எம்மிகனூர்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச நகரம்

எம்மிகனூர் (Yemmiganur) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். அதோனி வருவாய் கோட்டத்தின் எம்மிகனூர் மண்டலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. [3]

எம்மிகனூர்
Yemmiganur
நகரம்
எம்மிகனூர் Yemmiganur is located in ஆந்திரப் பிரதேசம்
எம்மிகனூர் Yemmiganur
எம்மிகனூர்
Yemmiganur
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°44′00″N 77°29′00″E / 15.7333°N 77.4833°E / 15.7333; 77.4833
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கர்நூல்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்எம்மிகனூர் நகராட்சி
 • சட்டமன்ற உறுப்பினர்கே. சென்னகேசவ ரெட்டி (ஒய்.எசு.ஆர்.கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்14.50 km2 (5.60 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்95,149
 • தரவரிசைஆந்திரப்பிரதேச நகரங்கள்
 • அடர்த்தி6,600/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தெலுங்கு மொழி (அதிகாரப்பூர்வம்) [
நேர வலயம்ஒசநே+5:30
வாகனப் பதிவுஆபி-21(பழையது),ஆபி-39(புதியது)
இணையதளம்Yemmiganur Municipality

வரலாறு

தொகு

கர்னூல் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் எம்மிகனூரும் ஒன்றாகும். 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை விசயநகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை இது ஆந்திர மாநிலமாக இருந்தது, தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1965 ஆம் ஆண்டில் எம்மிகனூர் ஊராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது முதல் தர நகராட்சியாக உள்ளது. இது தற்போது ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது.

 
எம்மிகனூர் கார் திருவிழா

மக்கள்தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி 95,149 என்பது இந்நகரத்தின் மக்கள் தொகையாகும். இம்மொத்த மக்கள் தொகையில் 47,456 ஆண்களும் 47,693 பெண்களும் இருந்தனர். 12,177 குழந்தைகள் 0–6 வயது குழந்தைகளாவர். எம்மிகனூரின் சராசரி கல்வியறிவு சதவீதம் 62.98% ஆகும். 73 சதவீதம் என்ற தேசிய கல்வியறிவு சராசரியைக் காட்டிலும் இது குறைவாகும். கிராமத்தில் 52,254 பேர் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர்.[4]

போக்குவரத்து

தொகு

ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் எம்மிகனூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது. [5]

கல்வி

தொகு

ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வியானது மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால் கற்பிக்கப்படுகிறது. [6] [7] பல்வேறு பள்ளிகள் பின்பற்றும் பயிற்று மொழி ஆங்கிலம், தெலுங்கு ஆகியவையாகும். .

செயின்ட் ஜான்சு பொறியியல் மற்றும் மருந்து அறிவியல் கல்லூரி எம்மிகனூர் அருகே உள்ள எரகோட்டாவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
  3. "District Census Handbook – Guntur" (PDF). The Registrar General & Census Commissioner. pp. 12, 44. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  4. "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014.
  5. "Bus Stations in Districts". Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
  6. "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". Archived from the original on 7 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மிகனூர்&oldid=4108578" இலிருந்து மீள்விக்கப்பட்டது