அண்டப் பிறப்பியல்

அண்டப் பிறப்பியல் (ஆங்: Cosmogony)என்பது அகிலம் அல்லது அண்டத்தின் தோற்றத்தை விளக்க முனையும் எந்த கருத்துருப் படிவத்தையும் குறிக்கும்.[1][2] ஒரு முழுமையான கோட்பாட்டுக் கருத்துருவை உருவாக்குவது அறிவியல் மெய்யியலிலும் மற்றும் அறிவாய்வியலிலும் தாக்கங்களைக் ஏற்படுத்தும்.

மிகுதியான அல்லது முடிவிலா அடர்த்தியிலிருந்து அண்டம் விரிவடைந்தது என்று குறிப்பிடுகின்ற பெரு வெடிப்புக் கோட்பாடு, இயற்பியலாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சொற்பிறப்புதொகு

காய்னீ கிரேக்க சொல்லான κοσμογονία (κόσμος " அகிலம் , உலகம்") மற்றும் γί (γ) νομαι / γέγονα ("புதிய நிலைக்கு புகுதல்") என்பதன் வேரிலும் இருந்து 'Cosmogony' என்ற சொல் உருவாகிறது.[3] வானியலில் , அண்டவியல் என்பது துகள் வானியற்பியல் பொருள்கள் அல்லது அமைப்புகளின் தோற்றத்தை பற்றிய ஆய்வைக் குறிக்கிறது. பொதுவாக அண்டம், சூரியக் குடும்பம், அல்லது புவி-நிலவு அமைப்பு ஆகியவற்றின் தோற்றுவாய்வியலைக் குறிப்பிடுகிறது.[1][2]

கருத்துச் சுருக்கம்தொகு

பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்குரிய அண்டவியல் மாதிரியமாகும் .[4] அண்டம் ஒரு ஈர்ப்பு விளைவின்போது அதன் சூடான அடர்த்தியான நிலையிலிருந்து மிகவும் விரைவாக விரிவடைதலில் இருந்து தோறுகிறது என்பதே பொதுவான கருத்து.

 
சரக் கோட்பாட்டின் கலாபி-யா பன்மடிமத்தின் ஒரு படிமம். அருநிலை நிகழ்வின் (அதனால் விளைந்த அண்டத்தின்) தோற்றத்துடன் "பொருள்", வெளி, நேரம் ஆகியவற்றின் தொகுப்புகள் என்னென்ன விதமாகத் தோன்றியிருக்ககூடும் என்பதற்கான, ஒப்புக்கொள்ளக்கூடிய, கோட்பாடுகள் பல குவாண்டம் இயற்பியலில் உள்ளன.[5] நம் அண்டத்தின் தோற்றத்திற்கு முன் " காலம் " இருந்ததா இல்லையா என்பது குறித்தே கோட்பாடுகள் முக்கியமாக முரண்படுகின்றன.

அண்டவியலாளார் ஷான் எம் கரோல், அண்டத்தின் தோற்றத்திற்கு "முன்" நேரம் இருந்ததா இல்லையா என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்ட ஒருமையின் தோற்றத்திற்கான விளக்கம் குறித்து, அண்டவுற்பத்தியியலாளர் இடையே வழங்கப்படும் இரண்டு முரணான நிகரான, கருத்துகளைப் பற்றி கூறுகிறார். ஒன்று, நேரம் அடிப்படையானதும் நித்தியமானதும்: அண்டம் ஒருமையைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கலாம், ஏனெனில் ஏதோவொரு முந்தைய நிலையில் ("வெற்று வெளி" அல்லது "வெளி" என்றே இல்லா நிலை) இருந்து உருவாகியோ மாற்றம் கண்டோ அண்டம் விளைந்துள்ளது. மற்றொன்று, ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோர் கூறுவதாவது, காலத்திற்கு எந்த மாற்றமும் இல்லை, ஏனெனில் அண்டத்துடனே "நேரம்" தோன்றியது (அதாவது, அண்டத்திற்கு "முன்" என்பதே இல்லை).[5] எனவே, அண்டமும் ஒருமையும், "பொருள்", வெளி அல்லது காலம் ஆகியவற்றின் எவ்விதக் கலவையுடன் தோன்றியது என்பதில் தெளிவில்லை.[5]

துளிம ஈர்ப்பு குறித்து செல்லுபடியாகக்கூடிய கோட்பாடுகள் ஏதும் இல்லாததால், அண்டத்தின் பிறப்புக்கு முந்தைய காலங்களை (பிளாங்க் நேரம்) விளக்கும் கோட்பாட்டு மாதிரிகள் ஏதும் தற்போது இல்லாதது ஒரு குறை. எனினும் இதனைக் களையவே சரக் கோட்பாடு, அதன் நீட்டிப்புகள் (உ-ம், எம் கோட்பாடு) மற்றும் வளை துளிம அண்டவியல் என ஆய்வாளர்கள் பல தீர்வுகளை முன்மொழிந்து வருகின்றனர்.

அண்டவியலுடன் ஒரு ஒப்பீடுதொகு

பெரும்பாலும் அண்டத்தைப் பற்றி ஆயுள் முழுமைக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளும் துறை அண்டவியல்; அது அண்டத்தின் தோற்றத்தை நேரிடையாக ஆராய முனைவதில்லை. அண்டவியல் மற்றும் அண்டப்பிறப்பியல் இடையேயான வேறுபாடுகள் சற்றே தெளிவற்றதாக உள்ளன. உதாரணமாக, இறையியலில் கடவுளின் உளதாம் தன்மையை விவாதிக்கும் அண்டவியல் வாதம் அண்டவியல் கருத்துக்களைக் காட்டிலும் அண்டப்பிறப்பியலைத் தழுவியதாகவே அமைந்துள்ளது. அண்டவியல் மற்றும் அண்ட பிறப்பியல் கருத்துக்களுக்கு இடையே அறிவியல் ரீதியில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. இயற்பொருள் அண்டவியல் என்பது அண்டத்தின் வளர்ச்சியையும் குணவியல்புகளையும் பற்றிய நுணுக்கங்களை விளக்க முயலும் அறிவியல் கூறாகும். அண்டம் ஒரு போக்கில் செயல்படுவதற்கான காரணிகளை இயற்பியல் வல்லுனர்களும் அண்டவியலாளர்களும் அறிவியலுக்கு அப்பாற்பட்டது(மீவியற்பியல்) என கருதுகின்றனர். எனினும் அவற்றைத் தெளிய, இதுவரை சோதிக்கப் படாத தளங்களில் (பிளாங்க் செதில்கள்) அறிவியல் கோட்பாடுகளை புறஞ்சொருகுதல், தத்துவ, மத கருத்துக்களை நாடுதல் என்பன போல பல கோணங்களிலும் ஊகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோட்பாட்டியல் சூழல்கள்தொகு

அண்டத்தின் ஆரம்ப நிலைகளுக்கும் அதன் தொடக்கத்திற்கும் அண்டப் பிறப்பியலாளர்கள் ஆய்நிலைக் கோட்பாடுகளை மட்டுமே வகுத்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு வரையிலும், பிக் பாங்கைத் தொடர்ந்து உடன் விளைந்த பொருட்களின் ஆற்றல் நிலைகள் பற்றி நுண்ணறிவு நோக்கு வழங்கும் விதமாக துகள் முடுக்கச் சோதனைகள் ஏதும் விளையவில்லை.

முன்மொழியப்பட்ட கோட்பாட்டு சூழல்கள் பலவும் தங்களுக்குள் தீவிரமாக வேறுபடுகின்றன. அவை சரக் கோட்பாடு மற்றும் எம்-கோட்பாடு , ஹார்ட்லே-ஹாக்கிங் ஆரம்ப நிலை , சர நிலப்பரப்பு , குமிழி வீக்கம் , பெரு வெடிப்பு உள்ளிட்டவை வழங்கும் சூழல்கள். இந்த மாதிரிகளுள் சில பரஸ்பர இணக்கத்தன்மை கொண்டும், மற்றவை இணங்காமலும் உள்ளன.

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 Ridpath, Ian (2012). "A Dictionary of Astronomy".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 
  2. 2.0 2.1 Michael Woolfson (1979). "Cosmogony Today". Quarterly Journal of the Royal Astronomical Society 20 (2): 97–114. Bibcode: 1979QJRAS..20...97W. 
  3. Staff. "γίγνομαι - come into a new state of being". Tufts University. 17 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Wollack, Edward J. (10 December 2010). "Cosmology: The Study of the Universe". Universe 101: Big Bang Theory. நாசா. 14 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 "A Universe from Nothing?, by Sean Carroll, Discover Magazine Blogs, 28 April 2012". 3 October 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Carroll" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டப்_பிறப்பியல்&oldid=3532022" இருந்து மீள்விக்கப்பட்டது