நிகால் சரின்
நிகால் சரின் (Nihal Sarin) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சதுரங்க வீரர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு சதுரங்க மேதையான இவர், 14 வயதில் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தைப் பெற்றார். 2600 என்ற எலோ தரவரிசையை கடந்த வரலாற்றில் நான்காவது இளைய வீரர் என்ற சாதனையை 14 வயதில் சாதித்தார் [1] [2] 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிக்கான இந்திய சதுரங்க அணியில் இடம் பிடித்துள்ளார்.
நிகால் சரின் Nihal Sarin | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2019 ஆம் ஆண்டில் நிகால் சரின் | ||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 சூலை 2004 திருச்சூர், இந்தியா | |||||||||||||||||||||||||||||||
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2018) | |||||||||||||||||||||||||||||||
பிடே தரவுகோள் | 2662 (திசம்பர் 2021) | |||||||||||||||||||||||||||||||
உச்சத் தரவுகோள் | 2662 (திசம்பர் 2021) | |||||||||||||||||||||||||||||||
தரவரிசை | இல. 78 (திசம்பர் 2021) | |||||||||||||||||||||||||||||||
உச்சத் தரவரிசை | எண். 76 (சனவரி 2022) | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இணையவழியில் நடைபெற்ற 2020 பிடே சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்திய அணியின் ஒரு பகுதியாக நிகால் தங்கப் பதக்கம் வென்றார். [3] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி விரைவு வடிவ 18 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார் [4] .2019 ஆம் ஆண்டில் 15 வயதாக இருந்தபோது நிகால் 2019 உலகக் கோப்பையில் விளையாடிய இளைய இந்தியராக ஆனார். அங்கு இவர் இரண்டாவது சுற்றை எட்ட முடிந்தது. [5]
நிகால் 2014 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடந்த 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக வெற்றியாளர் ஆனார். [6] 2015 ஆம் ஆண்டில், கிரீசின் போர்டோ காரசில் நடந்த 12 வயதுக்குட்பட்ட உலக வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். [7] [8]
குழந்தைப் பருவம்
தொகுநிகால் 2004 ஆம் ஆண்டு சூலை 13 அன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிறந்தார். தந்தை சரின் அப்துல்சலாம் ஒரு தோல் மருத்துவராகவும், தாயார் சிச்சின் அம்மானம் வீட்டில் உமர் ஒரு மனநல மருத்துவராகவும் உள்ளனர். நிகால் தனது முதல் சில ஆண்டுகளை கோட்டயத்தில் கழித்தார்.
மூன்று வயதிற்குள் 190 நாடுகளின் தலைநகரங்களையும் கொடிகளையும் அவரால் அடையாளம் காண முடிந்தது. அதே வயதில், பூச்சிகள் மற்றும் தாவரங்களின் அறிவியல் பெயர்களை அவர் நினைவிலிருந்து தெரிந்து கொள்ளவும், சொல்லவும் முடிந்தது. [9] மேல் மழலையர் பள்ளியில் இருந்த நேரத்தில், நிகால் சரளமாக ஆங்கிலம் பேசினார், மேலும் ஆறு வயதில், முதல் வகுப்பில் சேர்ந்தார், பதினாறு வரை அனைத்து பெருக்கல் அட்டவணைகளையும் அறிந்திருந்தார். [10]
நிகால் ஆறாவது வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். பள்ளி விடுமுறையில் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தந்தைதான் நிகாலுக்கு ஒரு சதுரங்கப் பலகையை அறிமுகப்படுத்தினார். தாத்தா ஏ.ஏ.உம்மர் கோட்டயத்தில் எக்செல்சியர் ஆங்கிலப் பள்ளியின் மாணவராக இருந்த நிகாலுக்கு சதுரங்க விதிகளைக் கற்றுக் கொடுத்தார். பள்ளியின் சதுரங்கப் பயிற்சியாளர் தொடக்கத்தில் வாரம் ஒருமுறை பயிற்றுவித்தார்.
வெற்றிகள்
தொகுநிகால் 2011 ஆம் ஆண்டு 07 வயதுக்குட்பட்டோருக்கான கேரள மாநில வெற்றியாளர் பட்டத்தையும், 09 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை இரண்டு முறையும், 11 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை இரண்டு முறையும், 15 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை ஒரு முறையும் வென்றார். 2015 ஆம் ஆண்டு மாநில முதியோர் வெற்றியாளர் போட்டியில் 10 வயதில் இரிஞ்சாலக்குடாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு தேசிய வெற்றியாளர் போட்டியில் கேரளாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றார். 8 மற்றும் 10 வயதில் முறையே 19 வயதுக்குட்பட்ட மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.
2013 ஆம் ஆண்டு சென்னையில் 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய வெற்றியாளராகவும் 2014 ஆம் ஆண்டு பூரியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய வெண்கலப் பதக்கம் வென்றவராகவும், 2015 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய வெள்ளிப் பதக்கத்தை வென்றவராகவும் புகழ் பெற்றார். [11]
உலக இளையோர் போட்டி
தொகுநிகால் 2013 ஆண்டு அல்-ஐனில் நடந்த 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக விரைவு சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் . இதே பிரிவில், 2014 ஆம் ஆண்டு தாசுகண்டில் நடந்த ஆசிய இளையோர் விரைவு சதுரங்கப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்ற 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் நிகாலுக்கு பெரிய அறிமுகம் கிடைத்தது. இவர் 9/11 புள்ளிகளை எடுத்து 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியனாக முடிசூட்டினார். இந்த சாதனைக்காக, பிடேவும் இவருக்கு பட்டம் வழங்கியது.
அடுத்த ஆண்டில், 73 நாடுகளைச் சேர்ந்த 202 பங்கேற்பாளர்களில் 28 வது தரவரிசையில் தொடங்கி, உலக இளையோர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியின் கடைசி சுற்றுகளில், நிகால் தனது பிரிவின் முதல் இரண்டு தரவரிசை வீரர்களை தொடர்ச்சியாக தோற்கடித்தார்: ஏழாவது சுற்றில் அவோண்டர் லியாங்கையும் எட்டாவது சுற்றில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ்வையும் தோற்கடித்தார். இதனால் 2300 என்ற தரப்புள்ளிகளைக் கடந்து, இதே ஆண்டில் உலக சதுரங்க சம்மேளனம் வழங்கும் பிடே மாசுட்டர் பட்டமும் பெற்றார்.
2016 ஆம் ஆண்டு சியார்ச்சியாவின் படுமியில் நடைபெற்ற போட்டியில் 8½/11 புள்ளிகளைப் பெற்று மற்ற மூவருடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இறுதியில் இவருக்கு நான்காவது இடம் கிடைத்தது.
2017 திசம்பரில் நடந்த உலக இளைஞர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில், இந்தியா கிரீன் அணிக்காக விளையாடி நாடு வெள்ளிப் பதக்கத்தைப் பெற உதவினார். தனிப்பட்ட வீரருக்கான தங்கத்தையும் வென்றார்
18 வயதுக்குட்பட்டோருக்கான உலக இணையவழி 2020 ஆம் ஆண்டு போட்டியில் ஆர்மேனியாவைச் சேர்ந்த கிராண்டு மாசுட்டர் சாந்த் சர்க்சியனை 1.5:0.5 என்ற இறுதி புள்ளிகளுடன் தோற்கடித்து வென்றார்.
பன்னாட்டுப் போட்டிகள்
தொகு2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஏழு வயதாக இருக்கும்போது நிகால் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். கேரள சதுரங்க சங்கம், அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் சொந்த மாநிலமான கேரளாவிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்ட வழக்கமான பிடே மதிப்பிடப்பட்ட போட்டிகளில் விளையாடினார்.
2014 ஆம் ஆண்டில், உக்ரைனிய திமிட்ரி கோமரோவ் உடன் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். பயிற்சியாளர் விளையாடிய நாட்களில் பன்னாட்டு வெற்றிகளைப் பெற்ற அனுபவம் வாய்ந்த பயிற்சியாளராவார். 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் வெற்றிக்குப் பிறகு, நிகால் இந்தியாவின் புனேவில் நடந்த உலக இளையோர் வெற்றியாளர் போட்டியில் சுவீடனின் பன்னாட்டு மாசுட்டரான இயோனாதன் வெசுடர்பெர்க் என்ற வீரருக்கு எதிராக நிகால் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.[12] ஒரு வருடத்திற்கு நாக்பூரில் நடந்த தேசியப் போட்டி உட்பட, இந்தியாவில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து பட்டம் பெற்ற வீரர்களை சமநிலை முடிவு நிலைக்கு ஆட்டத்தை திட்டமிட்டு விளையாடினார்.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவிற்கு வெளியே தனது முதல் பன்னாட்டு போட்டியில் விளையாடினார். பன்னாட்டு மாசுட்டர் தகுதிக்கான விதிமுறையை பதிவு செய்தார். இந்த செயல்பாட்டில் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கிராண்ட்மாசுட்டரை தோற்கடித்தார்.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, P. K. Ajith. "Nihal Sarin becomes third youngest to cross 2600 on FIDE rating". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-07.
- ↑ Shah, Sagar (2019-05-05). "Nihal Sarin crosses 2600 on the live rating list at Tepe Sigeman & Co". ChessBase India. பார்க்கப்பட்ட நாள் 2019-09-07.
- ↑ "India, Russia announced joint winners of Chess Olympiad after controversial finish". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "Nihal Sarin, Rakshitta Ravi and D Gukesh win gold medals at Online World Youth and Cadet Rapid Chess Championships - Sports News, Firstpost". Firstpost. 2020-12-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ George, Arun (September 13, 2019). "Chess World Cup: Nihal Sarin's win leaves Magnus Carlsen in awe". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "World Youth Chess Championships 2014". Chess-Results.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
- ↑ "World Youth Ch 2015 - Open under 12". Chess-Results.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
- ↑ "WYCC 2015 final: India! India! India!". https://en.chessbase.com/post/wycc-2015-final-india-india-india.
- ↑ P, Jinoy Jose. "He's got the moves". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-16.
- ↑ "When chess becomes a language..." chessbase.in. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
- ↑ "The Boy's Gambit: Inside the world of Nihal Sarin, a chess champion at the age of 10". The Indian Express. 2015-03-15. http://indianexpress.com/article/sports/sport-others/the-boys-gambit-inside-the-world-of-nihal-sarin-a-chess-champion-at-the-age-of-10/.
- ↑ "10-year-old Nihal Sarin shocks Westerberg at world junior championships". 2014-10-07. http://www.sportskeeda.com/chess/nihal-sarin-shocks-westerberg.
- ↑ "Cappelle: Anurag shines for India". chessbase.in. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
புற இணைப்புகள்
தொகு- நிகால் சரின் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு