எம்ப்பிடோக்ளீஸ்

கிமு 5 ஆம் நூற்றாண்டு கிரேக்க மெய்யியலாளர்

எம்ப்பிடோக்ளீஸ் (Empedocles, கிரேக்கம் : Ἐμπεδοκλῆς கிரேக்கம்: Ἐμπεδοκλῆς  ; கி.மு. சு. 494 – சு. 434, அல்லது கிமு சு 444-443) [7] என்பவர் சாக்ரடீசுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் சிசிலியில் உள்ள கிரேக்க நகரமான அக்ரகரஸ் நகரின் [8] [7] பூர்வீக குடிமகன் ஆவார். நான்கு செவ்வியல் தனிமங்களின் அண்டப் பிறப்பியல் கோட்பாட்டை தோற்றுவிப்பதற்காக எம்ப்பிடோகிளீசின் தத்துவம் மிகவும் பிரபலமானது. [9]

எம்ப்பிடோக்ளீஸ்
எம்பெடோகிள்ஸ், 17 ஆம் நூற்றாண்டு படைப்பு
பிறப்புஅண். கிமு 494 [1]
அக்ரகரஸ், சிசிலி
இறப்புஅண். கிமு 434 [1] (சுமார் 60 வயதில்)
தெரியவில்லை[a]
காலம்Pre-Socratic philosophy
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிPluralist school
முக்கிய ஆர்வங்கள்
அண்டப் பிறப்பியல், உள்ளியம் (மெய்யியல்), அறிவாய்வியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
All things[3] are made up of four elements: fire, air, earth and water
Change and motion[4] are due to the corporeal substances[5] Love[6] (Aphrodite)[6] and Strife[6]
The எம்ப்பிடோக்ளீஸ்
Theories about உயிரணு ஆற்றல் பரிமாற்றம் (the clepsydra experiment)
Emission theory of vision
செல்வாக்குச் செலுத்தியோர்

பித்தாகரசு (இறப்பு கி.மு. 495) மற்றும் பித்தகோரியன்ஸ் ஆகியோரின் சிந்தனைகளில் செல்வாக்கு பெற்ற எம்ப்பிடோகிளீஸ் விலங்குகளை பலியிடுவதையும் உணவுக்காக அவற்றைக் கொல்வதையும் எதிர்த்தார். இவர் மறுபிறப்பு குறித்த ஒரு தனித்துவமான கோட்பாட்டை உருவாக்கினார். பொதுவாக கருத்துக்களை வசனத்தில் பதிவு செய்த கடைசி கிரேக்க மெய்யியலாளராக இவர் கருதப்படுகிறார். சாக்ரடீசுக்கு முந்தைய வேறு எந்த மெய்யியலாளரையும் விட இவருடைய சில படைப்புகள் எஞ்சியிருக்கின்றன. எம்ப்பிடோகிளீசின் மரணம் பண்டைய எழுத்தாளர்களால் செவிவழிக்கதையாக இருந்தது, மேலும் பல இலக்கிய முறைகளுக்கு உட்பட்டது.

வாழ்க்கை

தொகு
 
எம்பெடோகிள்ஸ் இளைஞனாக இருந்தபோது கட்டப்பட்ட அக்ரகசில் உள்ள எராவின் கோயில், கிமு சு. 470

எம்ப்பிடோகிளீஸ் சிசிலியில் உள்ள அக்ரகஸ் நகரின் ஒரு குடிமகனாவார். [8][10] அங்கு இருந்த ஒரு பணக்கார, உயர் குடும்பத்தில் பிறந்தார். [8][11][12] இவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. இவரது தாத்தா, எம்பெடோக்லேஸ் என்றும் அழைக்கப்படுகிறார், [71வது ஒலிம்பியாடு] (கிமு 496-95) ஒலிம்பிக் போட்டியில் குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெற்றார். [8][10][11] இவரது தந்தையின் பெயர் மெட்டன். [8][10][11]

எம்ப்பிடோகிளீஸ் நகர அரசில் செயல்பட்ட ஆயிரம் பேரின் கூட்டணியை உடைத்தார் எனப்படுகிறது. அது ஒருவேளை நகரின் சிலவர் ஆட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். [13] ஏழைகளுக்கு ஆதரவாக இவர் பெருந்தன்மையுடன் இருந்ததாக கூறப்படுகிறது; [14] நகர அரசில் செயல்பட்ட சிலவர் ஆட்சிக்குழுவுக்கு எதிராக செயல்பட்டு அவர்களை கடுமையாக ஒடுக்கினார்; [15] மேலும் நகரத்தின் ஆட்சிப் பொறுப்பை இவருக்கு வழங்கியபோது அதை இவர் நிராகரித்தார். [16]

"மனிதர்கள் ஒரு காலத்தில் தேவர்களாக இருந்தனர். பின்னர் அவர்களின் தீவினைகாரணமாக மனித நிலைக்கு இழிந்துவிட்டனர்" என்பது இவரின் நம்பிக்கை. தானும் ஒரு காலத்தில் தேவனாக இருந்ததாகவும் அந்த பேரானந்த நிலையைவிட்டு மானிடரின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டதாக அடிக்கடி சளித்துக்கொளவார். தான் ஒரு தெய்வப் பிறவி என்பதை பிறர் அறியவேண்டும் என்பதற்காக, பொன்னாலான செருப்பை அனிந்து, ஊதா நிற ஆடையை அணிந்தும், தலையில் மலர் சூட்டிக்கொண்டும் இருந்தார். மேலும் தன்னிடம் தெய்வ சக்தி உண்டு என்றும் , மந்திரத்தாலேயே பல நோய்களை தன்னால் குணமாக்க இயலும் என்றும் கூறிவந்தார். அவ்வாறே பலரை நோய்களில் இருந்து குணமாக்கினார் எனப்படுகிறது. ஒரு நோயாளியை மனதத்துவ முறையில் அணுகி அவருக்கு உள்ள சிக்கலை கண்டறிந்து அதற்கான சிகிச்சையும் சொல்லும் ஆற்றலைக் கொண்டவராக இருந்தார். இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட ஒரு பெண்ணை உயிர்பித்தார் என்ற கதையும் உள்ளது. இதனால் பாமர மக்கள் இவரை ஒரு தெய்வமாகவே கொண்டாடினர்.[17]

இறப்பு

தொகு

அரிசுட்டாடிலின் கூற்றுப்படி, இவர் அறுபது வயதில் இறந்தார் ( கிமு சு. 430  ), மற்ற எழுத்தாளர்கள் இவர் நூற்று ஒன்பது வயது வரை வாழ்ந்தார் என்கின்றனர். [18] அதேபோல், இவரது மரணம் தொடர்பான செவிவழிக்கதைகள் உள்ளன: எராக்கிளிடெசு பொந்திகசு என்பவரின் பாரம்பரிய நம்பிக்கை, இவர் பூமியில் இருந்து அகற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது; மற்றவர்கள் இவர் எட்னா எரிமலையின் தீப்பிழம்பினால் அழித்தார் என்கிறது. [19]

பர்னெட்டின் கூற்றுப்படி: எம்ப்பிடோக்ளீஸ் எட்னா எரிமலைப் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்பட்டது, இவர் ஒரு கடவுளாக சிலரால் கருதப்பட்டார். மொத்தத்தில் இவரது மரணம் குறித்தும், இடம் குறித்தும் பல்வேறு கருத்துகள் உள்ளன. [2]

இவரது தத்துவங்கள்

தொகு

இவர் மெய்யியல் ஆய்வில் ஈடுப்பட்டார். இவரை ஒரு அணுவாதி, பரிணாமவாதி என்பர். உலகத்துப் பொருட்கள் அனைத்தும் மண், நீர், காற்று, என்னும் நாற்பெரும் பூதங்களால் ஆனவை. இந்த நான்கும் எவ்வளவுக்குக்கெவ்வளவு கூடுதலாக சேர்கின்றதோ அவ்வளவுக்குகவ்வளவு பொருள்கள் வளர்ச்சி பெறுகின்றன, இந்த நான்கும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து போகிறபோது பொருள்கள் அழிகின்றன என்பது இவரது கொள்கை.[17]

எம்ப்பிடோக்ளீஸ் மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர். இவர் முற்பிறவிகளில் "சிறுவனாகவும், சிறுமியாகவும், பூக்கின்ற செடியாகவும், பறக்கும் பறவையாகவும், நீந்தும் மீனாகவும்" இருந்ததாக கூறிவந்தார். இந்த மறுபிறவி நம்பிக்கையால் புலால் உணவு உண்பதை கண்டித்தார். ஏனெனில் புலால் உணவாக பயன்படும் உயிரினம் சென்ற பிறவியில் மனிதராக பிறந்தவையாக இருக்கலாம். இதனால் புலால் உண்பது மனிதனை மனிதர் உண்பது போன்றது என்றார்.[17]

குறிப்புகள்

தொகு
  1. "Empedokles did not die in Sicily, but in the Peloponnese, or, perhaps, at Thourioi."[2]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Wright, M. R. (1981). Empedocles: The Extant Fragments. Yale University Press. p. 6.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Burnet 1930, ப. 202–203.
  3. Burnet 1930, ப. 228.
  4. Burnet 1930, ப. 231-232.
  5. Burnet 1930, ப. 232.
  6. 6.0 6.1 6.2 Burnet 1930, ப. 208.
  7. 7.0 7.1 Burnet 1930.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 Zeller, Eduard (1881). A History of Greek Philosophy from the Earliest Period to the Time of Socrates. Vol. II. Translated by Alleyne, S. F. London: Longmans, Green, and Co. pp. 117–118.
  9. Gray, Harry (1995). Braving the Elements. University Science Books. pp. 1.
  10. 10.0 10.1 10.2 Burnet 1930, ப. 197.
  11. 11.0 11.1 11.2 Freeman, Kathleen (1946). The Pre-Socratic Philosophers. Oxford: Basil Blackwell. pp. 172–173.
  12. Diogenes Laërtius, viii. 51
  13. Burnet 1930, ப. 199.
  14. Diogenes Laërtius, viii. 73
  15. Timaeus, ap.
  16. Aristotle ap.
  17. 17.0 17.1 17.2 வெ. சாமிநாதசர்மா, கிரீஸ் வாழ்ந்த வரலாறு, நூல், பக்கம்: 398-400, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டை.
  18. Apollonius, ap.
  19. Diogenes Laërtius, viii. 67, 69, 70, 71; Horace, ad Pison. 464, etc.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்ப்பிடோக்ளீஸ்&oldid=3581711" இலிருந்து மீள்விக்கப்பட்டது