எம். அருணாசலம்

தொழிலதிபர்

எம். அருணாச்சலம் (M. Arunachalam, பிறப்பு 1949) என்பவர் ஆங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் இந்தியாவில் பிறந்து படித்தவர். இவர் முன்பு இந்திய வர்த்தக சம்மேளனத்திற்கான ஆங்காங் தலைவராக இருந்துள்ளார். மேலும் 2009 ஆம் ஆண்டு வரை அதன் பொதுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். அருணாச்சலம் இந்திய சேம்பர் ஐம்பதாம் ஆண்டு கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய பேரிடர் நிவாரண நிதி அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

எம். அருணாசலம்
பிறப்பு1949
தமிழ்நாடு
பணிதொழிலதிபர்

2005 ஆம் ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் பிரவாசி பாரதீய சம்மான் விருதைப் பெற்றார்.

தொழில் வரலாறு தொகு

வங்கியாளராக தனது பணியின் துவக்கத்தில், அருணாச்சலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றினார்.[1] 1977 இல் ஆங்காங்கிற்குச் சென்ற பிறகு, இவர் 1980 களின் முற்பகுதியில் இந்தோனேசியா மற்றும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஒரு நிறுவனத்தை நிறுவினார். இது பன்னாட்டு வர்த்தகம், உற்பத்தி மற்றும் பல்வேறு தயாரிப்புகளைக் கையாளும் நிறுவனங்களின் கூட்டமைப்பாக மாறியது. துணி, தோல் ஆடைகள், உணவு தானியங்கள், எஃகு, செய்தித்தாள், காகிதம், நெகிழிப் பொருட்கள், கட்டுமானம், ஏற்றுதல் உபகரணங்கள், மென்பொருள் போன்றவற்றையும் கையாண்டது.

இவரது நிறுவனம் சீன நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களிலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது. அகமதாபாத்தில் பொறியியல் பிரிவையும், தமிழ்நாட்டில் திண்டுக்கல், உடுமலைப்பேட்டை மற்றும் திருப்பூர் பகுதியில் ஒரு சில துணி ஆலைகளையும் நடத்தி வருகிறார். குழுமத்தின் நிறுவனங்கள் இந்தியா, சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விரிவாக அமைந்துள்ளன. இவற்றின் ஆண்டு வருமானம் US$129 மில்லியனுக்கும் அதிகமாகும்.[1]

அருணாச்சலம் 1980களில் இருந்து ஆங்காங்கில் உள்ள இந்திய வர்த்தக சபையின் செயல் உறுப்பினராக இருந்து, நான்கு முறை சபையின் தலைவராக இருந்துள்ளார்.[2] ஆங்காங் மற்றும் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் அருணாச்சலம் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் ஆசிய பசிபிக் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். மேலும் இந்தியாவிலிருந்து பல தூதுக்குழுக்களை ஓம்பியுள்ளதோடு, இந்தியாவிற்கு இந்திய மற்றும் சீன வணிகர்களின் பல பிரதிநிதிகளில் ஒருவராக இருந்துள்ளார். ஆங்காங்கை சீனாவின் நுழைவாயிலாக மேம்படுத்துவது வர்த்தக சபையின் நோக்கங்களில் ஒன்றாகும்.[3]

பிரவாசி பாரதீய சம்மான் விருது தொகு

2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் நடத்தப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் நாளில் ஆங்காங்கின் பிரதிநிதியாக இவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். 2005 சனவரி 7-9 வரை மும்பையில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர் நாள் நிகழ்வின் போது,[4] அருணாசலம் இந்தியாவின் கௌரவத்தை மேம்படுத்துவதிலும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை வளர்ப்பதிலும், சீனா வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இவருக்கு பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அருணாச்சலத்திற்கு வழங்கினார்.[5]

எம். அருணாச்சலம் ஆங்காங்கில் இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தொடர்ந்து இந்தியப் பண்பாட்டை ஊக்குவித்து வருகிறார். அருணாச்சலம் ஆங்காங் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இந்தியாவின் வரையறை மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டவர்.

குறிப்புகள் தொகு

 

  1. 1.0 1.1 Sunday, 7 Mar 2004 at 0000 hrs IST (2004-03-07). "'China Can Become India's Number One Trading Partner'". Financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Indian Chamber of Commerce Honk Kong - Office bearers". Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
  3. "TN yet to open account in HK markets". The Hindu Business Line. 2002-12-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.
  4. "Pravasi Bharatiya Samman Awardees - 2005". FICCI - Official Website. Archive. Archived from the original on 21 June 2007. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
  5. "National : Pravasi Bharatiya Samman Divas awards announced". தி இந்து. 2005-01-05. Archived from the original on 2005-01-12. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அருணாசலம்&oldid=3741723" இலிருந்து மீள்விக்கப்பட்டது