எம். ஏ. எஸ் சுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

எம். ஏ. எஸ். சுப்பிரமணியன் (M. A. S. Subramanian) என்பவர் (செப்டம்பர் 3, 2020 இல் இறந்தார்) இந்திய அரசியல்வாதி மற்றும் புதுச்சேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். புதுச்சேரி லாசுபேட்டையினைச் சார்ந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர் ஆவார். இவர் புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராக 2003 முதல் 2011 வரை முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் அக்கட்சியிலிருந்து விலகி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] சுப்பிரமணியன் தமது 77 வயதில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "DR. M.A.S. SUBRAMANIAN (DMK):Constituency- Modeliarpeth (Pondicherry) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  2. "Dr.m.a.s.subramanian,(AIADMK):Constituency- ARIANKUPPAM(PUDUCHERRY) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  3. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/sep/03/former-mla-and-mnm-state-president-dr-mas-subramanian-dies-of-covid-19-in-puducherry-2191949.html

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._எஸ்_சுப்பிரமணியன்&oldid=3373730" இலிருந்து மீள்விக்கப்பட்டது