எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி

கேரளத்தில் உள்ள பொறியியில் கல்லூரி

எம்.இ.எஸ். பொறியியல் கல்லூரி (MES College of Engineering) என்பது கேரளத்தின் மலப்புறத்தின் குட்டிப்புரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியாகும். இது கேரளத்தின் முதல் சுயநிதி பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகமானது பாரதப்புழா ஆற்றங்கரையில் ஒரு மைலுக்கும் (1.6 கி.மீ.) மேலாக விரிந்திருக்கின்றது. இது சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக 1994 இல் நிறுவப்பட்டது.

எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி, குட்டிப்புரம்
Other nameகள்
MESCE
வகைகல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம்
உருவாக்கம்1994; 30 ஆண்டுகளுக்கு முன்னர் (1994)
முதல்வர்முனைவர். இரகமத்துனிசா
அமைவிடம், ,
இந்தியா

10°49′49″N 76°01′24″E / 10.8302°N 76.0234°E / 10.8302; 76.0234
வளாகம்6 கட்டடங்கள், 1,000 m2 (11,000 sq ft)
இணையதளம்www.mesce.ac.in
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி is located in கேரளம்
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி
Location in கேரளம்
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி is located in இந்தியா
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி
எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி (இந்தியா)

இந்தக் கல்லூரியில் அனைத்துப் பின்னணியில் இருந்தும் மாணவர்கள் சேர்கின்றனர். கல்வியில் ஏழ்மையான சமூகங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. உருவாக்க செயல் கூடம், எம்.இ.எஸ் புதுப்புனைவு மையம், சமூக மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வளாகத்திற்கு வெளியே உள்ள முக்கிய வசதிகள் ஆகும். கல்லூரி தற்போது இளநிலை கட்டடக்கலை உட்பட எட்டு இளநிலை பாடத் திட்டங்களை வழங்குகிறது, அத்துடன் முதுநிலை பொறியியலில், முதுகலை கணினி பயன்பாடுகள், முதுகலை வணிக நிர்வாகம் மற்றும் முதுகலை கட்டிடக்கலை ஆகியவற்றில் பத்து முதுநிலை பாடத் திட்டங்களை வழங்குகிறது.

வரலாறு

தொகு

இக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு பாரதப்புழா ஆற்றின் கரையில் நிறுவப்பட்டது. 1998ல் அப்போதைய முதல்வர் ஈ. கே. நாயனார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கல்லூரி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. முசுலீம் சிறுபான்மை அந்தஸ்து கொண்ட மாநிலத்தில் முதல் சுயநிதி பொறியியல் கல்லூரி இதுவாகும்.

கல்லூரியானது கணினி அறிவியல் முதன்மையான ஒன்றாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் என்ற புதிய துறைக்கான சேர்க்கை விண்ணப்பங்களை 2020 ஆம் ஆண்டில் ஏற்கத் தொடங்கியது. [1]

நிருவாகம்

தொகு

கல்லூரி நிர்வாகம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவால் நடத்தப்படுகிறது. மேலும் இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

நிர்வாகக் குழுக்கள்

தொகு

கல்லூரியின் விவகாரங்களானது நிர்வாகக் குழு, ஆளும் குழு, கல்வி ஆலோசனைக் குழு ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றது. இந்தக் குழுக்கள் சிறந்த கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களைக் கொண்டது. இந்த குழு தொடர்ந்து கூடி செயல்பாடுகளை கண்காணித்து, வளர்ச்சி தொடர்வதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கிறது.

கல்வியாளர்கள்

தொகு

இலையுதிர் கால பருவமுறை (செமஸ்டர்) விடுதலை தினத்திற்கு முன் தொடங்கி திசம்பர் நடுப்பகுதியில் முடிவடைகிறது, அதே நேரத்தில் வசந்த கால பருவமுறை சனவரி தொடக்கத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடைகிறது. தற்போது, கல்லூரி எட்டு இளநிலை மற்றும் ஆறு முதுநிலை படிப்புகளை வழங்குகிறது.

இளநிலை துறைகள்

தொகு
  • இயந்திர பொறியியல் (ME)
  • கட்டிடக்கலை (B.Arch.)
  • செயற்கை நுண்ணறிவு (ம) இயந்திர கற்றல் (AI)
  • குடிமைப் பொறியியில் (CE)
  • கணினி அறிவியல் (ம) பொறியியல் (CSE)
  • மின் (ம) மின்னணு பொறியியில் (EEE)
  • மின்னணு (ம) தொடர்பியல் பொறியியில் (ECE)
  • தகவல் தொழில்நுட்பம் (IT)

அறிவியல் துறைகள்

தொகு
  • வேதியியல் துறை
  • கணிதத் துறை
  • இயற்பியல் துறை

முதுகலை துறைகள்

தொகு
  • கணினி பயன்பாடு (MCA)
  • கணினி அறிவியல் பொறியியல் (MCS)
  • கருவி மற்றும் கட்டுப்பாடு (MIC)
  • தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் சமிக்ஞை செயலாக்கம் (MCSP)
  • கட்டுமானப் பொறியியல் மற்றும் மேலாண்மை (MCM)
  • நிலையான கட்டிடக்கலை

மேற்கோள்கள்

தொகு
  1. MESCE Kuttippuram official updated site. retrieved on 20 May 2020