எசு. எல். நாராயணன்

இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்

எசு. எல். நாராயணன் (S. L. Narayanan) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் இவர் பிறந்தார். 2015 ஆம் ஆண்டு கிராண்டுமாசுட்டர் பட்டத்தைப் பெற்ற இவர் இந்தியாவின் 41 ஆவது கிராண்டுமாசுட்டர் என்ற சிறப்பைப் பெற்றார்.

எசு.எல். நாராயணன்
S.L. Narayanan
நாடுஇந்தியா
பிறப்பு10 சனவரி 1998 (1998-01-10) (அகவை 26)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2015)
பிடே தரவுகோள்2658 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2658 (அக்டோபர் 2021)
தரவரிசைஇல. 84 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைஎண். 82 (அக்டோபர் 2021)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நாராயணன் கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் பிறந்தார். முன்னாள் கேரள மாநில வெற்றியாளர் பி. சிறீகுமாரால் தொழில்ரீதியாக சதுரங்கப் பயிற்சி பெற்றார். பின்னர் பன்னாட்டு மாசுட்டர் வருகீசு கோசி அவர்களால் தொடர் பயிற்சி பெற்றார்.

தொழில்

தொகு

நாராயணன் 2007 ஆம் ஆண்டு தனது முதல் வெற்றிக்கோப்பையான கேரளா மாநில 9 வயதுக்குட்பட்ட சதுரங்க வெற்றியாளர் கோப்பையை வென்றார். அதே நாளில்தான் கேரளாவுக்கு முதல் கிராண்டுமாசுட்டர் பட்டம் ஜி.என்.கோபாலுக்கு கிடைத்தது. நாராயணன் 2008 ஆம் ஆண்டில் 11 வயதுக்குட்பட்ட கேரள மாநில சதுரங்க வெற்றியாளர் பட்டம், 2010 ஆம் ஆண்டில் 13 வயதுக்குட்பட்ட மாநில வெற்றியாளர் பட்டம், 2011 ஆம் ஆண்டில் மாநில மிக இளையோர் வெற்றியாளர் பட்டம், 2012 ஆம் ஆண்டில் மாநில இளையோர் வெற்றியாளர் பட்டம், 2012 ஆம் ஆண்டில் மாநில மூத்தோர் பிரிவில் 2ஆவது இடம் என ஒவ்வோர் ஆண்டும் சதுரங்க விளையாட்டில் சாதனைகள் நிகழ்த்தினார். 2010 ஆம் ஆண்டு மே மாதம் புதுதில்லியில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அந்த போட்டியில், கிராண்டுமாசுட்டர் பரிமராசன் நேகியுடன் இவர் தனது ஆட்டத்தை சமனில் முடித்தார். 12 ஆவது வயதில் பெண் பன்னாட்டு மாசுட்டர் கிரண் மணிசா மொகந்தியை வென்றார். 2011 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் மகாராட்டிர மாநிலம் புனேவில் லக்சயா மற்றும் ஃபிளேம் பள்ளி நடத்திய சதுரங்க முகாமான முதல் நகர்வில் கிராண்டுமாசுட்டர் யெவ்கெனி விளாடிமிரோவின் பயிற்சியில் கலந்து கொண்டார்.

2010 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கிராண்டுமாசுட்டருக்கு எதிராக தனது முதல் போட்டியை நாராயணன் விளையாடினார். புதுதில்லியில் நடந்த பார்சுவநாத் திறப்பு சதுரங்கப் போட்டியின் போது, இவரது முதல் சுற்றில் எதிர்த்து விளையாட வேண்டிய ஈரானிய கிராண்டுமாசுட்டர் நிலை வீரரான எக்சான் மகாமி கெம் விமானம் தாமதமானதால் சரியான நேரத்தில் வரமுடியாமல் போனது. நாராயணணுக்கு நேரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி அந்த ஆட்டத்தில் வெற்றிப் புள்ளி வழங்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு தாமதமாக வந்த சதுரங்க வீரருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது நியாயமானது என்று கூறிய நாராயணன் எளிமையாகக் கிடைத்த வெற்றியை ஏற்க மறுத்து ஒரு கிராண்டு மாசுட்டருக்கு எதிராக தான் விளையாடுவதையே விரும்புவதாக கூறி ஆச்சர்யமூட்டினார்.

சதுரங்க வாழ்க்கை

தொகு
  • 2010: புதுதில்லியில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க வெற்றியாளர் போட்டியின் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்.
  • 2011: சென்னையில் நடைபெற்ற தேசிய மிக இளையோர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம். செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த 41 ஆவது தேசிய இளையோர் போட்டியில் 7 ஆவது இடம்.
  • 2012: துருக்கியில் நடந்த 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஆசிய வெற்றியாளர் பதக்கம். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பொதுநலவாய சதுரங்கப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் திறந்த நிலை பிரிவில் 7ஆவது இடம்.
  • 2013: லக்னோவில் நடைபெற்ற 43 ஆவது தேசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 4 ஆவது இடம்.
  • 2014: புனேவில் நடைபெற்ற 44ஆவது தேசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் தங்கம்.
  • 2015: பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் சிறந்த இளையோர் பட்டம். கிர்கிசுதான் குடியரசின் பிசுகெக்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.
  • 2016: ஆசிய இளையோர் பிளிட்சு சதுரங்கப் போட்டியில் தங்கம். ஆசிய திறந்தநிலை பிரிவில் வெள்ளி, விரைவு பிரிவில் வெண்கலம்.
  • 2017: மாசுகோவில் நடந்த ஏரோஃப்ளாட் பிளிட்சு வெற்றியாளர் போட்டியில் உலக பிளிட்சு வெற்றியாளரான செர்கி கர்சாகினை வென்றார்.
  • 2018: 25 ஆவது அபுதாபி பன்னாட்டு சதுரங்க திருவிழா 2018 போட்டியில் பிளிட்சு பிரிவில் வெண்கலம். 2018 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் போட்டியில் வெண்கலம்
  • 2019: அமெரிக்க சதுரங்க கிராண்டுமாசுட்டர்களான உகாரு நகமுரா, வெசுலி சோ ஆகியோருக்கு எதிராக விளையாடி வெற்றி.[1] இதே ஆண்டு எசுப்பானியாவில் நடைஅபெற்ற சாதுரனக்கப் போட்டியில் போலந்து கிராண்டுமாசுட்டர் பார்டெல் மேத்தியூசை வென்று பட்டம்.
  • ஆசிய கண்டங்களிடை சதுரங்கப் போட்டியில் 4 ஆவது இடம்.
  • பொதுநலவாய 2019 சதுரங்கப் போட்டியில் 4 ஆவது இடம். இதன மூலம் 2019 சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றார். கேரள நிகழ்நேர சதுரங்கப்போட்டியில் வென்ற பரிசுத் தொகையை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இதே ஆண்டில் உலக சதுரங்க வெற்றியாளரான மேக்னசு கார்ல்சனை எதிர்கொண்டார்.[2]
  • 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓபன் "ஏ" போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Doggers (PeterDoggers), Peter. "SL Narayanan Wins Biggest Titled Tuesday Ever". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  2. "Grandmaster Narayanan to take on world champion Carlsen | Chess News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  3. "Chess-Results Server Chess-results.com - Riga Technical University Open 2021 - Tournament A". chess-results.com.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._எல்._நாராயணன்&oldid=3776463" இலிருந்து மீள்விக்கப்பட்டது