எம். சி. வீரபாகு பிள்ளை
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
எம். சி. வீரபாகு பிள்ளை (M. C. Veerabahu Pillai) (19 மே 1903 – 15 ஏப்ரல் 1976) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். சிறந்த வழக்கறிஞர், வணிகர், அரசியல்வாதியான எம். சி. வீரபாகு பிள்ளை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக 1950 -1952 முடிய செயல்பட்டவர்.[1] இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனது கையெழுத்தை தமிழில் பதிவு செய்தவர்.[சான்று தேவை]
எம். சி. வீரபாகு பிள்ளை | |
---|---|
உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | |
பதவியில் 1950–1952 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | - |
பின்னவர் | - |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 மே 1903 தூத்துக்குடி |
இறப்பு | ஏப்ரல் 15, 1976 | (அகவை 72)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | சென்னை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர், வணிகர் & அரசியல்வாதி |
இந்தியப் பிரிவினைக்குப் பின், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை உறுப்பினராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.