தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி (Thanjavur Medical College) இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூரில் அமைந்துள்ளது.[1] இது சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம். ஐி. ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவம் கல்லூரி & மருத்துவமனை
உருவாக்கம்1958
துறைத்தலைவர்மரு. பாலாஜி நாதன்
அமைவிடம்,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்tmctnj.ac.in

வரலாறு

தொகு

இந்த மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் அன்றைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஐேந்திர பிரசாத்தால் 1958இல் நடப்பட்டது. நிதி மற்றும் கல்லூரி அனுமதி அன்றைய தமிழக முதல்வர் காமராசரால் வழங்கப்பட்டது.[2] அப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரிசுத்தம் நாடார் கல்லூரிக்கான வைப்பு நிதியையும் அளித்து கல்லூரி கட்டுமானத்திற்காக மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நிலத்திலிருந்து 89 ஏக்கர் நிலத்தை அளித்தார்.

பயனாளிகள்

தொகு

தஞ்சாவூர், அரியலூர்; நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் மூலமாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

விரிவாக்கம்

தொகு

650 படுக்கைகளுடன் 1960-ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி 300 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மருத்துவமனையுடன் மருத்துவ உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக உருவெடுத்தது.

மேற்கோள்

தொகு
  1. Thanjavur Medical College பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
  2. "தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.