எம். அச்சுதன்
எம். அச்சுதன் (M. Achuthan) எனப்படும் முக்குட்டிபரம்பில் அச்சுதன் (Mukkuttiparambil Achuthan), ( ஜூன் 15, 1930 - ஏப்ரல் 9, 2017) ஒரு இந்திய கல்வியாளர், சொற்பொழிவாளர் மற்றும் மலையாள இலக்கியத்தின் இலக்கிய விமர்சகர் ஆவார். இவரது படைப்புகளான, "சுவதந்திரிய சமரவம் மலையாள சாகித்யமும், "பஸ்கத்திய சாகித்ய தரிசனம் மற்றும் செருகதா இன்னலே இன்னு போன்றவற்றிற்காக புகழ் பெற்றவர் ஆவார். அச்சுதன் இலக்கிய விமர்சனங்களுக்கான கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக விருது மற்றும் பத்மபிரபா இலக்கிய விருது உள்ளிட்ட பல இலக்கிய கௌரவங்களைப் பெற்றவர்.
சுயசரிதை
தொகுஇளமைப்பருவம்
தொகுஎம். அச்சுதன் ஜூன் 15, 1930 அன்று, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாளா அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமமான வடமா என்னுமிடத்தில், ஆலக்காட்டு நாராயண மேனன் மற்றும் முக்குட்டிபரம்பில் பாருக்குட்டி அம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். [1] இவரது பள்ளிப்படிப்பு மாளா கிராமத்தின் புனித அந்தோனி உயர்நிலைப் பள்ளியில் இருந்தது. பின்னர் அவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார் [2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றார். [3] அதைத் தொடர்ந்து, புனித ஆல்பர்ட் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [4] அரசு கல்லூரி, மீஞ்சாந்தா, அரசு விக்டோரியா கல்லூரி, பாலக்காடு மற்றும் ஸ்ரீ நீலகாந்த அரசு சமஸ்கிருத கல்லூரி பட்டம்பி போன்ற பல கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, ஸ்ரீ சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக தனது கல்வி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
மேற்கொண்ட பதவிகள்
தொகுசாகித்ய பிரவர்த்தக கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் குழுவில் அமர்ந்தார். கேரள சாகித்ய அகாதமியின் நிர்வாகக் குழு மற்றும் கேரளா மற்றும் காலிகட் பல்கலைக்கழகங்களின் கல்விக் குழுக்களின் உறுப்பினராகவும் பணியாற்றினார். மாத்ரூபூமி வெளியீடுகளை நிர்வகித்தார். மேலும், சமஸ்தா கேரள சாகித்ய பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தார். [5]
குடும்பம்
தொகுஅச்சுதன் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஜி.சங்கரா குருப்பின் மகள் ராதாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு பி.பத்ரா, நந்தினி மற்றும் நிர்மலா ஆகிய மூன்று மகள்கள் இருந்தனர்; பத்ரா பின்னர் கொச்சி கார்ப்பரேஷனின் துணை மேயரானார். [3] அச்சுதன், ஏப்ரல் 9, 2017 அன்று, தனது 86வது வயதில், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், வயது மூப்பு தொடர்பான நோய்களால் இறந்தார். [6] இவரது உடல் இரவிபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. [7]
தொழில் வாழ்க்கை
தொகுகுட்டிகிருஷ்ணா மரார் மற்றும் ஜோசப் முண்டசேரி போன்ற புகழ்பெற்ற இலக்கிய பிரமுகர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அச்சுதன் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் இடச்சேரி கோவிந்தன் நாயரின் கவிதைகள் குறித்து விமர்சனம் செய்த முதல் விமர்சகராக கருதப்படுகிறார். . [6] [8] பல மேற்கத்திய அறிஞர்களின் தத்துவங்களை விமர்சிக்கும் பஸ்கத்திய சாகித்ய தர்ஷனம் உட்பட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். [1] 1973 இல் வெளியிடப்பட்ட செருகதா இன்னலே இன்னு, எனப்படும் இவரது மலையாள சிறுகதை, சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை உள்ளடக்கிய ஒரு புத்தகமாக உள்ளது. [9] கவிதாவும் களவும், சமன்வயம், புதினம் - பிரசனங்களும் பாடங்களும், விவேசனம், விமர்சலோசனம், நிர்தாரனம், சுவதந்திர சமரவம் மலையாள சாகித்யமும், பிரகாரங்கள் பிரதிகாரங்கள் மற்றும் வன்முகம் போன்றவை இவரது பிற படைப்புகளாக உள்ளது. [10] மேலும், இவர் ஆங்கில நூலான ஆயிரத்தோரு இரவுகள் என்னும் நூலை மலையாள மொழியில் "ஆயிரத்தொன்னு ராவுகள்" என்னும் தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். [2]
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஅச்சுதன் 1976 ஆம் ஆண்டில் இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். செருகதா இன்னலே இன்னு, [11] மற்றும் 1998 இல் பத்மபிரபா இலக்கிய விருது பெற்றார். [12] மேலும், இவரது ஒட்டுமொத்த இலக்கிய பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாதமி விருதை கேரள சாகித்ய அகாதமி 2001 இல் மீண்டும் வழங்கி கௌரவித்தது. [13] சாகித்ய பிரவர்தகா நலநிதி விருதையும் இவர் பெற்றார். [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "സാഹിത്യനിരൂപകന് എം അച്യുതന് അന്തരിച്ചു". samayammalayalam (in மலையாளம்). 2017-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ 2.0 2.1 "Literary critic M Achuthan no more". Mathrubhumi (in ஆங்கிலம்). 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ 3.0 3.1 "Literary critic Professor M Achuthan passes away". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2017-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "സാഹിത്യ നിരൂപകന് എം അച്യുതന് അന്തരിച്ചു 2". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "M. Achuthan passes away". The Hindu (in Indian English). 2017-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ 6.0 6.1 "Literary critic Achuthan passes away in Kochi - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "Eminent literary critic M Achuthan passes away". www.madhayamam.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Literary critic M. Achuthan passes away Manorama". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
- ↑ "Cherukatha: Innale Innu @ indulekha.com". www.indulekha.com. 2019-02-24. Archived from the original on 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "Asianet News". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Literary Criticism". Kerala Sahitya Akademi. 2019-02-24. Archived from the original on 2017-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "Padmaprabha Literary Award - Padma Prabha Puraskaram". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Overall Contributions". Kerala Sahitya Akademi. 2019-02-24. Archived from the original on 2017-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
வெளி இணைப்புகள்
தொகு- Sreedharan Mathuramattom (2011-10-29). "M. Achuthan - Interview". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
- Jagran Josh (8 May 2017). Current Affairs May 2017 eBook. Jagran Josh. pp. 261–. GGKEY:Y4CQWLA4NWA.