எம்ரே கேன்
எம்ரே கேன் (Emre Can) துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இசுமீர் நகரத்தில் இவர் பிறந்தார்.[1][2] இசுதான்புல்லில் உள்ள கதிர் ஆசு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்றார்.[3] பிடே அமைப்பு 2010 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது.[1] முன்னதாக 2006 ஆம் ஆண்டில் பிடே மாசுட்டர் பட்டமும், 2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டமும் எம்ரே கானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்ரே கேன் Emre Can | |
---|---|
துருக்கியில் நடைபெற்ற உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் எம்ரே கான் | |
நாடு | துருக்கி |
பிறப்பு | சனவரி 21, 1990 இசுமீர், துருக்கி |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2010) |
பிடே தரவுகோள் | 2578 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2605 (திசம்பர் 2015) |
எம்ரே கேன் ஏழு வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டில், துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பங்கேற்று தனது வயதிற்குரியோர் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2000 ஆம் ஆண்டில், எசுப்பானியாவின் ஒரோபெசா டெல் மார் நகரில் நடைபெற்ற உலக இளைஞர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார்.[4] 16 ஆவது வயதில், செர்பியாவின் நோவி சாடில் நடைபெற்ற 13 ஆவது இளைஞர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த 102 வீரர்களிடையே போட்டியிட்டு தனது வயதுப் பிரிவில் முதலாவது பட்டத்தை வென்றார்.[5] ஐரோப்பிய 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் சதுரங்க வெற்றியாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.[3]
எம்ரே கேன் 2023 ஆம் ஆண்டில் 2023 சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் போட்டியிட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "FIDE Chess Profile-Can, Emre". World Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11.
- ↑ Akman, Özgür (2010-01-31). "Emre Can: Satrancın İzmirli sihirbazı" (in Turkish). Sabah. http://www.sabah.com.tr/Ekler/Pazar/Hobi/2010/01/31/emre_can_satrancin_izmirli_sihirbazi. பார்த்த நாள்: 2013-07-11.
- ↑ 3.0 3.1 "Kadir Has Üniversitesi Öğrencisi Emre Can 2010-2011 Türkiye Satranç Şampiyonu Oldu" (in Turkish). Doğan Haber Ajansı. 2011-02-17. Archived from the original on 2014-03-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Kalbimiz seninle" (in Turkish). Hürriyet Ege. 2000-10-12 இம் மூலத்தில் இருந்து 2014-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140324053341/http://webarsiv.hurriyet.com.tr/2000/10/12/249529.asp. பார்த்த நாள்: 2013-07-11.
- ↑ "Liseli Can, Dünya satranç şampiyonu" (in Turkish). Hürriyet. 2006-07-12. http://hurarsiv.hurriyet.com.tr/goster/ShowNew.aspx?id=4739296. பார்த்த நாள்: 2013-07-11.