எமி பாவா
எமி பாவா (Hemi Bawa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியரும் சிற்பியுமாவார். 1948 ஆம் ஆண்டு [1] இவர் பிறந்தார். இவரது படைப்புகளில் அக்ரைலிக்கு மற்றும் கண்ணாடி ஓவியங்களும் மற்றும் வார்ப்பிரும்பு, கண்ணாடி இழை மற்றும் தாமிரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிற்பங்களும் அடங்கும். [2]
எமி பாவா Hemi Bawa | |
---|---|
பிறப்பு | தில்லி, இந்தியா |
பணி | ஓவியர் சிற்பி |
அறியப்படுவது | நவீன ஓவியம் |
வாழ்க்கைத் துணை | இந்திரசித்து சிங் பாவா |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
Website |
பாவா தில்லியில் பிறந்தார், 1962 ஆம் ஆண்டில் ஓவியம் வரையத் தொடங்கியபோது இவருக்கு முறையான பயிற்சி எதுவும் இல்லை [3] பின்னர், இவர் இசுகாண்டிநேவிய கண்ணாடி தயாரிக்கும் நுட்பங்களைப் படித்தார். பின்னர் அந்த ஊடகத்தில் உலோகம், மரம் மற்றும் அக்ரைலிக்கு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [4] 1996 ஆம் ஆண்டில், அட்லாண்டாவில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் காட்சிப்படுத்துவதற்காக, கோகோ-கோலா ஒரு சிற்பத்தை உருவாக்க இவரை நியமித்தது, எட்டு அடி உயரத்தில் இவர் உருவாக்கிய சிற்பம் இப்போது நகரத்தில் உள்ள கோகோ-கோலா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [2] [5] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனி மற்றும் குழு கண்காட்சிகளை பாவா நடத்தியுள்ளார். இதில் கண்ணாடி பரிமாண நிகழ்ச்சி [6] மற்றும் தில்லியில் இந்தியா கலைத் திருவிழா 2012 ஆகியவை அடங்கும். [7]
கலைத்துறையில் எமி பாவா ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [8] 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அல்கா பாண்டே எழுதிய எமி பாவா என்ற புத்தகத்தில் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன [9] இந்தர்சித்து சிங் பாவா என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார், மேலும் இத்தம்பதியினர் தற்போது தில்லியில் எய்லி சாலையில் வசிக்கின்றனர். [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Inspired by steel / by Hemi Bawa". Corning Museum of Glass. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
- ↑ 2.0 2.1 "Padma Shri is a recognition of my art: Hemi Bawa". Mid Day. 11 April 2009. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Harry Winston and Hemi Bawa". Jot Impex. 2016. Archived from the original on 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Meet the Artist – Hemi Bawa". Corning Museum of Glass. 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Sculptor Hemi Bawa's Coke bottle selected for Atlanta Olympics". India Today (in ஆங்கிலம்). May 31, 1996. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
- ↑ "India's glass diva sparkles again". Zee News. 4 August 2009. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Hemi Bawa explores the power of present". The Indian Express. 15 January 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ Hemi Bawa.
- ↑ "Artistic impressions". India Today. 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
புற இணைப்புகள்
தொகு- "Hemi Bawa 2012". YouTube video. Artspeaks India. 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
மேலும் படிக்க
தொகு- Pande, Alka (2010). Hemi Bawa. Om Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174367938.