மத அண்டவியல்

மத அண்டவியல் (religious cosmology) என்பது சமய ஈடுபாடுடைய சித்தாந்தத்தின் படி அண்டத்தின் தோற்றத்தைக் குறித்தும், அதன் வரலாறு குறித்தும், அண்டத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் கூறும் இயல் ஆகும்.மேலும் அண்டம் உருவாகிய செயல்முறை பற்றியும், அதை உருவாக்கிய கடவுள்கள் பற்றியும் விளக்கும் இயல்.

இந்து மதம்

தொகு

நவீன அண்டவியல், இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் இந்து அண்டவியல் இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் ஏறத்தாள பொருந்துகிறது[1].மேலும் பெரு வெடிப்பு (Big Bang) என்பது அனைத்திற்கும் ஆரம்பம் இல்லை[2] எனவும் அது தற்போது உள்ள இந்த அண்டத்தின் வாழ்க்கை சுழற்சியின் தொடக்கம் எனவும் இதற்கு முன்னும் இதே போன்று பல அண்டங்கள் தோன்றி மறைந்துள்ளது எனவும் விளக்குகிறது.[3]
அண்டத்தின் ஆரம்ப நிலையை ரிக் வேதம்,
அப்போது இறப்பில்லை, இறப்பில்லநிலையும் இல்லை, இரவு பகலின் அடையாளமே இல்லை. மூச்சற்ற அது ஒன்றாய், தமது சக்தியால் சுவாசித்தது. அவருக்கு அப்பால் அவரைத் தவிர வேறு ஏதுவும் இல்லை- (ரிக் 10. 129. 2) என விளக்குகிறது.[4]
திருவாசகத்திலும், ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
அழ்ந்து என்றால் தியான நிலை என்றும் பொருள்படும், அதாவது சமப்படுத்தப்பட்ட நிலையில் (விசைகள் சமப்படுத்தப்பட்ட) இருந்த நுண்ணிய பொருள் அகன்றது அதாவது விரிவடைந்தது என பொருள் கொள்ளாலாம்.
நவீன அண்டவியலின் கூற்றுப்படி இந்த அண்டம் ஆரம்பத்தில் ஒரு சிறிய நுண்ணிய பொருளாக இருந்தது அப்போது நான்கு விசைகளும் சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது திடிரென ஒரு கணத்தில் அந்த நுண்ணிய பொருளின் விசைகள் விடுபட்டு அந்த பொருள் விரிவடைந்து இந்த அண்டம் உருவானது இதுதான் பெருவெடிப்புக் கொள்கை.எனவே பெருவெடிப்புக்கு முன்னர் இந்த முழு அண்டமும் ஒரு நுண்ணிய பொருளாகத் தான் இருந்துள்ளது.இந்த சூழ்நிலையைத்தான் ரிக் வேதமும், திருவாசகமும் விளக்குகிறது.
புராணங்களின் படி, அண்டம் தோன்றும், பின்னர் அழியும் பின் மீண்டும் தோன்றும் இது மீண்டும் மீண்டும் தொடரும் ஒரு சுழற்சி ஆகும். இந்து அண்டவியலின் படி, இந்த அண்டம் 4,320,000,000 புவி ஆண்டுகள் இருக்கும்.இது ஆயிரம் மகாயுகங்களுக்கு சமம்.மேலும் இது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
பிரம்மாவின் ஒரு நாள் நமக்கு 4,320,000,000 புவி ஆண்டுகள். இது சாத்தியமா? ஆம் என்கிறது நவீன அண்டவியலும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின், சார்புக் கோட்பாட்டின் படி இது சாத்தியம்.ஈர்ப்பு விசை அதிகம் உள்ள கோள்களில் இது சாத்தியம் ஆனால் இது போன்ற பெரிய கால வேறுபாடு இருக்க வேண்டுமேனில் அதன் ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது பல மடங்கு சக்தி கொண்ட கருந்துளை அருகில் உள்ள கோளில் இது சாத்தியம். இது இன்டர்ஸ்டெலர் திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் பேராசிரியர் கெயின் டீம் நுழையும் ஒரு கிரகத்தில் செலவழிக்கும் ஒரு மணி நேரம் என்பது பூமியைப் பொறுத்தவரை சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும்.அந்த கோள் ஒரு கருந்துளை அருகில் இருக்கும்.
பிரம்மாவின் ஒரு நாள் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம்.
நவீன அண்டவியலில், அண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அப்பொருட்களின் செறிவு மற்றும் அழுத்தத்தைப் பொறுத்தது.விரிவடைந்து கொண்டே போகும் நமது அண்டம் ஒரு வேளையில் அண்ட அடர்த்தி, மாறுநிலை அடர்த்தி (critical density) யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது அண்டம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்து இறுதியில் ஒரு கருந்துளையாகி விடும் என்கிறது.இதற்கு பெரும் அண்டக்குழைவு (Big Crunch) என்று பெயர்.
இந்துகளின் அண்டவியலும் இதை அப்படியே சொல்கிறது, ஆதி கிருத யுகத்தில் பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கலியுகத்தில் அதை சங்காரஞ் செய்கிறார் என்கிறது இந்துகளின் அண்டவியலும் மேலும் இந்த அண்டம் நீரால் அல்லது தீயால் அழியும் என புராணங்கள் கூறுகின்றன.இதற்கு பிரளயம் என்று பெயர்.நமது அண்டம் அழிந்த பின் மீண்டும் அது மிக நுண்ணிய பொருளாகும்.இதை சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்கிறார்கள் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள். நவீன அண்டவியல் இதை கருந்துளை என்கிறது.
நவீன அண்டவியலில், சிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் மீண்டும் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.இதையே இந்துகளின் அண்டவியலும் செல்கிறது.

கருப்பு ஆற்றல் (Dark energy) என்பது இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒருவித ஆற்றல். இதைப்பற்றி இன்றும் பல ஆய்வுகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி முழுவதும் அறிய முடியாவிடினும் கூட ஓரளவு இதைப்பற்றி தெரிந்து கொண்டார்கள். இதை " இல்லாத சக்தி " ( Nothing Energy ) என்றும் அழைக்கிறார்கள். இதுதான் இந்த அண்டம் முழுவதும் நிறைந்துள்ளது, மேலும் அண்டம் விரிவடைய முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இது அண்டம் உருவாகக் காரணமான பெருவெடிப்பு ( Big Bang ) நிகழ்வின் போது தோன்றியிருக்கலாம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து. இவை அனைத்தையும் திருமூலர் தனது பாடல் வரிகளின் மூலம் நமக்கு விளக்குகிறார்.

பாடல்:

"இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்

வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே"

- திருமந்திரம் ( 383)

இல்லது சக்தி - இல்லாத சக்தி ( Nothing Energy )

இடந்தனில் - பெருவெடிப்பு நிகழ்ந்த இடம்தனில்

கல்லொளி - இருட்டை அடக்கி திடமான

வல்லது - பெரியதாக ( அண்டம் பெரியதாக )

வழிசெய்த - காரணமான

சொல்லது சொல்லிடில் - வார்த்தைப் படுத்துவது

தூரதி தூரமே - நிறைய ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Harry Oldmeadow (2007). Light from the East: Eastern Wisdom for the Modern West. World Wisdom. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781933316222.
  2. Sushil Mittal, Gene Thursby (2012). Hindu World. Routledge. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134608751.
  3. Andrew Zimmerman Jones (2009). String Theory For Dummies. John Wiley & Sons. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470595848.
  4. "Upanishads: Gateways of Knowledge", p. 10, by M. P. Pandit, publisher = Lotus Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத_அண்டவியல்&oldid=3711454" இலிருந்து மீள்விக்கப்பட்டது