எம். டி. வி. ஆச்சார்யா

எம். டி. வி. ஆச்சார்யா (M. T. V. Acharya)(பிறப்பு 1920 - இறப்பு 1992) ஒரு ஓவியர், வரைகலை நிபுணர் மற்றும் கலை பயிற்றுநர் ஆவார்.[1] பிரபலமான இந்திய குழந்தைகள் இதழான சந்தமாமா (அம்புலிமாமா) படைப்புகளினால் இவர் மிகவும் பிரபலமானார். இவர் சந்தமாமா என்ற இதழின் கன்னடப் பதிப்பில் பல ஓவியங்களை வரைந்து பிரபலமானவர். இவர் 1992 ஆம் ஆண்டு இறந்தார். இவரது இளமைக் கால வாழ்வில், மைசூர் தசரா கண்காட்சியில் பல ஓவியங்களை வரைந்து பல பரிசுகளைப் பெற்றவர். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் வானூர்தி நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது முதல் ஓவியக் கண்காட்சி சென்னையில் 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. குழந்தைகளுக்கான தமிழ் இதழான சந்தமாமாவில் 1947 ஆம் ஆண்டு சேர்ந்தார். பின்னர், இதன் கன்னடப் பதிப்பிற்கு ஆசிரியர் ஆனார். அந்த இதழின் அட்டைப் படங்கள் பலவற்றை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “தாய்நாடு” என்னும் கன்னட இதழுக்கு கலையாசிரியரானார். இவருடைய பெயரால் ஆச்சார்யா சித்திரகலா பவன் என்ற பெயரில் கலைப் பள்ளியொன்றைத் தொடங்கி, ஓவிய வகுப்புகள் நடத்தினார்.

எம். டி. வி. ஆச்சார்யா
பிறப்பு(1920-07-28)28 சூலை 1920
கர்நாடகா, இந்தியா இந்தியா
இறப்பு1992 (அகவை 71)
கருநாடக, இந்தியா
பணிஓவியர்

தனது மாணவர் நாட்களில், ஆச்சார்யா மைசூரு தசரா கண்காட்சியில் வரைந்த ஓவியத்திற்காக பரிசுகளை வென்றுள்ளார். ஆரம்பத்தில், பெங்களூரில் இந்துஸ்தான் விமானத்தில் பணிபுரிந்தார். இவரது முதல் ஓவிய கண்காட்சி 1945இல் சென்னையில் இருந்தது. 1947இல் தெலுங்கு குழந்தைகள் இதழான சந்தமாமாவில் சேர்ந்தார். பின்னர் அதன் கன்னட பதிப்பின் ஆசிரியரானார். சந்தமாமாவுக்கு பல அட்டைப் படங்களை வரைந்தார்.

ஆச்சார்யா 1963 மற்றும் 1965க்கு இடையில் கன்னட நாளேடான தாய் நாடுவின் கலை இயக்குநராக இருந்தார். பின்னர், பெங்களூரில் தனது சொந்த கலைப் பள்ளியை நிறுவினார். ஆச்சார்ய சித்ரகலா பவன் எனும் இவரது நிறுவனம், கடிதங்கள் மூலம் ஓவியம் குறித்த பாடங்களையும் பயிற்சியையும் வழங்கியது.[2]

நூலியல்

தொகு

சந்தாமாமா கலை புத்தகம், ஆச்சார்யா மற்றும் பிற சந்தமாமா கலைஞர்களின் கலைப்படைப்புகளின் தொகுப்பு. (*Chandamama Art Book)

மேற்கோள்கள்

தொகு
  1. Karnataka State Gazetteer: Mysore. Director of Print, Stationery and Publications at the Government Press. 1988. p. 718. {{cite book}}: |first= missing |last= (help)
  2. Ramakrishna, G. (1983). N. Gayathri; Debiprasad Chattopadhyaya (eds.). An encyclopaedia of South Indian culture. K.P. Bagchi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780836411881.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._வி._ஆச்சார்யா&oldid=3791725" இலிருந்து மீள்விக்கப்பட்டது