வைசாலி இரமேசுபாபு

இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்

வைசாலி இரமேசுபாபு (Vaishali Rameshbabu, பிறப்பு: 21 சூன் 2001) இந்திய சதுரங்க பேராதன் (கிராண்ட்மாசுடர்) ஆவார்.[1][2] வைசாலியும் இவரது தம்பி பிரக்ஞானந்தாவும் பேராதன் பட்டத்தைப் பெற்ற முதல் உடன்பிறப்புகள் ஆவர். அத்துடன், உலக சதுரங்க வாகைக்கான வேட்பாளர் போட்டி ஒன்றுக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறப்புகளும் இவர்களே.[3] வைசாலிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[4]

ஆர். வைசாலி
R Vaishali
2023 இல் வைசாலி
முழுப் பெயர்இரமேசுபாபு வைசாலி
நாடுஇந்தியா
பிறப்பு21 சூன் 2001 (2001-06-21) (அகவை 23)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்கிராண்ட்மாசுட்டர் (2024)
பிடே தரவுகோள்2401 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2497 (திசம்பர் 2023)
பதக்கத் தகவல்கள்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வைசாலி தமிழ்நாடு, சென்னையில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவர் பேராதன் ர. பிரக்ஞானந்தாவின் அக்கா ஆவார். இவரது தந்தை ரமேஷ்பாபு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது தாயார் நாகலட்சுமி.

சதுரங்க வாழ்க்கை

தொகு

வைசாலி 2012 இல் அகவை 12 இற்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளையோர் சதுரங்க வாகை, 2015 இல் அகவை 14 இற்குட்பட்டோருக்கான வாகை ஆகியவற்றை வென்றார்.[5] 2013 ஆம் ஆண்டில், தனது 12-ஆவது அகவையில், பின்னாளில் உலக சதுரங்க வாகையாளரான மாக்னசு கார்ல்சனைத் தனது சொந்த ஊரான சென்னையில் இருந்தபோது நடந்த ஒரு போட்டியில் தோற்கடித்தார்.[6][7]

2016 இல், வைசாலி பெண் பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றார். அக்டோபர் 2016 இல், இவர் இந்தியாவில் 16-அகவைக்குட்பட்டோரில் இரண்டாவது இடத்தையும், உலகின் 12-ஆவது இடத்தையும் அடைந்தார். அந்த நேரத்தில், அவர் 2300 என்ற எலோ மதிப்பீட்டைக் கொண்டிருந்தார்.

2018 ஆகத்து 12 அன்று லாத்வியா, ரீகா நகரில் நடந்த ரீகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக திறந்த சதுரங்கப் போட்டியில் தனது இறுதி நெறியை முடித்ததன் மூலம் அவர் பெண் பேராதன் (கிராண்ட்மாஸ்டர், WGM) ஆனார்.[8]

வைசாலி 2020 இணைய-வழி ஒலிம்பியாது போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தார்,[9] இப்போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.[10] 2021-இல் வைசாலி தனது உலகாதன் (பன்னட்டு மாசுட்டர், IM) பட்டத்தைப் பெற்றார். 2022-இல், 8-ஆவது பிசர் நினைவுப் பதக்கத்தை வென்றார், இப்போட்டியில் 7.0/9 மதிப்பெண்களைப் பெற்று தனது இரண்டாவது பேராதன் நெறியை வென்றார்.[11][12][13][14]

2022 பிடே மகளிர் வேக-சதுரங்க வாகையில் பங்கேற்க வைசாலி அழைக்கப்பட்டார்,[15] இங்கு பெண்கள் உலக மின்-சதுரங்க (பிளிட்சு) வாகையாளரான பிபிசரா அசௌபாயெவா 16-ஆவது சுற்றிலும்,[16] காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லியையும் தோற்கடித்தார்.[17][18]

வைசாலி 2023 டாட்டா ஸ்டீல் சதுரங்க சுற்றுப்போட்டியில் விளையாடி, 4.5/14 மதிப்பெண்கள் பெற்றார், அத்துடன் இரண்டு 2600 மதிப்பிடப்பட்ட பேராதன்களான லூயி பாலோ சுபி, செர்குசு பெச்சாக் ஆகியோரை வீழ்த்தினார். மொத்தத்தில் இவர் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[19]

2023 கத்தார் திறந்த மாசுடர்சு சுற்றை வைசாலி 5/9 மற்றும் 2609 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் முடித்த பிறகு தனது இறுதி பேராதன் நெறிமுறையைப் பெற்றார்.[20] அத்துடன் பெண்களுக்கான சிறந்த பரிசையும் வென்றார்.[20]

மாண் தீவில் நடைபெற்ற 2023 பிடே மகளிர் கிராண்ட் சுவிசு சுற்றில் வைசாலி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் 8.5/11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார், இதன் மூலம் 2024 இல் கனடாவின் தொராண்டோவில் நடைபெறவிருக்கும் பெண்கள் வேட்பாளர்கள் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றார்.[21][22] போட்டியின் முடிவில் அவரது நேரடி மதிப்பீடு பேராதன் பட்டத்திற்குத் தேவையான 2500 புள்ளிகளை விட 3 புள்ளிகள் குறைவாக இருந்தது[22], ஆனால் அவரது அடுத்த சுற்றில் முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற பிறகு அவர் 2501 ஐ எட்டினார், இதனால் பேராதன் பட்டத்தையும், பெண்களில் 11-ஆவது இடத்தையும் பெற்றார். இவரும் அவரது இளைய சகோதரர் ர. பிரக்ஞானந்தாவும் அந்தந்த வேட்பாளர்களுக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறப்புகள் ஆவார்.[22][23][24]

மேற்கோள்கள்

தொகு
 1. "Vaishali, Rameshbabu". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
 2. "FIDE Title Application (GM)" (PDF).
 3. "Vaishali and Praggnanandhaa make history as the first-ever brother-sister duo to become Grandmasters". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-02. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
 4. "Ministry of Youth Affairs & Sports announces National Sports Awards 2023". pib.gov.in. 20 December 2023. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
 5. "Rameshbabu Praggnanandhaaa celebrity xyz page". பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
 6. The girl who defeated Magnus at the age of 12 | Vaishali Rameshbabu (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-10-16
 7. "Carlsen happy with arrangements for World Championship match". The Times of India. 2013-08-19. https://timesofindia.indiatimes.com/sports/chess/carlsen-happy-with-arrangements-for-world-championship-match/articleshow/21918747.cms. 
 8. "R. Vaishali becomes Grand Master". 13 August 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019.
 9. "The entire Gold medal winning Indian team from Online Olympiad 2020 interviewed by ChessBase India - ChessBase India". www.chessbase.in. 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
 10. "The Triumph of the twelve brave Olympians - ChessBase India". www.chessbase.in. 2020-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
 11. "Asian champ Vaishali sets her sight at Grand Master title". Business Standard India. Press Trust of India. 2017-05-24. https://www.business-standard.com/article/pti-stories/asian-champ-vaishali-sets-her-sight-at-grand-master-title-117052401304_1.html. 
 12. Rao, Rakesh (4 May 2022). "Fischer Memorial: Vaishali makes second GM norm, wins title". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
 13. News9 Staff (2022-05-04). "Indian woman grandmaster R Vaishali secures 2nd GM norm by winning Greek chess event". NEWS9LIVE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 14. "Vaishali triumphs at 8th Fischer Memorial 2022, scores her second GM-norm - ChessBase India". www.chessbase.in. 2022-05-04. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
 15. Vaishali Rameshbabu Wins Women's Speed Chess Championship Qualifier #2 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-09-27
 16. "FIDE WSCC 2022 Round of 16: Vaishali eliminates World Blitz Women champion Bibisara Assaubayeva - ChessBase India". www.chessbase.in. 2022-06-14. பார்க்கப்பட்ட நாள் 2022-07-25.
 17. "Vaishali R eliminates Dronavalli to reach semifinals". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-25.
 18. West (NM_Vanessa), Vanessa. "Rising Star Knocks Out Experienced Compatriot". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-25.
 19. "Challengers standings". Tata Steel Chess Tournament 2023 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
 20. 20.0 20.1 "Nodirbek Yakubboev wins Qatar Masters in blitz tiebreaks". Chess News (in ஆங்கிலம்). 2023-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-10-21.
 21. "Vaishali Wins Women's Grand Swiss, Vidit Also Gets Close To Title Triumph". News18 (in ஆங்கிலம்). 2023-11-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
 22. 22.0 22.1 22.2 Sportstar, Team (2023-11-05). "Vaishali draws last round to win FIDE Women Grand Prix 2023". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
 23. "Results & Standings - FIDE Women's Grand Swiss 2023". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-09.
 24. Gupta, Nikita. "Meet The First Sibling Duo To Qualify As FIDE Chess Candidates". www.shethepeople.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_இரமேசுபாபு&oldid=3950027" இலிருந்து மீள்விக்கப்பட்டது