியாச்கினா, கத்தரீனா லாக்னோ ஆகியோர் உருசியாவின் இடைநீக்கம் காரணமாக விளையாடவில்லை. முன்னாள் மகளிர் உலக வாகையாளர் அன்னா உசெனினா தனது சொந்த நாடான உக்ரைனுக்காக விளையாடுகிறார்.[48]

கடந்த 11 ஒலிம்பியாடுகளில் ஒன்பதில் தங்கப் பதக்கத்தை வென்ற உருசியாவும் சீனாவும் இல்லாததால், போட்டி நடத்தும் நாடான இந்தியா 2486 என்ற சராசரி மதிப்பீட்டில் முதல் தரவரிசையில் உள்ளது. இந்த அணியில் கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி ஆகியோரும், வைசாலி இரமேசுபாபு, தானியா சாச்தேவ், பக்தி குல்கர்ணி ஆகியோரும் முதல் பலகைகளில் உள்ளனர்.[13]

பெண்கள் பிரிவின் முடிவுகள்

தொகு
 
பெண்களுக்கான நிகழ்வில் போலந்தின் ஒலிவியா கியோல்பாசா சிறந்த தனிநபர் வீரர்

உக்ரைன் ஏழு வெற்றிகளுடனும் நான்கு சமநிலைகளுடனும், 18 ஆட்டப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இது அவர்களின் இரண்டாவது வெற்றியாகும், முன்னதாக 2006 இல் வென்றிருந்தது.[49] ஜார்ஜியா 18 ஆட்டப்புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், மோசமான சமன் முறிவைக் கொண்டிருந்ததால், வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. முதலாவது இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. ஏழு சுற்றுகளுக்குப் பிறகு இரண்டு புள்ளிகளுடன் போட்டியில் முன்னணியில் இருந்த இந்திய அணி, ஒன்பதாவது சுற்றில் போலந்திடமும், பதினொராவது சுற்றில் அமெரிக்காவிடமும் தோற்று, 17 ஆட்டப்புள்ளிகளைப் பெற்றது.[45][50] அமெரிக்காவும் கசக்கசுத்தானும் இந்தியாவைப் போலவே 17 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், பலவீனமான சமன்முறிவுகளைக் கொண்டிருந்ததால் அவை முறையே நான்காவதும், ஐந்தாவதும் இடங்களைப் பிடித்தன.[49]

பெண்களுக்கான போட்டியில் போலந்தைச் சேர்ந்த ஒலிவியா கியோலாபாசா அதிகபட்ச தனிநபர் புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவர் சாத்தியமான 11 புள்ளிகளில் (ஒன்பது வெற்றிகள், ஒரு சமன், ஒரு தோல்வி), 2565 செயல்திறன் மதிப்பீட்டில் 9½ புள்ளிகளை எடுத்தார்.[18][19] தனிப்பட்ட தங்கப் பதக்கங்களை சுவீடனின் பியா கிராம்லிங் (11 இல் 9½ புள்ளிகள், பலகை ஒன்றில் 2532 மதிப்பெண்கள்), ஜார்ஜியாவின் நினோ பாட்சியாசுவிலி (10 இல் 7½, பலகை இரண்டில் 2504 மதிப்பீடு செயல்திறன்), மங்கோலியாவின் பாட்-எர்டென் முங்குன்சுல் (நான்காவது பலகையில் 2460 மதிப்பெண்கள், 10க்கு 7½), செருமனியின் சனா சினைடர் (2414 மதிப்பீடு செயல்திறன், 10க்கு 9) ஆகியோர் பெற்றனர்.[51]

பெண்கள் நிகழ்வு[49]
# நாடு வீரர்கள் சராசரி
மதிப்பு
ஆ.பு dSB
    உக்ரைன் எம். முசிச்சுக், ஏ. முசிச்சுக், உசேனினா, பூக்சா, ஒசுமாக்' 2478 18 413.5
    சியார்சியா சாக்னித்சே, பத்சியாசுவிலி, சவாகிசுவிலி, மெலியா, அராபித்சே 2475 18 392.0
    இந்தியா அம்பி, அரிக்கா, வைசாலி, சாச்தேவ், குல்கர்ணி 2486 17 396.5
4   ஐக்கிய அமெரிக்கா தொக்கீர்சுனோவா, குரூசு, யில், சாத்தோன்சுக்கி, ஆபிரகாமியான் 2390 17 390.0
5   கசக்கஸ்தான் அப்துமாலிக், அசாயுபாயெவா, பலபாயேவா, நாக்பாயேவா, நுர்காலி 2365 17 352.0
6   போலந்து காசுலீன்சுக்கயா, சோச்கோ, கியோல்பாசா, மாலிச்கா, ருத்சீன்சுக்கா 2423 16 396.0
7   அசர்பைஜான் மம்மாத்சாதா, மம்மதோவா, பெய்துல்லாயெவா, பலஜாயேவா, பத்தாலியேவா 2399 16 389.0
8   இந்தியா-2 அகர்வால், ரவூட், சௌம்யா, கோமசு, தேசுமுக் 2351 16 369.5
9   பல்கேரியா சலிமோவா, பெய்ச்சேவா, கிராசுத்தேவா, அந்தோவா, ராதேவா 2319 16 361.0
10   செருமனி பாக்த்சு, ஐயின்மான், கிளேக், வாக்னர், சுனைடர் 2383 16 344.5
குறிப்புகள்
  • 2022 சூலை மதிப்பீடுகளின் அடிப்படையில் chess-results.com ஆல் கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீடுகள்.

போட்டியில் குறைந்தது எட்டு ஆட்டங்களில் விளையாடிய வீராங்கனைகளுக்கான செயல்திறன் மதிப்பீடுகளின்படி அனைத்து பலகைப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மூன்றாவது குழுவில் ஒலிவியா கியோல்பாசா 2565 மதிப்பீட்டில் சிறந்த செயல்திறனைக் கொண்டிருந்தார்.[51]

பலகை தங்கம் வெள்ளி வெண்கலம்
பலகை 1 பியா கிராம்லிங்கு
  சுவீடன்
எலீன் ரோபர்சு
  நெதர்லாந்து
சான்சயா அப்துமாலிக்
  கசக்கஸ்தான்
பலகை 2 நீனோ பத்சியாசுவிலி
  சியார்சியா
அன்னா முசிச்சுக்
  உக்ரைன்
கானிம் பலஜாயேவா
  அசர்பைஜான்
பலகை 3 ஒலிவியா கியோல்பாசா
  போலந்து
அன்னா உசேனினா
  உக்ரைன்
வைசாலி இரமேசுபாபு
  இந்தியா
பலகை 4 பாட்-எர்டின் முங்குன்சுல்
  மங்கோலியா
மரியா மலிக்கா
  போலந்து
தானியா சாச்தேவ்
  இந்தியா
இருப்பு சனா சினைடர்
  செருமனி
உல்விய்யா பத்தலியேவா
  அசர்பைஜான்
திவ்யா தேசுமுக்
  இந்தியா-2

கவலைகளும் சர்ச்சைகளும்

தொகு

உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகள்

தொகு

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையில் செயல்படும், ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாளன்று பரிந்துரைகளை வெளியிட்டது. உருசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் இணக்கமற்ற காரணத்தால் வரவிருக்கும் நான்கு ஆண்டு காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்தது.[52] சில நாட்களுக்குப் பிறகு, உருசிய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவு, உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சதுரங்க ஒலிம்பியாடு உட்பட திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் உருசியா நடத்தும் என்றும் அறிவித்தார்.[53] நவம்பர் 28 அன்று, உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி மற்றும் சதுரங்க ஒலிம்பியாடு ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையொப்பமிடப்பட்டுள்ளன என்று உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு பிடே அமைப்பு அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. ஒவ்வொரு நிகழ்வையும் ஒழுங்கமைக்க ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே நடைமுறையில் என்றும் அதனால் இரண்டு போட்டிகளும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட விதிவிலக்குகளின் கீழ் வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கோவிட்-19 பெருந்தொற்று

தொகு

மார்ச் 24, 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் நாளன்று பிடே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் பெருகி வரும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நோய் தாக்கத்தின் விளைவாக 2021 ஆம் ஆண்டு கோடையில் நடைபெறவிருந்த சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் ஒத்திவைக்கப்படும் ஏன்றும் அவை மீண்டும் திட்டமிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது,[7][54]

உருசிய உக்ரைன் போர்

தொகு

உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் காரணமாக, FIDE 26 பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் நாளன்று உருசியாவில் போட்டிகள் நடைபெறாது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. கூடுதலாக, குறைபாடுகள் உள்ளவர்களுக்கான முதல் சதுரங்க ஒலிம்பியாடு தொடக்க விழா போட்டிகளும் மாசுகோவில் நடக்கவிருந்த 93 ஆவது பிடே கூட்டமைப்பின் கூட்டமும் மாற்றப்பட்டன.[8]

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. திறந்தநிலை - சில வேளைகளில் "ஆண்கள் பிரிவு" என்று குறிப்பிடப்பட்டாலும், இந்த பிரிவில் அனைத்து வீரர்களும் விளையாடுவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  2. "44th Chess Olympiad 2022 Calendar". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு.
  3. 3.0 3.1 "Chennai to host Chess Olympiad". தி இந்து. 16 March 2022.
  4. "Chess Olympiad: Gender disparity out in the open".
  5. "FIDE: 2020 Chess Olympiad to be in Moscow; Khanty-Mansiysk to host opening ceremony". tass.com. TASS. 5 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  6. "Dates for the Candidates and the 44th Chess Olympiad announced". fide.com. FIDE. 12 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  7. 7.0 7.1 Peter Doggers (24 March 2020). "FIDE Postpones Chess Olympiad To 2021". Chess.com. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  8. 8.0 8.1 "2022 Chess Olympiad to be moved from Moscow". fide.com. FIDE. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
  9. "Chennai to host first ever Chess Olympiad in India from July 28". Sportstar. 12 April 2022. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.
  10. "44th Olympiad Chennai 2022 Open – Alphabetical list of players in the Open event". Chess-results.com.
  11. "44th Olympiad Chennai 2022 Women". Chess-results.com.
  12. 12.0 12.1 "44rd Olympiad Chennai 2022 Open". Chess-results.com.
  13. 13.0 13.1 13.2 "44rd Olympiad Chennai 2022 Open". Chess-results.com.
  14. Rakesh Rao (23 July 2022). "Chess Olympiad 2022: How is Chennai preparing for the FIDE event". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  15. "On the way to Chennai for the Arbiters' Team". FIDE. 5 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  16. 16.0 16.1 "44th Olympiad Chennai 2022 Open – England". Chess-results.com.
  17. Colin McGourty (9 August 2022). "Uzbekistan and Ukraine win Chennai Olympiad". chess24. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.
  18. 18.0 18.1 "44th Olympiad Chennai 2022 Women – Poland". Chess-ratings.com.
  19. 19.0 19.1 "The winners of the 44th Chess Olympiad (Women's Tournament)". ChessBase. 10 August 2022. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.
  20. Peter Doggers (7 August 2022). "Dvorkovich Re-elected As FIDE President". Chess.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
  21. "Russian re-elected head of chess body FIDE, sees off Ukrainian challenger". France 24. 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
  22. "2020 Chess Olympiad: Bidding Procedure". Chess Daily News. 16 March 2016. Archived from the original on 17 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "FIDE Handbook: Regulations of the Chess Olympiad" (PDF). FIDE.
  24. "2020 Chess Olympiad to be held in Khanty-Mansiysk". asertac.az. AZERTAC. 14 September 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  25. "87th FIDE Congress Baku, Azerbaijan General Assembly 11-13 September 2016" (PDF). fide.com. FIDE. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  26. "Russia to host 2020 World Chess Olympiad". tass.com. TASS. 13 September 2016. Archived from the original on 9 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. "Chess Olympiad 2022: World's biggest Chess championship to begin next week, here's all you need to know". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.
  28. சதுரங்க வல்லபநாதர் கோவிலை பற்றி பிரதமர் மோடி பேசியது எப்படி?
  29. Tamil Nadu even has a temple for chess: Modi
  30. "FIDE Directory – Netherlands Antilles". FIDE.
  31. 31.0 31.1 "FIDE Handbook: Olympiad Pairing Rules". FIDE.
  32. "44rd Chess Olympiad Batumi – Schedule". official website. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.
  33. Tarjei Svensen (24 May 2022). "Carlsen heads Norwegian team in Chennai Olympiad". chess24. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  34. "Respect Anand's decision to not participate in Chess Olympiad: RB Ramesh". Sportstar. 2 May 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  35. "Russia and Belarus teams suspended from FIDE competitions". FIDE. 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  36. "China not to take part in Chess Olympiad in Chennai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  37. 37.0 37.1 André Schulz (8 July 2022). "Chess Olympiad in Chennai: The USA is favourite, China and Russia do not take part". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  38. "44th Olympiad Chennai 2022 Open – India". Chess-results.com.
  39. Tarjei Svensen (6 June 2022). ""Breathtaking" US team expected to be favourites in Chennai". chess24. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  40. 40.0 40.1 Carlos Alberto Colodro (28 July 2022). "Chennai Olympiad: US big favourite, India looking to leave a mark". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  41. "44th Olympiad Chennai 2022 Open – Norway". Chess-results.com.
  42. 42.0 42.1 42.2 "44th Olympiad Chennai 2022 Open – Final Ranking after 11 Rounds". Chess-results.com.
  43. 43.0 43.1 43.2 "Uzbekistan youngsters surprise winners of 44th Chess Olympiad". FIDE. 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  44. "Uzbek kids lead 44th Chess Olympiad". FIDE. 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  45. 45.0 45.1 Carlos Alberto Colodro (9 August 2022). "Chennai R10: Uzbekistan and Armenia share the lead, heartbreak for Gukesh". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  46. "44th Olympiad Chennai 2022 Open – Board-prizes (Final Ranking after 11 Rounds)". Chess-results.com.
  47. "44th Olympiad Chennai 2022 Open – Board Prizes". Chess-results.com.
  48. "44th Olympiad Chennai 2022 Women – Team-Composition without round-results". Chess-results.com.
  49. 49.0 49.1 49.2 "44th Olympiad Chennai 2022 Women – Final Ranking after 11 Rounds". Chess-results.com.
  50. "Women's Olympiad: Four-way tie on the top with two rounds to go". FIDE. 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  51. 51.0 51.1 "44th Olympiad Chennai 2022 Women – Board-prizes (Final Ranking after 11 Rounds)". Chess-results.com.
  52. "WADA Compliance Review Committee recommends series of strong consequences for RUSADA non-compliance". WADA. 25 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  53. "WADA's recommended sanctions pose no threat to 2020 Chess Olympiad in Russia". tass.com. TASS. 27 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
  54. "Statement by the FIDE Council regarding the Chess Olympiad". fide.com. FIDE. 24 March 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.