எமிலி இலெவிசுகியூ

எமிலி இலெவிசுகியூ (Emily Levesque) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் பொருண்மைமிகு விண்மீன்களின் ஆய்வுக்கும் அவற்றைப் பயன்படுத்தி பால்வெளி உருவாக்க ஆய்வுக்கும் பெயர்பெற்றவர் ஆவர். இவர் 2014 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். இது இவருக்குப் புதுமையான காம்மாக் கதிர் வெடிப்பு வழி ஆய்வுக்காக தரப்பட்டது.[2] இவர் சுலோவான் ஆய்வுநல்கையை 2017 இல் பெற்றார்.[3] இவரும் இரேச்சல் பெசான்சனும் கிரேன்ட் ஆர். டிரெம்பிளேவும் 2015 இல் தாக்கம் மிக்க[4] ஆய்வை வெளியிட்டனர்.[5] இந்த ஆய்வு வானியல் முதுவர் பட்டப்படிப்புக்கு இயற்பியல் ஓர்வு மதிப்பெண்சார் தேர்வுத் துண்டிப்பு முறையை வன்மையாக எதித்தது. மேலும் இந்த மதிப்பெண் த்குதிக்கும் பின்னர் அமையும் கவிவியியல் தகுதி அடைவுக்கும் பொருத்தம் ஏதும் இல்லாமையையும் புள்லியியலாகச் சுட்டிக் காட்டியது. இம்முடிவிப் பிறகு அமெரிக்க வானியல் கழகமும் ஏற்றது. வானியல் முதுவர் பட்டப் படிப்புக்கான இயற்பியல் மதிப்பெண்ணின் கட்டாயத்தை நீக்கிவிட்டது.[6][7] பின்னர் பலவானியல் முதுவர்பட்ட நிகழ்ச்சி விண்ணப்பங்களும் இயற்பியல் மதிப்பெண் தேவையை நீக்கின.[4][7]

எமிலி இலெவிசுகியூ
Emily Levesque
பிறப்புடவுண்டன், மசாசூசட்]] அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
அவாய் பல்கலைக்கழகம்
பணிஉதவிப் பேராசிரியர், வாழ்சிங்டன் பல்கலைக்கழகம்[1]
வலைத்தளம்
http://www.emlevesque.com

இளமையும் கல்வியும்

தொகு

இவர் மசாசூசட் தவுந்தனில் வளர்ந்தார்.[8] இவர் 2008 இல் இயற்பியலி இளவல் பட்ட்த்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவர் பின்னர் 2010 இல் அவாய் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.[9]

கல்விப் பணி

தொகு

இவர் 2010 முதல் 2013 வரை அய்ன்சுட்டீன் ஆய்வு நல்கையையும் 2013 முதல் 2015 வரை அபுள் ஆய்வுநல்கையையும் பெற்று, 2010 முதல் 2015 வரை கொலராடோ பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார்.[10][11] இவர் 2015 இல் இருந்து வாழ்சிங்டன் ப்ல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்[1].

ஆராய்ச்சிப் பணி

தொகு

இவர் தன் ஆய்வில் நோக்கீடுகளையும் படிமமாக்கத்தையும் பயன்படுத்துகிறார். கதிர்நிரலின் புற ஊதாப் பகுதியில், விண்மீனாக்கப் பால்வெளிகளின் கதிர்நிரலைப் பதிவு செய்ய, இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்துகிறார்.[12] கதிர்நிரலின் ஒளிப் பகுதியில், இவர் ஜெமினி வான்காணகம், டபுள்யூ. எம். கெக் வான்காணகம் ஆகிய மவுனா கீயில் அமைந்த வான்காணகங்களையும் சிலியில் உள்ள இலாசு காம்பனாசு வான்காணகத்தையும் பால்வெளிகளில் அமையும் மீப்பெரு விண்மீன்களையும் மெகல்லானிக் முகில்களையும் ஆய்வு செய்ய பயன்படுத்துகிறார். இவர் பல புதிய மீச்செம்பெரு மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் முதலில் தார்ன் ழுத்கோவ் வான்பொருளைக் கண்டறிந்தார்.[13]

சிஞ்சினாட்டி பல்கலைக்கழகத்தில் நாதன் மோர்கவுசு செய்யும் சிலந்திக் கண்பார்வை ஆய்வைப் பயன்படுத்தி, இவரும் உலோமாக்சும் இணைந்து குதிக்கும் சிலந்தி வானியல் நோக்கீட்டு நிகழ்வை தமது இணையத்தளப் சிலந்தி வானியல் சார் (arachnoastronomy) பரிமாற்றத்தில் வெளியிட்டுள்ளனர் .[14][15]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "University of Washington Department of Astronomy: Emily Levesque". depts.washington.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "American Astronomical Society: Annie Jump Cannon Award in Astronomy". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "2017 Sloan Fellowships". Archived from the original on 2017-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-06-13.
  4. 4.0 4.1 "The impact of the Physics GRE in astronomy graduate admissions" (in en-US). astrobites. 2016-09-09. https://astrobites.org/2016/09/09/the-impact-of-the-physics-gre-in-astronomy-graduate-admissions/. 
  5. Levesque, Emily M.; Bezanson, Rachel; Tremblay, Grant R. (2015-12-10). "Physics GRE Scores of Prize Postdoctoral Fellows in Astronomy". arXiv:1512.03709 [physics.ed-ph]. 
  6. "President's Column: Rethinking the Role of the GRE | American Astronomical Society". aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
  7. 7.0 7.1 "Some Astronomy programs dropping Physics GRE requirement - Physics GRE Discussion Forums". www.physicsgre.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
  8. "Faculty Spotlight: Emily Levesque". பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  9. "Levesque, Emily - Department of Astronomy". பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  10. "Listing of all Hubble Fellows 1990-2016". Archived from the original on 2017-02-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  11. "Einstein, Chandra, and Fermi Fellows". பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  12. Zetterlund, Erika; Levesque, Emily M.; Leitherer, Claus; Danforth, Charles W. (2015-01-01). "Ultraviolet ISM Diagnostics for Star-forming Galaxies. I. Tracers of Metallicity and Extinction" (in en). The Astrophysical Journal 805 (2): 151. doi:10.1088/0004-637X/805/2/151. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2015ApJ...805..151Z. http://stacks.iop.org/0004-637X/805/i=2/a=151. 
  13. Levesque, Emily M.; Massey, Philip; Żytkow, Anna N.; Morrell, Nidia (2014-09-01). "Discovery of a Thorne–Żytkow object candidate in the Small Magellanic Cloud" (in en). Monthly Notices of the Royal Astronomical Society: Letters 443 (1): L94–L98. doi:10.1093/mnrasl/slu080. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-3925. Bibcode: 2014MNRAS.443L..94L. http://mnrasl.oxfordjournals.org/content/443/1/L94. 
  14. Yong, Ed. "Tiny Jumping Spiders Can See the Moon" (in en-US). The Atlantic. https://www.theatlantic.com/science/archive/2017/06/jumping-spiders-can-see-the-moon/529329/. 
  15. "We've Learned Jumping Spiders Can See the Moon, Thanks to Twitter". Wed Jun 07 11:31:00 EDT 2017. http://news.nationalgeographic.com/2017/06/jumping-spiders-moon-stars-astronomy/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_இலெவிசுகியூ&oldid=3962311" இலிருந்து மீள்விக்கப்பட்டது