எம். கே. ராமச்சந்திரன்

மலையாள எழுத்தாளர்

எம். கே. ராமச்சந்திரன் (M. K. Ramachandran) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். [1] 2005 ஆம் ஆண்டில் தனது முதல் புத்தகமான உத்தரகண்டிலூட் - கைலாஸ் மன்சரோவர் யாத்திரை எனும் நூலிற்காக கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார். இவரது பிற படைப்புகளில்தபோபூமி உத்தரகண்ட், ஆதி கைலாசா யாத்ரா மற்றும் தேவபூமிலிலூட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். [2] [3]

ராமச்சந்திரன் 1953 இல் திருச்சூர் மாவட்டத்தில் கெச்சேரியில் பிறந்தார். இவரது பெற்றோர் மச்சிங்கல் கிருஷ்ணன் எழுத்தச்சன் மற்றும் மறைந்த நாரங்கலில் வடக்கவலப்பில் தேவகி அம்மா ஆகியோராவர். புட்டேக்கரா செயின்ட் செபாஸ்டியன்ஸ் பள்ளி, திருச்சூர் ஸ்ரீ கேரளவர்மா கல்லூரி மற்றும் திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரி ஆகியவற்றில் தனது பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை நிறைவு செய்தார். இவர் மூத்த சமஸ்கிருத அறிஞர் கே.பி.நாராயண பிஷரோடியின் சீடர் ஆவார். கைலாஸ் மன்சரோவர் யாத்திரையை நடத்திய கேரளாவைச் சேர்ந்த முதல் நபர் ஆவார்.இந்த யாத்திரையை 2001 ஆம் ஆண்டில் ராமச்சந்திரன் நடத்தினார். 2003 இல் வெளியிடப்பட்ட இவரது முதல் படைப்பான 'உத்தர்கண்டிலூட் - கைலாஸ் மன்சரோவர் யாத்திரை' இந்த அனுபவத்தை விவரிக்கும் விதத்தில் எழுதப்பட்டது ஆகும். அவரது இரண்டாவது புத்தகம், 'தபூபூமி உத்தரகண்ட்' 2005 இல் வெளியிடப்பட்டது. மேலும் அந்த புத்தகம் அவரது சார்தாம் சுற்றுப்பயணம் குறித்தும் வட மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தின் பிற புனித இடங்கள் குறித்தும் எழுதப்பட்டது. அவரது மூன்றாவது புத்தகம், 'ஆதி கைலாசா யாத்ரா', 2008 இல் வெளியிடப்பட்டது, மேலும் இது ஓம் பர்வத் என்ற மலைச்சிகரத்திற்குச் சென்ற இவரது அனுபவத்தை விவரிக்கிறது.மேலும் இது ஆதி கைலாஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இவரது நான்காவது புத்தகம், 'தேவபூமிலோடு', 2012 இல் வெளியிடப்பட்டது ஆகும். இந்நூல் கின்னார், ஸ்ரீகாந்த் மகாதேவ் மற்றும் மணிமகேஷ் கைலாஷ் ஆகிய இடங்களுக்குச் சென்றபோது ஏற்பட்டஅனுபவம் குறித்தும் இவரது சிக்கிம் சுற்றுப்பயணம் குறித்த அனுபவங்களையும் விவரிக்கிறது. ஐந்து கைலாஷ்களையும் பார்வையிட்ட ஒரே நபராக இவர் அறியப்படுகிறார். 2014 ஆம் ஆண்டில், 'நிலவம் நிஜாலுகலம்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். 2016 ஆம் ஆண்டில், இவரது மற்றொரு பயணக் குறிப்பு 'டகினிமருதே ஹிருதய பூமியிலூட்' வெளியிடப்பட்டது. இவரது புத்தகங்கள் அனைத்தும் திருச்சூரின் கரண்ட் புக்ஸ் என்னும் இலக்கிய இதழால் வெளியிடப்பட்டன. இவரது பயணக் குறிப்புகள் ஆண்டுதோறும் பல பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]

விருதுகள்

தொகு
  • உத்தரகண்டிலூத்துக்கான கேரள சாகித்ய அகாடமி விருது 2005 - கைலாஸ் மன்சரோவர் யாத்திரை

குறிப்புகள்

தொகு
  1. Nair, Aparna (15 December 2006). "Journey to fame". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2007-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071103171250/http://www.hindu.com/fr/2006/12/15/stories/2006121500130200.htm. பார்த்த நாள்: 2009-08-04. 
  2. "Travelogue to be released". தி இந்து. 23 April 2009 இம் மூலத்தில் இருந்து 2009-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090427204951/http://www.hindu.com/2009/04/23/stories/2009042355960300.htm. பார்த்த நாள்: 2009-08-04. 
  3. B. R. P. Bhaskar (23 May 2006). "Mystique of the Garhwal". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105061941/http://www.hindu.com/br/2006/05/23/stories/2006052300281602.htm. பார்த்த நாள்: 2009-08-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._ராமச்சந்திரன்&oldid=3364917" இலிருந்து மீள்விக்கப்பட்டது