எம். எஸ். மதிவாணன்
எம். எஸ். மதிவாணன் (ஆங்கில மொழி: M.S. Mathivanan) என்பவர் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமத்தின் தலைவராவார்.[1] தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார்.[2] தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான காமராசர் விருது இவருக்கு வழங்கப்பட்டது[3]
எம். எஸ். மதிவாணன் | |
---|---|
பிறப்பு | 1 சனவரி 1956 |
தேசியம் | இந்தியர் |
பணி | தொழிலதிபர் |
அமைப்பு(கள்) | எம்.எஸ்.எம். கல்விக் குழுமம் |
பெற்றோர் | எஸ். எஸ். எம். சுப்ரமணியம் |
வாழ்க்கைத் துணை | விஜயலெட்சுமி |
விருதுகள் | காமராசர் விருது |
வலைத்தளம் | |
www |
இளமைக் காலம்
தொகுஇவர் 1956 ஜனவரி முதல் நாள் நாமக்கல் குமராபாளையத்தில் பிறந்தார்.[4] சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் ஐதராபாத், புது தில்லி, மும்பை, ஐக்கிய ராஜ்ஜியம், சீனா உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் கல்வி பயின்றுள்ளார். இத்தாலியின் கவாலியர் விருதினைப் பெற்றுள்ளார்.
எழுத்துப்பணி
தொகுதனது தந்தை பற்றிய ஞானத் தந்தை எஸ்.எஸ்.எம்., வெற்றி நமதே, சித்தர்களின் சக்தியும் செயல்பாடும், நமது சட்டமன்றம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
கல்வித்துறை
தொகுஎஸ்.எஸ்.எம். கல்வி மற்றும் சமூக வளார்ச்சிக்கான அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். மேலும் எஸ்.எஸ். மாரி செட்டியார் அறக்கட்டளையின் கீழ் பல கல்லூரிகளை நடத்துகிறார். எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமத்தில் கீழ்க் காணும் கல்லூரிகள் உள்ளன.
- எஸ். எஸ். எம். கலை அறிவியல் கல்லூரி
- எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரி
- எஸ். எஸ். எம். ஜவுளி மேலாண்மை நிறுவனம்
- எஸ். எஸ். எம். சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை நிறுவனம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "எஸ்எஸ்எம் கலைக் கல்லூரியில் வரவேற்பு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jul/06/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2954131.html. பார்த்த நாள்: 28 October 2023.
- ↑ "மின்சார கட்டணத்தில் சலுகை: விசைத்தறி சம்மேளனம் கோரிக்கை". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2548047. பார்த்த நாள்: 28 October 2023.
- ↑ "Thanthai Periyar award for Gingee Ramachandran". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/17/thanthai-periyar-award-for-gingee-ramachandran-2090645.html. பார்த்த நாள்: 28 October 2023.
- ↑ "Personal Memorandum". msmathi. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.