காமராசர் விருது
This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (மார்ச் 2021) |
காமராசர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், மதிய உணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருது பெற்றவர்கள் பட்டியல்
தொகுவரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | ஏ. எஸ். பொன்னம்மாள் | 2006 |
2 | ஏ.ஆர். மாரிமுத்து | 2007 |
3 | கோபண்ணா | 2008 |
4 | ஆர். சொக்கர் | 2009 |
5 | ஜெயந்தி நடராஜன் | 2010 |
6 | திண்டிவனம் கே.இராமமூர்த்தி | 2011 |
7 | சிங்கார வடிவேல் | 2012 |
8 | கி. அய்யாறு வாண்டையார் | 2013 |
9 | கருமுத்து தி. கண்ணன் | 2014 |
10 | மருத்துவர் இரா. வேங்கடசாமி | 2015 |
11 | தி. நீலகண்டன் | 2016 |
12 | முனைவர் தா.ரா. தினகரன் | 2017 |
13 | பழ. நெடுமாறன் | 2018 |
14 | முனைவர் மா.சு.மதிவாணன் | 2019 |
ஆதாரம்
தொகு- தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [1]